Thursday, July 9, 2009

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?

7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.

57 comments:

uyir said...

super da thambi :-)

Anonymous said...

//அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. //

உண்மை ...உண்மை.. 100 க்கு 100 உண்மையான வார்த்தை.. ஏன் சார் பொண்ணுங்க எதை கேட்டாலும் சிரிச்சுகிட்டே இருக்காங்க?

பாசகி said...

பிரமாதம் :)

Anonymous said...

:) :) :)

durai said...

8th matter super sir

sathya said...

யாருங்க சொன்னது பொண்ணுங்க மனசு புரிஞ்சிக்க முடியாதுன்னு . இதோ எவ்ளோ அழகா புரிஞ்சிருக்கார்.வெரி சூப்பர்

நலம் விரும்பி said...
This comment has been removed by the author.
நலம் விரும்பி said...

it is reallly superb

பொண்ணுக பாவம் மணி தம்பி அவங்கள விட்டுடு ? என் அவங்கள பாடாபடுத்திறீங்க? உங்களுக்கு நியாமா தம்பி? ஏன கொலைவெறியோடு அலையரிங்க ?

ஆளவந்தான் said...

ஆண்கள் சார்பா உங்களுக்கு ஒரு பெரிய பூங்கொத்து. நாங்க மனசுல என்ன நினைச்சிருக்கொமோ அதை அப்படியே புட்டு புட்டு வெச்சிருக்க தலைவா.. அதுவும் அந்த மிஸ்டுகால் மேட்டர்... அய்யய்யோ தாங்க முடியலைடா சாமி இந்த பொண்ணுங்களோட மிஸ்டுகால் டார்ச்சர்.

aarthi said...

யோவ் நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க மனசுல? எப்ப பார்த்தாலும் பொண்ணுங்களை போட்டுக்குடுக்குறதே உனக்கு வேலையா போச்சு. இரு இரு... எல்லா பொண்ணுங்களையும் உனக்கு எதிரா திரட்டி போராட்டம் நடத்தினாத்தான்நீ அடங்குவ போல

செந்தழல் ரவி said...

இயல்பான எழுத்து...ரொம்பவே ரசிச்சேன்....ஓட்டும் போட்டுட்டேன்...

Mohan said...

ஏங்க கவிதை காதலன்! உண்மையை சொல்லுங்கள்! அனுபவித்து/அனுபவத்தை தானே எழுதி இருக்கிறீர்கள்? கலக்கலாக இருக்கிறது

அனுமாலிகா said...

ஏன் ஏன் உங்களுக்கு இந்த வேலை? மணி சார்//// நாங்க எல்லாம் பாவம்.

எவனோ ஒருவன் said...

//இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம்.//

கரெக்ட்டா சொன்னீங்க சார்.. சுடிதார் வாங்கி கொடுத்தே என் பேங்க் பேலன்ஸ் கரைஞ்சதுதான் மிச்சம். அதே மாதிரி செல் ரீ சார்ஜ் பண்ணி என் சார்ஜ் போனதுதான் மிச்சம். சுப்பர் சார்..

தென்றல் said...

இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.
குத்துங்க எசமான் குத்துங்க

Anonymous said...

க கா,
பலபேர் ஆதங்கத்த மொத்தமா கொட்டிருக்கீங்க, (யோசிச்சு எழுதுனா மாதிரி தெரியலையே)... இத படிச்சுட்டு எவனாவது எச்சு பேசி சுண்ணாம்பு வெச்சுக்காம இருந்த சரி தான்...
சரிக்கு சமமா சம்பாரிக்கற இந்த காலத்துலயும் பிசினாரித்தனமா மிஸ்ட் கால் குடுக்க தாய் குலங்கலால மட்டுமே முடியும்.. (அதுக்குன்னு ரோசபட்டு எவனும் திரும்ப கால் பண்ணாமையும் போகறதில்ல)

பாலா

பாலா said...

ungalukku koyil kattanum saami

DG said...

சொந்த அனுபவமா பாஸ்?

Mohamed Rafudeen said...

really nice sir ur posting. thanks to u by rafic, dubai

jothi said...

chance illa, kalakkal

gulf-tamilan said...

நன்றாக இருந்தது !!!

நசரேயன் said...

கலக்கல்

Spice said...

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க
No Chance..Thaliva. Keep Posted like this..

LawrencE said...

எல்லா pointலயும், finishing touch சூப்பர்...

Anonymous said...

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.//

குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுறீங்களே...எப்பூடி?

Anonymous said...

அருமை பாஸு... சொந்த அனுபவம் இல்லேன்னா இது போல எழுத முடியாது. என்ன சொல்லுறீங்க?

கவிதை காதலன் said...

//பிசினாரித்தனமா மிஸ்ட் கால் குடுக்க தாய் குலங்கலால மட்டுமே முடியும்.. (அதுக்குன்னு ரோசபட்டு எவனும் திரும்ப கால் பண்ணாமையும் போகறதில்ல)//

கரெக்ட்டா சொன்னீங்க பாலா

கவிதை காதலன் said...

