Wednesday, July 29, 2009

என் இதயத்தில் மலர்ந்த நட்"பூக்கள்"


என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....

நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...

வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்..

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்..

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...

என் இதயத்தின் அத்தனை
அறைகளிலும் நிறைந்து இருக்கும்
என் நண்பர்கள் அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

Happy Friendship Day

32 comments:

நலம் விரும்பி said...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்

really superb men, wonderful lines, I WISH YOU the same friend

கலையரசன் said...

கவிதை படிக்க மட்டுமே தெரியும், எழுத முயன்று தோற்று இருகிறேன்!

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்களும் இனி என் நண்பரே!

வாழ்த்துகள் நண்பா..

கவிதை காதலன் said...

மிக்க நன்றி கலையரசன்

அபுஅஃப்ஸர் said...

//நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..//


நிச்ச‌ய‌மா த‌ர‌ப்ப‌டாத‌ வ‌ர‌மே...

ஒவ்வொரு விட‌ய‌த்தையும் அருமையா சொல்லிருக்கீங்க‌ ந‌ண்பா

எப்போதோ ஒன்றாக‌ எடுத்த‌ போட்டோவை பார்க்கும்போது க‌ண்க‌ளில் க‌ண்ணீர் உண்மையே, இப்போது விலையுர்ந்த‌ காரில் போனாலும் அந்த‌ சைக்கிலை த‌ள்ளிக்கிட்டு போன‌ கால‌ம் கிடைக்குமா...

என்னுடையை வாழ்த்தையும் சொல்லிக்கிறேன் ந‌ண்பா..

James said...

//கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...//

அட்டகாசமான வரிகள் நண்பரே... இத்தனி வாட்டி நீங்க எழுதுன கவிதைகல்லியே இந்த கவிதைதான் டாப்... ரொம்ப டச்சிங்கா இருக்கு... உங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

எவனோ ஒருவன் said...

//கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....//

இது எல்லாமே நானும் அனுபவிச்ச விஷயங்கள். so touching.... வாழ்த்துக்கள்

Arvind said...

என்னோட பழைய பள்ளி நினைவுகளை எல்லாம் துஉண்டி விட்டுட்டீங்க... இன்னைக்கு கால அவசரத்துல பணம் சம்பாதிக்குற அவசரத்துல என்னோட நண்பர்களை நான் தொலைச்சது நினைச்சு இப்போ வறுத்த படுகிறேன்... என்ன பிரயோஜனம்? கண் கேட்ட பிறகு சுஉரிய நமஸ்காரம்.... இப்போ என்கிட்டே நிறைய டைம் இருக்கு.. நல்ல வேலை இருக்கு.. ஆனா சொல்லிக்க உண்மையான நண்பன் இல்லை சார். நிறைய தப்பு பண்ணிட்டேன்..

rahul said...

//பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.//

வாவ்... செம லைன்ஸ்...நிறைய யோஸிக்க வெச்ச வரிகள் ... ரொம்ப சுஉப்பரா இருக்கு... நபர்கள் தின வாழ்த்துக்கள்

p said...

azugai varuthu superbbbb

Thirumathi Jaya Seelan said...

என் பள்ளிப் பருவத்துக்கே என்னை சுற்றுலா போகவ்ச்சிட்டீங்க,எதாற்தமான வரிகள்.

nadhiya said...

(எப்பவுமே உங்களை மணி சார்'ன்னு கூப்பிடுவேன். ஆனா With your Permission இந்த ஒரு வாட்டி உங்களை மணி'ன்னு கூப்பிட Allow பண்ணனும்).... மணி என்ன சொல்றதுன்னே தெரியலைடா.. ரொம்ப யதார்த்தமா இருந்துச்சு. இதை படிக்கும் போது ஒரு அழகான மயிலிறகு மனசை வருடிக்கொடுக்கிற மாதிரி ஒரு Feeling இருந்துச்சு. எத்தனை வருஷம் கழிச்சு நினச்சு பார்த்தாலும் மனசுல பசுமையா இருக்க கூடியது நட்போட நினைவுகள்தான். என் Friends கூட மொட்டை மாடியில அரட்டை அடிச்சுகிட்டுகிட்டு இருந்த நிமிஷங்கள், Electric Train'la நாள் கணக்குல சுத்திகிட்டு இருந்தது, காலையில ஜாகிங்'ல நாங்க பேசக்கூடிய வெட்டி பேச்சுகள், தியேட்டர் குறும்புகள், இப்படி எவ்வளவோ சந்தோஷமான தருணங்கள். என்னை பொருத்தவரைக்கும் நான் என் நண்பர்களோட ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கேன். இப்படி அருமையான நண்பர்களை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி. அதைவிட முக்கியமா என் வாழ்க்கையில எல்லா சந்தர்ப்பங்கள்ளேயும் எனக்கு பக்க பலமா இருந்த என்னோட எல்லா நண்பர்களுக்கும் என்னோட இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

nadhiya said...

