Monday, September 7, 2009

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்


ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)


10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

17 comments:

Anbu said...

இனிமேல் இந்த விஷயத்தை எல்லாம் கடைபிடிக்கிறேன்..

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

D.R.Ashok said...

நல்லாயிருக்கு.. காமெடியும் கலந்து கலக்கிட்டீங்க... காதலிக்க ஆசைதான் ஆனா எனக்குத்தான் ஒரு தடவை கல்யாணம் ஆயிருச்சே.. oh my god

கிறுக்கன் said...

கடைசி விஷயம் கஷ்டம்

TAMILEELAM said...
This comment has been removed by the author.
TAMILEELAM said...

வாழ்கேலறொம்ப அடி வாங்கி இருக்கீங்க போல இருக்கு
WWW.VANNITODAY.CO.CC

அனுமாலிகா said...

இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு. பாவம்பா பொண்ணுங்க எல்லாம். வேணாம்.. அழுதுடுவோம்.. விட்டுடுங்க..

Arvind said...

// அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. //

தல... கலக்கிடிங்க... செம பாயின்ட்

சங்கர் said...

ரொம்ப காமெடியா கலக்கீட்டீங்க...!!

aarthi said...

டேய்.. இதெல்லாம் கொஞ்சம் இல்லை. ரொம்பவே ஓவரா இருக்குடா...

nadhiya said...

// அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். //

//"நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும்.//

எப்படி இந்த மாதிரி எல்லாம் உங்களால யோசிக்க முடியுது? முடியலை மணி சார்

//" இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்".//


என்கிட்டே எத்தனை வாட்டி இந்த மாதிரி சொல்லி இருப்பீங்க. அது எல்லாமே உடான்ஸ் தானா? உங்களுக்கு எல்லாம் விஷ்ணுதான் கரெக்ட்..

விஷ்ணு சார்.. எங்களை காப்பாத்துங்க..

nadhiya said...

ரொம்ப நல்லா இருக்கு.. ஆனா இப்ப எல்லாம் ஏன் ஒரு போஸ்ட் போடுறதுக்கு ரொம்ப டைம் எடுத்ததுக்குறீங்க? ஏன் படம் விமர்சனமே எதுவும் எழுதலை?
சார் ரொம்ப பிசியா? (இன்னும் ரெண்டு நாளைக்கு நான் சென்னையில்தான் இருப்பேன்)

sallu said...

its something tooo much.... no one creates such scene in front of any girl... nowadays girls never expect all these oly boys do... So its kinda old idea...

Anonymous said...

இப்போ பொய் சொன்னா, கல்யாணத்துக்கு அப்புறம் கருத்து மாறுபாடு வரும்.

ஊர்சுற்றி said...

ஐயோ ஐயோ..... அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்களே! நல்ல அனுபவமோ!

நீங்க சொல்லியிருக்கிறது அத்தனையும் அக்மார்க் விசயங்கள். மிகவும் அருமை.

8ம் 10ம் ரொம்ப டாப்புங்கோ!!!! :)))

Anonymous said...

நலம்...
இத வேற எங்கேயோ படித்திருக்கிறேனே.....!!!!!!!!

gowri said...

dai ne matum en kaila matuna setha name la love nu vechutu girls ah romba kalaikaraya unaku love ah set aga kodathu apdi analum ava una kandipa kalti vitruva paru...

இதையும் படியுங்கள்