Friday, August 21, 2009

Choooo. Chweeeeet காதல் கவிதைகள்

"கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை"
என்ற பாடலை கேட்கையில் சிரித்து கொள்வேன்.
அது எப்படி கற்கள் காலுக்கு மெத்தையாகும் என்று?..
உன்னுடன் ரயில்வே தண்டவாளத்தில்
நடந்து செல்கையில்தான் அந்த பாடல்
எந்த அளவிற்கு உண்மை என்று உணர்கிறேன்....



தயவு செய்து இவ்வளவு அருகில்
என்னிடம் வராதே. அப்புறம்
"ச்சீ.. போடா... நீ ரொம்ப கெட்ட பையன்" என்று
நீ என்னை திட்டினால்
அதற்கு நான் பொறுப்பல்ல....



நான் உனக்கு
என்ன பரிசு கொடுத்தாலும்
அது அத்தனையிலும்
என் காதல் மட்டுமே நிரம்பி இருக்கும்


எப்போதோ வெட்டி எடுக்கப்பட்ட
மரத்துண்டிலிருந்தும் பூக்கள் பூக்கிறது,
நீ அதை கட்டிப் பிடித்து நிற்கையில்....


நீ எனக்கு கொடுக்கும் பறக்கும் முத்தத்தில்
கலந்திருக்கும் காற்றை மட்டுமல்ல
காதலையும் என்னால் மட்டுமே
உணர முடியும்.


என்னை கட்டிப்பிடித்து நடக்கும் போது
ஏன் தள்ளாடுகிறாய்? என்று கேட்கிறாய்.
நீ என்றைக்காவாது மது அருந்தி, நடந்து பார்...
பிறகு தெரியும்.


யார் உன்னை காயப்படுத்தினாலும்
உன் கண்ணில் இருந்து கண்ணீர்தான் வழியும்.
ஆனால் நான் உன்னை
சிறிதாக காயப்படுத்தினாலும்
உன் இதயத்திலிருந்து ரத்தமே வழிகிறதே..
அட... அந்த அளவிற்கா என்னை காதலிக்கிறாய்?

17 comments:

Sachanaa said...

superbbbbbbbbbbbbb..........

அனுமாலிகா said...

//யார் உன்னை காயப்படுத்தினாலும்
உன் கண்ணில் இருந்து கண்ணீர்தான் வழியும்.
ஆனால் நான் உன்னை
சிறிதாக காயப்படுத்தினாலும்
உன் இதயத்திலிருந்து ரத்தமே வழிகிறதே..
அட... அந்த அளவிற்கா என்னை காதலிக்கிறாய்? //

வாவ்.. அட்டகாசமான கவிதை.. செமையான லைன்ஸ்.. கலக்கிட்டீங்க மணி.

கவிப்ரியன் said...

கவிதைக்கு புகைப்படங்களா? இல்ல புகைப்படங்களுக்கு கவிதையா? ரெண்டுமே அவ்ளோ பெர்பெக்ட் match'a இருக்கு. சூப்பர் கவிதைகள். வாழ்த்துக்கள்

டோரா said...
This comment has been removed by the author.
டோரா said...

// யார் உன்னை காயப்படுத்தினாலும்
உன் கண்ணில் இருந்து கண்ணீர்தான் வழியும்.
ஆனால் நான் உன்னை
சிறிதாக காயப்படுத்தினாலும்
உன் இதயத்திலிருந்து ரத்தமே வழிகிறதே..
அட... அந்த அளவிற்கா என்னை காதலிக்கிறாய்? //


இந்த கவிதை செமையா இருக்கு. அந்த Picture... அட்டகாசம்..

Anbu said...

சூப்பர்..சூப்பர்..கவிதைகள் அருமை..புகைப்படமும் அருமை

கும்மாச்சி said...

கவிதைகளும் படங்களும் அருமை/

கவிதை காதலன் said...

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அஞ்சனா, அனுமாலிகா, டோரா, அன்பு, கவிப்பிரியன், கும்மாச்சி அனைவருக்கும் நன்றிகள்

தமிழ் காதலன் said...

//"கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை"
என்ற பாடலை கேட்கையில் சிரித்து கொள்வேன்.
அது எப்படி கற்கள் காலுக்கு மெத்தையாகும் என்று?..
உன்னுடன் ரயில்வே தண்டவாளத்தில்
நடந்து செல்கையில்தான் அந்த பாடல்
எந்த அளவிற்கு உண்மை என்று உணர்கிறேன்....


//


அருமை,ஆனால் புகைப்படத்தில் காலணி இல்லாமல் தேர்தெடுத்திருக்கலாம்.

Anonymous said...

ROMBA NALL KAVITHAI....
THODARNTHU EZHUTHNGA....

ஊர்சுற்றி said...

ஆமாங்க, புகைப்படங்கள்தான் சற்று பொருந்தவில்லை போல் தோன்றுகிறது.

கவிதைகள் நன்று.

pratap said...

புகைப்படம் நல்லாயிருக்கு.

pratap said...

படம் zedge.com தானே

pratap said...

super da... i love you da,

கவிதை காதலன் said...

தேங்க்யூ பிரதாப்... Zedge.com க்கும், உங்களுக்கும்....

nadhiya said...
This comment has been removed by the author.
nadhiya said...

வாவ்.. ரொம்ப நல்லா இருக்கு.. எனக்கு அந்த கடைசி கவிதை ரொம்ப பிடிச்சு இருக்கு. எப்பவுமே கொஞ்சம் பெருசா எழுதுவீங்க. இந்த வாட்டி என்ன குட்டி குட்டி கவிதைகள்? ஆனா அழகா இருக்கு... பெருசா எழுதும் போது, என்னால அதுக்குள்ளேயே போய் உணர முடிஞ்சுது. அதுக்காக இது பிடிக்கலைன்னு அர்த்தம் இல்லை. இதைவிட அந்தக் கவிதைகள் ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு. ப்ளீஸ் அதிக டைம் எடுத்துக்காம அடுத்த போஸ்டை போடுங்க. (கொஞ்ச வேலைகள் இருந்ததால்தான் உடனே கமெண்ட் போட முடியலை. தப்பா எடுத்துக்க வேணாம்)

இதையும் படியுங்கள்