Parents வீட்டுல இல்லாதப்போ Friends'ங்களோட சேர்ந்து செஞ்ச கலாட்டா, சைக்கிள்ல ஒண்ணா டபுள்ஸ் வந்தது, நண்பர்கள் கிட்ட இருந்து கிரீட்டிங் கார்ட் வரும் போது இருக்கிற சந்தோஷம் எல்லாமே பொய் கலப்பில்லாத உண்மைகள். இந்த கவிதைகள்'ல இருக்கிற எல்லா வரிகளுமே மனசுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு. 16 வருஷம் என் கூடவே பழகின என் திவ்யா, லைஃப்ல சில நல்ல விஷயங்கள் செய்யுறதுக்கு முன்னோடியா இருந்த மணி, பார்க்கவே இல்லைன்னாலும் மனசுக்குள்ள ரொம்ப ஆழமா இருக்கிற விஷ்ணு, உலகத்தை விட்டு போனாலும் மனசை விட்டு என்னைக்கும் போகாத வசுமதி, குடும்பத்துக்காக தன்னோட படிப்பை இழந்த கீர்த்தனா, ஆர்த்தி, சந்தியா, ஹில்டா, சந்தியா, ஜெனி, ரம்யா, சோஃபியா, அர்ஜுன், கார்த்திக், வசுந்தரா, மேக்னா, ஆனி, ஐஸ்வர்யா, நித்யா, பிரியங்கா, என்னோட அத்தனை நண்பர்களுக்கும் என்னோட நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

டோரா said...

//வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,//

அப்படியே நாங்க அனுபவிச்ச விஷயங்கள்.

கவிப்ரியன் said...

உங்களோட இந்த கவிதை, தமிழீழ்ல பிரபல பதிவுல இருந்து முன்னணி பதிவுக்கு வந்திடுச்சு.. வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

அபுஅஃப்ஸர், எவனோ ஒருவன்,Arvind ,rahul , Thirumathi Jaya Seelan, nadhiya , டோரா, கவிப்ரியன்
உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி...

nadhiya said...

மணி சார் உங்களோட viewrs list count தப்பா காட்டுதுன்னு நினைக்குறேன்.. அந்த HTML page'la "add" அப்படின்னு இருக்கிறதுக்கு பக்கத்துல "new" அப்படின்னு டைப் பண்ணிக்குங்க. Caps use பண்ணாதீங்க.. அதேமாதிரி Count அப்படிங்கிறதுக்கு பக்கத்துல "all" அப்படின்னு டைப் பண்ணிக்குங்க... Thanks

Budthu said...

உலகத்தில் உள்ள எதை உண்டாலும், அனுபவித்தாலும் ஒரு நேரத்தில் அது திகட்டிவிடும், ஆனால் நட்பு மட்டும் தான் எப்பொழுதும் திகட்டாத ஒன்று. "நட்பு" என்பதே உலகத்தில் மிகவும் அருமையான ஒன்று, என்னத்தான் அதற்கு உருவகங்கள் கொடுத்தாலும் இடாகாது, "நட்பு" "நண்பன்" இதைவிட வேற எந்த வார்த்தை உலகத்தில் இந்த அளவுக்கு இனிக்கும்?????

பொதுவாக காதலிபவர்களை, காதல்னா என்னானு கேட்ட எதோ ஒருவித இது னு சொல்லுவாங்க (காதலிபவர்கள் மன்னிக்கவும்) ஆனா தனக்கு வரபோற மனைவிக்காக / கணவனுக்காக முன்னாடியே காட்டபடுகிற அன்பு தான் அந்த "இது", உலகத்தில் உள்ள எல்லா உறவுகளில், எதற்காக இந்த உறவு என்று விவரிக்க முடியாத ஒன்று "நட்பு" மட்டும் தான். நட்புக்கு நல்ல உதாரணம் "நாடோடிகள்" திரைப்படம், கருணாவின் நண்பனுக்காக பாண்டியும், விஜயும்(மன்னிக்கவும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மறந்து விட்டது ) இழந்தது நட்பின் ஆழத்தை எடுத்து காட்டுகிறது, எல்லா அன்புகளும் ஒருவித கட்டுபாட்டோடு தான் காட்ட படுகிறது, ஆனால் நட்பு மட்டும் தான் எதையும் எதிர்பார்க்காமல் எதை வேண்டுமானாலும் செய்யும், தன் நண்பன் தன்னை எவள்ளவு அசிங்க படுத்தினாலும், அந்த நண்பனுக்கு ஏதாவது ஒன்று என்றால் ( நல்லதோ/கேட்டதோ ) முதலில் நிற்பது நண்பர்கள் மட்டும் தான்.

