Monday, October 5, 2009

ரொமான்ஸ் தேசம்

நான் சும்மா இருந்தாலும்
உன் காதல் திசையை நோக்கி
நடக்க செய்யும் என் கால்களின்
அனிச்சை செயலை
என்னவென்று சொல்வது?






சுவர்களை உரசி நிற்காதே..
பார்......
அவைகளும் உன்னை நோக்கி
காதல் கடிதம் நீட்டுவதை..




உன் இதழ்களை பார்க்கையில்
இரும்புகளிலும் காதல் மலர்கிறது.
நான் மட்டும் எம்மாத்திரம்?



என் இதயத்தின் ஒரு பகுதியை
காணவில்லை என்று டாக்டர் சொன்னார்.
அவருக்கு எப்படி தெரியும்,
அந்த காணாமல் போன பகுதிதான்,
என்னுள் நீ நுழைய
நான் உனக்கு
கொடுத்திருக்கும் கடவுச்சீட்டு என்று...


சொர்க்கம் விண்ணில் இருக்கிறது என்று
எந்த பைத்தியக்காரன் சொன்னான்?




சிறு பறவையை கூட எனக்கு
அடைத்து வைக்க பிடிக்காது.
ஆனால் என் அணைப்பில் இருந்து என்றுமே
உனக்கு விடுதலை கிடையாது


நீ தடுமாறுகிறாயோ இல்லையோ,
உன்னால் தண்டவாளங்கள்
தடுமாறி தடம் மாறுகின்றன.
விபத்துகளுக்கு
உன்னை காரணம் காட்டப்போகிறதாம்
ரயில்வேதுறை....

11 comments:

nadhiya said...

// சிறு பறவையை கூட எனக்கு
அடைத்து வைக்க பிடிக்காது.
ஆனால் என் அணைப்பில் இருந்து என்றுமே
உனக்கு விடுதலை கிடையாது //

So Cute....

nadhiya said...

இந்த மாதம் கோகுலம் கதிர்'ல உங்களோட மூணு ஆர்ட்டிக்கல்ஸ் வந்திருக்காமே.. ஏன் அதைப்பத்தி நீங்க ஒண்ணுமே எழுதலை?

அபுஅஃப்ஸர் said...

கவிதைகளில் ரொமான்ஸ் மழை பொழியுது

அருமையா இருக்கு அனைத்து வரிகளும்

படங்களுக்கு கவிதையா இல்லை கவிதைக்கு படங்களா

Sen22 said...

Simply Superbbbb......

கவிதை காதலன் said...

அபுஅஃப்ஸர், Sen22 , இருவருக்கும் நன்றி

கவிதை காதலன் said...

நன்றி நதியா. கோகுலம் கதிர்ல வெளிவந்த என்னோட ஆர்ட்டிகளை நீங்க படிச்சிருக்க வாய்ப்பு இருக்காதுன்னு நினைக்குறேன். அதுல ஒண்ணு மட்டும்தான் பிளாக்ல நான் எழுதினது. மத்த இரண்டும் புத்தகத்துக்காகவே பிரத்யோகமா எழுதினது.

மின்சார கண்ணன் said...

**** சொர்க்கம் விண்ணில் இருக்கிறது என்று
எந்த பைத்தியக்காரன் சொன்னான்? ****


7 வார்த்தைகள்.. ஒண்ணே முக்கால் அடி.. மனசுக்குள்ள என்ன திருவள்ளுவர்ன்னு நினைப்பா?

ஆனா இந்த ரெண்டு வரிகள்ல செமையான் அர்த்தம் இருக்கு.. சூப்பரப்பு...

rahul said...

6வது கவிதை சூப்பர்...

cheena (சீனா) said...

அருமை அருமை - காதல் கவிதைகள் அருமை

நல்வாழ்த்துகள் கவிதை காதலன்

ஸ்வீட் ராஸ்கல் said...

மச்சி,
இவை காதல் கவிதை இல்ல,
அதுக்கும் மேல...

//சிறு பறவையை கூட எனக்கு
அடைத்து வைக்க பிடிக்காது.
ஆனால் என் அணைப்பில் இருந்து என்றுமே
உனக்கு விடுதலை கிடையாது//.

வாய்ப்பே இல்ல மச்சி.
இன்னும் நிறைய எழுது என்னை போன்ற உன் தீவிர ரசிகர்களுக்காக...

Asir said...

Super appu..

இதையும் படியுங்கள்