Friday, September 18, 2009

Choooooo. Chweeeeet காதல் கவிதைகள் - 2நேற்று பத்து நிமிடம்
தாமதமாய் வந்தேன் என்பதற்காக
நீ கொடுத்த இந்த தண்டனை
மிகக்கொடியது....
இப்போதாவது இந்த உலகம்
புரிந்து கொள்ளட்டும்
நீ எவ்வளவு பெரிய
கொடுமைக்காரி என்பதை.......

பூக்களிடம் சண்டையிட்டு
முட்கள் ஆனந்தமாய் தோற்கும்
அதிசய இடம் இதுஎனக்கெதிராய் நீ
கத்தி பிடித்தால் கூட பரவாயில்லை.
சமாளித்துவிடுவேன்.
ஆனால் கட்டிப்பிடித்தல் என்ற ஆயுதத்தை
வைத்துக்கொண்டு நிற்கிறாயே.
இனி என்ன செய்ய முடியும் என்னால்?


நீ சூடும் மலரில் அனைவருக்கும்
கலர் மட்டும்தான் தெரியும்.
எனக்கு மட்டும்தான்
அதில் காதல் தெரியும்.
விழி வழியே மட்டுமின்றி
விரல் வழியேயும்
காதல் மின்சாரத்தை கடத்தும்
அதிசய மின் கடத்தி நீ
நான் இறந்துவிட்டால்
என்னை அள்ளி எடுத்து உன்
கழுத்தின் இடையே புதைத்துக்கொள்..
உடனே உயிர் பெற்றுவிடுவேன்.

32 comments:

நிலாப்பெண் said...

//நான் இறந்துவிட்டால்
என்னை அள்ளி எடுத்து உன்
கழுத்தின் இடையே புதைத்துக்கொள்..
உடனே உயிர் பெற்றுவிடுவேன்.
//


வாவ்.. செமையா இருக்கு மணி ..

" உழவன் " " Uzhavan " said...

அத்தனையும் அருமை.

Arvind said...

உண்மையிலேயே நீங்க ஒரு கவிதை காதலன்ன்னு நிருபிச்சிட்டிங்க...

kishore said...

எப்பிடியா இந்த மாதிரி எல்லாம் எழுதரே? அதுவும் இந்த வயசுல? கேட்டா இன்னும் காதல் வரலைன்னு சொல்றீங்க? அனுபவிக்காம எல்லாம் இந்த மாதிரி எழுத முடியுமா? சரி சரி எவ்வளவோ நம்பறோம், இதை நம்ப மாட்டோமா?

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

வழிப்போக்கன் said...

நல்லா எழுதுறீங்க கவிதை கலக்கல்..

கவிதை காதலன் said...

நிலாப்பெண், வழிப்போக்கன், kishore ,வால்பையன், " உழவன் " " Uzhavan "
அனைவருக்கும் மிக்க நன்றி

கவிதை காதலன் said...

கிஷோர், எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி பப்ளிக்கா மாட்டி விடுறது நல்லாவா இருக்கு???
நான் சின்ன பையன் கிஷோர். நம்புங்க

மின்சார கண்ணன் said...

// நேற்று பத்து நிமிடம்
தாமதமாய் வந்தேன் என்பதற்காக
நீ கொடுத்த இந்த தண்டனை
மிகக்கொடியது....
இப்போதாவது இந்த உலகம்
புரிந்து கொள்ளட்டும்
நீ எவ்வளவு பெரிய
கொடுமைக்காரி என்பதை.......//


சின்னப் பையன் எழுதுற கவிதையா இது? காதுல பூ சுத்துங்க சார்.. பூக்கூடையை சுத்தாதீங்க...

நட்புடன் ஜமால் said...

போட்டு தாக்குங்க ...

nadhiya said...

நைஸ்.... வறுமை, பசி, போராட்டம், தோல்வி, மாதிரிதான் காதலும். சில உணர்வுகளை அனுபவிச்சு பார்த்தால்தான் தெரியும். உங்க கவிதைகளல்ல வழிகிற காதல் நிச்சயமா படிக்கிறவங்களையும் காதலிக்க தூண்டுது.. இதுல வர்ணனை அப்படிங்கிறதை தாண்டி ஒரு அழகுணர்ச்சி தெரியுது. அழகா இருக்கு மணி சார். ஆனா உங்களால இதையும் தாண்டி எழுதமுடியும்.

I Hope you Will understand.....

nadhiya said...

எங்க இருந்து இந்த மாதிரி ஃபோட்டோக்கள் எடுக்குறீங்க? அட்டகாசமா இருக்கு..

rahul said...

// எனக்கெதிராய் நீ
கத்தி பிடித்தால் கூட பரவாயில்லை.
சமாளித்துவிடுவேன்.
ஆனால் கட்டிப்பிடித்தல் என்ற ஆயுதத்தை
வைத்துக்கொண்டு நிற்கிறாயே.
இனி என்ன செய்ய முடியும் என்னால்?//


ரொம்ப டச் பண்ணிட்டிங்க... இதுல இருக்கிற அந்த ரொமான்ஸை எல்லாராலையும் புரிஞ்சுக்க முடியாது. கலக்கல் தல.

Anbu said...

நல்லா இருக்கு அண்ணா..

தூரிகை - Pandiyarajan said...

ரொம்ப நல்லா இருக்குங்க!!! புகைப்படத்திற்கு ஏற்ற கவிதைகள் !!!!!!!!