இப்படி நட்பை பற்றி பேசிக்கொண்டே போகலாம் அது ஒரு முடிவிலி(infinity), எல்லாருக்கும் தெரிந்த ஒன்றை திரும்பவும் எதற்கு எழுதினேன்னு பார்க்கலாம், "போலியான காதல்", "சுயநல அன்பு" போல நட்பிலும் சில "பட்சோந்திகள்" நட்பை கலங்க படுத்தி கொண்டு இருகிறார்கள், அவர்களுக்காக தான், நீங்கள் பொய்யாக நட்பு வைத்துளிர்கள் என்று தெரிந்தால் நட்பும் நண்பனும் எவள்ளவு கஷ்டபடுவார்கள் தெரியுமா???

இருந்தாலும் உங்களுக்கு ஏதாவதுனா அந்த நட்பும் நண்பனும் தான் வருவார்கள்.

என்னுடைய நண்பர்களின் நட்பை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை, சொல்லவும் வார்த்தையும் இல்லை. மணி உன்னுடைய படைப்புக்கு தலை வணங்குகிறேன்!!!!!!!!!!!!!!!!

"அனைவர்க்கும் என்னுடைய இனிய நண்பர்கள்தின வாழ்த்துகள்"

என்னுடைய கருத்துகளில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.....

நட்புடன் நண்பன்.

Budthu said...

போன ஜென்மத்தில் ரொம்ப புண்ணியம் பண்ணவன் நான், அதனால் தான் என்னகு எனது இரு(மணி,விஷ்ணு) நண்பர்களை அந்த கடவுள் இந்த ஜென்மத்தில் கொடுத்துள்ளார்.

கவிப்ரியன் said...

//சில "பட்சோந்திகள்" நட்பை கலங்க படுத்தி கொண்டு இருகிறார்கள்//

கரெக்ட்டா சொன்னீங்க மிஸ்டர் Budthu..
அதுவும் இந்த பொம்பளை புள்ளங்க இருக்குதுங்களே.. அதுங்க நட்புங்கிற பேர்ல பண்ற ஃ பிராடு இருக்குதுங்களே, அதுக்கு இணையா வேற எதையும் சொல்ல முடியாது. தோள் கொடுப்பான் தோழன் அப்படின்னுதான் சொல்லி இருக்கே தவிர தோழினு சொல்லலை. பச்சூந்திகள்ன்னு நீங்க சொன்னது நிச்சயமா பொண்ணுங்களைத்தான்னு எனக்கு தெரியும்

nadhiya said...

மிஸ்டர் கவிப்ரியன்.. மன்னிக்கணும்.. ஆண் நண்பர்கள்தான் கடைசி வரைக்கும் வருவாங்க. "தோள் கொடுப்பான் தோழன்" அப்படின்னு சொன்னீங்க.. ஒத்துக்குறேன். ஆனா ஒரு விஷயம். நட்புல நிச்சயமா ஆண் பெண் வேறுபாடு கிடையாதுன்னு நினைக்குறேன். நட்புக்கு முன்னாடி ரெண்டு பேருமே சமம்தான். உங்களுக்கு ஏற்பட்ட ஏதோ சில கசப்பான அனுபவங்களை வெச்சி ஒட்டு மொத்த பெண்களையும் பேசறது நாகரீகமா இல்லை. தான் மனசு வெச்சா தன் நண்பனோட ஒரு படைப்பு வேற ஒரு உலக மொழியில வெளிவரும் அப்படிங்கிறது தெரிஞ்சும் அதைப்பத்தி எந்த வித அக்கறையும் எடுத்துக்காத ஒரு ஆண் நண்பனையும் நான் பார்த்திருக்கேன். தான் கூப்பிட்டு சினிமாவுக்கு வரலைங்கிறதுக்காகவே தன் நண்பனோட வேலையவே பறிச்ச ஒரு "ப்ரிய"மான பெண் தோழியையும் நான் பார்த்திருக்கேன். So, ஒரு பக்கமாவே பேசாதீங்க.

Budthu said...

கவிபிரியன் சார் நான் பொதுவா சொன்னேன், பெண்களை குறிப்பிட வில்லை, இந்த காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு இணையாக நட்புடன் இருக்கின்றனர்.

so நட்பில் ஆண் பெண் என்ற பாகு படு இல்லை, நான் "பட்சோந்திகள்" என்று சொன்னது என்னுடைய அனுபவத்தில் ஒரு ஆண் நண்பனை பற்றி தான் கவிபிரியன், அது மட்டும் இல்லாமல் சொல்ல கேட்டு நெறைய...

