Friday, September 18, 2009

Choooooo. Chweeeeet காதல் கவிதைகள் - 2நேற்று பத்து நிமிடம்
தாமதமாய் வந்தேன் என்பதற்காக
நீ கொடுத்த இந்த தண்டனை
மிகக்கொடியது....
இப்போதாவது இந்த உலகம்
புரிந்து கொள்ளட்டும்
நீ எவ்வளவு பெரிய
கொடுமைக்காரி என்பதை.......

பூக்களிடம் சண்டையிட்டு
முட்கள் ஆனந்தமாய் தோற்கும்
அதிசய இடம் இதுஎனக்கெதிராய் நீ
கத்தி பிடித்தால் கூட பரவாயில்லை.
சமாளித்துவிடுவேன்.
ஆனால் கட்டிப்பிடித்தல் என்ற ஆயுதத்தை
வைத்துக்கொண்டு நிற்கிறாயே.
இனி என்ன செய்ய முடியும் என்னால்?


நீ சூடும் மலரில் அனைவருக்கும்
கலர் மட்டும்தான் தெரியும்.
எனக்கு மட்டும்தான்
அதில் காதல் தெரியும்.
விழி வழியே மட்டுமின்றி
விரல் வழியேயும்
காதல் மின்சாரத்தை கடத்தும்
அதிசய மின் கடத்தி நீ
நான் இறந்துவிட்டால்
என்னை அள்ளி எடுத்து உன்
கழுத்தின் இடையே புதைத்துக்கொள்..
உடனே உயிர் பெற்றுவிடுவேன்.

Tuesday, September 15, 2009

அட்டகாசமான காமெடி

சமீபத்தில் "You-Tube"ல் உலவிக் கொண்டிருந்த போது, "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியின் ஃபைனல்ஸ் பார்க்க நேர்ந்தது. அதில் ஆதவன் உண்மையிலேயே கலக்கி எடுத்து இருந்தார். அட்டகாசமாக இருந்தது. இதில் குறிப்பாக வைரமுத்து போலவும், அதற்கு பாக்யராஜ் கொடுப்பது போல் வரும் ரியாக்ஷனும் வெகு அருமை. அந்த காமெடியை விட உமா ரியாஸ் அதற்கு விழுந்து விழுந்து சிரிப்பது ஹைலைட். அந்த வீடியோவை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். பார்த்து சிரியுங்கள்...இந்தக் காமெடி உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் பின்னூட்டமிடவும்.

Wednesday, September 9, 2009

கோகுலம் கதிரில் எனது பதிவு

சமீபத்தில் நான் எழுதிய
தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்ற பதிவும்
காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் கேள்விகள் என்ற பதிவும்
தினத்தந்தி கோகுலம் கதிர் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த இரண்டாவது பதிவை யூத்ஃபுல் விகடனில் வெளியிட்ட விகடன் குழுமத்திற்கும் எனது நன்றிகள்


ஆதரவளித்த அத்தனை ரசிகர்களுக்கும், தினத்தந்தி குழுவிற்கும் எனது நன்றிகள்

Monday, September 7, 2009

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்


ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)


10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

இதையும் படியுங்கள்