ArokiaRajParthiban said...

// நான் இறந்துவிட்டால்
என்னை அள்ளி எடுத்து உன்
கழுத்தின் இடையே புதைத்துக்கொள்..
உடனே உயிர் பெற்றுவிடுவேன்.//

மச்சி செமையா இருக்கு டா

கவிதை காதலன் said...

மின்சார கண்ணன்,தூரிகை - Pandiyarajan ,Anbu , rahul , nadhiya அனைவருக்கும் மிக்க நன்றி

கவிதை காதலன் said...

பார்த்தி உன் கமெண்டை எதிர் பார்க்கவே இல்லைடா .. ரொம்ப தேங்க்ஸ்டா மச்சி

pratap said...

மச்சி புகைப்படம் சூப்பர்....
நான் இறந்துவிட்டால்
என்னை அள்ளி எடுத்து உன்
கழுத்தின் இடையே புதைத்துக்கொள்..
உடனே உயிர் பெற்றுவிடுவேன்

மச்சான் கழுத்து வலிக்காது.

pratap said...

நீ சூடும் மலரில் அனைவருக்கும்
கலர் மட்டும்தான் தெரியும்.
எனக்கு மட்டும்தான்
அதில் காதல் தெரியும்.

உன் காதல் எனக்கு தெரியுமே..

pratap said...

உனக்கு காதல் வரலைனு கிஷோர் நம்பலாம், நான் நம்ப மாட்டேன்.
வாழ்க்கை ஒரு வட்டம் மச்சி.................

nadhiya said...

பிரதாப் சார்.. நீங்க மட்டுமா நம்பலை நாங்க கூடத்தான் நம்பலை. நானும் உங்க கட்சிதான்.

கவிதை காதலன் said...

//கன்னங்களை காட்டு.
கையெழுத்து போட்டிட வேண்டும்
ஈர உதடுகளால்..

துணியாய் இருப்பேன் இடையிலே...
துணையாய் இருப்பேன் நடையிலே...//

பிரதாப் சார்... இந்த வரிகள் தானே உங்க சந்தேகத்துக்கு காரணம்???...
எனக்கு தெரியும்..

கவிதை காதலன் said...

நதியா மேடம்.. வேணாம் விட்டுடுங்க. அப்புறம் நான் விஷ்ணுகிட்ட சொல்லிடுவேன்.

nadhiya said...

//கன்னங்களை காட்டு.
கையெழுத்து போட்டிட வேண்டும்
ஈர உதடுகளால்..

துணியாய் இருப்பேன் இடையிலே...
துணையாய் இருப்பேன் நடையிலே...//


ஹேய்.. உங்களுக்கும் இந்த பாட்டு பிடிக்குமா? வாவ். ரொம்ப அழகான பாட்டு. அதுல அந்த ஹீரோயினோட எக்ஸ்பிரஷன்ஸ் அருமையா இருக்கும். அதுவும் அவங்களுக்கு அந்த கண்கள் பெரிய ப்ளஸ். ஒரு இடத்துல மழை பெய்யும் போது ஹீரோவும் அவங்களும் உட்கார்ந்து இருப்பாங்க. அப்போ ஹீரோவோட ஃப்ரண்ட் ஹீரோவை இழுத்துகிட்டு போகும் போது அவங்க ஒரு ஸ்மைல் பண்ணுவாங்க. செம Cute'a இருக்கும். தனிமையில இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம், எதோ ஒரு இனம் புரியாத feel மனசுக்குள்ள வந்திடும். ரொம்ப அழகான பாட்டு. எனக்கு ஏனோ இந்த படத்துக்கு இந்த ஹீரோ சரியான சாய்ஸா படலை. வேற யாரவது ஒருத்தரை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

pratap said...

நதியா மேடம் இதெல்லாம் பழய பாட்டு, இப்பதான் அவருக்கு பாடல் வரியை கேட்குரராம். ஏன்னா இப்பத்தான் அவருக்கு காதல் வந்துருக்காம்.
நாங்கல்லாம் இதே நாலு மாசத்துக்கு முன்னாடியே கேட்டுட்டோம்.
அப்புறம் நதியா அந்த படத்துக்கு அந்த ஹீரோ தான் சரி. அங்கபோய் அஜித்தோ,விஜயோ போட்டா நல்லாருக்காது.

pratap said...

மணி அடுத்து என்னப்பா ?

சத்ரியன் said...

நீ சூடும் மலரில் அனைவருக்கும்
கலர் மட்டும்தான் தெரியும்.
எனக்கு மட்டும்தான்
அதில் காதல் தெரியும்.


கவிதைக் காதலா,

எனக்கும் தெரிகிறது, உங்கள் காதல்.
கலக்கறீங்கப்பா.

நமக்குதான் காதலும் அமையமாட்டேங்குது. கவிதையும் ...!

கவிதை காதலன் said...

பிரதாப் சார் ஏன் இந்த வேலை எல்லாம்?? நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?

கவிதை காதலன் said...

நன்றி சத்ரியன் சார்..

செந்தழல் ரவி said...

படங்களும் கவிதைகளும் எக்ஸலண்ட் !~

யாழினி said...

Choooooo. Chweeeeet....ரெம்ப நல்லாயிருக்கு உங்களின் காதல் கவிதைகள்!

இதையும் படியுங்கள்