தென்றல் said...

என்னடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன்.. கனகராஜ் கடுப்பானாரு..... கடலே வத்திடும்...
அந்த அளவுக்கு கடும் கோபக்காரறு... புரிஞ்சுக்குங்க கவிப்பிரியன்

Budthu said...

தென்றல் மேடம் என்னை பத்தின உங்களுடைய கணிப்பு தவறானது, லேசுல என்னகு கோபம் வராது மேடம்.

கவிப்ரியன் உங்க மேல என்னகு எந்த கோபமும் கிடையாது, நீங்க உங்க கருத்துகளை சொன்னிங்க, இந்த சுதந்திர இந்தியாவில் யார்வேண்டுமானாலும் அவரவர் கருத்துகளை தெரிவிக்கலாம். உதாரணத்துக்கு தென்றல் மேடம் என்னை கடும் கோபக்காரறு னு சொன்னாங்க, என்னை இதுவரை நேரில் பார்த்து இல்லை, பேசியதும் இல்லை, ஆனால் என்னகு அந்த சான்றிதழ் கொடுத்துள்ளார், என்னுடன் உண்மையாய் பழகியவர்களுக்கு என்னை பற்றி நன்றாகவே தெரியும், என்னை பற்றி அவரின் கருத்து தவறாக இருப்பதால் நான் அவர்கள் மீது கோப படமுடியாது, அது அவர்களின் சொந்த கருத்து.

உலகத்தில் யாருமே எல்லாருக்கும் நல்லவங்கள இருக்க முடியாது, ஒரு பிரச்னை ல தப்பு செய்யாதவருக்கு சப்போர்ட் பண்ண, நீங்கள் தப்பு பன்னவருக்கு கேட்டவர்கள் தான்.

ஆகவே நீங்க நல்லவர்களாக இருந்தால் கண்டிபா உங்களை வேறுபவர்களும் இருப்பார்கள்.

இது தான் உலகம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தென்றல் said...

ஒத்துக்குறேன்.. நீங்க ஒரு சாந்த சொருபீ, ஆம்பளை அன்னை தெரேசா, பொறுமையின் சிகரம், அப்படிங்கிறதை ஒத்துக்குறேன்...
(உங்களுக்கு கோவமே வராதுங்கிரத்தை மட்டும் கொஞ்சம் கோவப்படாம சொல்லுங்க)
Next Meet பண்றேன்..
வரட்டா தல.....

Budthu said...

நன்றி...

தென்றல் said...

கை தட்டுங்கப்பா.....

R. Ramya said...

மணி ரொம்ப நல்ல இருந்துச்சு.. Nice Poem..

//காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.//

சந்துல சிந்து பாடுற மாதிரி நடுவுல நைசா உங்க காதலை பத்தியும் சொல்லிட்டீங்களே...
உங்க காதல் நதி வர்றாம பாய என்னோட வாழ்த்துக்கள்..

கவிதை காதலன் said...

Budthu, nadhiya, தென்றல் , R. Ramya ,
அனைவருக்கும் நன்றி

pr2rpg said...

மணி,கனகு,விஷ்ணு,நதியா மற்றும் இங்குள்ள அனனத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின நல வாழ்த்துக்கள்.

nadhiya said...

Hi pr2rpg, தப்பா நினைச்சுக்காதீங்க.. எனக்கு நீங்க யாருன்னு தெரியலை..(ஐடி'யில உங்க பேரை யூஸ் பண்ணலாமே) ஆனா நிச்சயமா மணிக்கும் விஷ்ணுவுக்கும் ஃ பிரண்டா இருப்பீங்கன்னு நினைக்குறேன். Anyway Thanks for your wishes.... உங்களுக்கும் என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

Anonymous said...

Hello Sir... its been so long i haven't visited ur blog...
Amazing very happy to see many posts dis was d first post which i noticed..

It took me to my school life back...

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்..

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்..
i've enjoyed such things... No words to express its just amazing... Keep it up sir... All the very best for ur upcomings..

But Still am expecting something from yu abt friendships.. a true loving friendship btwn two ppl...

கவிதை காதலன் said...

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி சல்மா... நிச்சயமா நீங்க எதிர்பார்க்குற நட்பு பற்றிய கவிதைகள் நிறைய வரும். உங்களுக்கும் என்னுடைய நண்பர்கள்தின வாழ்த்துக்கள். Thank You.

இதையும் படியுங்கள்