பாலா,DG,Spice ,jothi, LawrencE,நசரேயன்,
எல்லாருக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

இங்கிலீஷ்காரன் இது எனக்கு, என் நண்பர்களுக்கு, அங்க, இங்கன்னு பார்த்து கேட்ட விஷயங்கள்தான். மத்தபடி நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க.

Anonymous said...

mappla super da,

girl means Ghost In Real Life

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.... அனுபவம் நல்லாவே பேசுது. :))))))

shiyamsena said...

frd thanx 4 u r command


shiyamsena
free-funnyworld.blogspot.com

SUBBU said...

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

தெய்வமே நீங்க எங்கயோ போய்டீங்க

:)))))))))))))))))))))))))))))))))

mailformahes said...

All the commands are 100% true.

kushanth said...

Super friend, but all girls not in this way da. some body very different. example to my lover. Always take a call she. My lover presented gifts very valid. I a not present the gifts to her. I am very proud to my sweet lover.

Keith Kumarasamy said...

நல்லாருக்கு

Budthu said...

வாழ்த்துகள் மணி சார் உங்களுடைய இந்த பதிவும் யூத்புல் விகடனில் செலக்ட் ஆகி இருக்கு..........

தொடரும் உங்களின் கலை சேவை.........

nadhiya said...

மணி சாருக்கு முதல்ல என்னோட வாழ்த்துக்கள். இப்பத்தான் உங்க போஸ்ட் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. 10,000 ஹிட்ஸ் கடந்திருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. யூத்ஃபுல் விகடன்ல வேற வந்திருக்கு. கங்கிராட்ஸ். எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்குன்னா, என்னமோ நானே எழுதி எனக்கே இந்த அங்கீகாரம் கிடைச்ச மாதிரி இருக்கு. Finally you done it Mani.

nadhiya said...

// நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா? //
எனக்கு இந்த பாயின்ட் மட்டும் கொஞ்சம் பிடிக்கலை. எந்த பொண்ணும் ஒரு பையனை அந்த மாதிரி கம்பெல் பண்றது இல்லை. நீங்களா செஞ்சிகிட்டு ஏன் பொண்ணுங்க மேல பழியை போடுறீங்க? உடனே இல்லைன்னு சொல்லாதீங்க. உங்க இராணுவ நண்பர் கொடுத்த "ஐந்து" ரூபாயை இன்னமும் நீங்க பர்ஸ்ல வெச்சி சுத்திகிட்டு இருக்கிறது எனக்கு தெரியும். (அந்த நோட்டை நான் எடுத்துட்டேன்னு என்கிட்டே நீங்க எவ்ளோ சண்டை போட்டீங்க) ஒரு நண்பன் கொடுத்ததையே நீங்க அவ்ளோ பத்திரப்படுத்தி வெச்சிருக்கும் போது, உங்க காதலி கொடுத்ததை எவ்ளோ பத்திரப்படுத்தி வெச்சிருப்பீங்க? என்ன பதில் சொல்ல முடியலை இல்ல?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Budthu said...

வாழ்த்துகள் மணி சார், எப்போதும் போல வெறும் வாழ்த்துகளோடு நிறுத்திக்கொள்ள மனம் இல்லை, ஆனால் வேற என்ன சொல்லுவது என்று தெரிய வில்லை. உங்களுடைய ப்ளாக் 10,000 ஹிட்ஸ் தாண்டியதற்கு உங்களுடைய திறமையே காரணம், ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் இதை அடைந்திருப்பது மிக பெரிய விஷயம்.

"தன் மகன் சான்றோன் என கேட்ட தாய் போல"

உன்னுடைய நண்பர்கள் என்று சொல்லி கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறோம்.

வாழ்க........... வளர்க...................

நட்புடன் உன்னுடைய நண்பர்கள்.......

Budthu said...

// நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா? //

இந்த பாயிண்ட்ல எனக்கும் உடன் பாடு இல்லை...

காதலிய இம்ப்ரச்ஸ் பண்ண பசங்க பண்ணுறது, இதுல பொண்ணுகளோட தப்பு எதுவும் இல்லை, அதற்கு மேல் சினிமாவில் உள்ள சில இயக்குனர்கள் காதல் ந இப்படி தான் என்று மக்களை திசை திருப்பிவிட்டனர்.

இதிலும் 80 சதவிதம் பேர், பெண்கள் அவர்களை லவ் பண்ணற வரைக்கும் தான் இது மாதிரி செய்வார்கள், அந்த பெண் இவர்களை லவ் பண்ணிட்டா இது மாதிரி செய்ய மாட்டர்கள்.

பொதுவாக ஆண்கள் எதற்கு இதுமாதிரி செய்கிறார்கள், தன்னுடைய காதலியின் நினைவாக அவர்கள் பயன் படுத்திய பொருட்களை தன்னுடன் வைத்து கொள்வார்கள். இங்கே யோசிக்க வேண்டிய ஒரு விஷயம், தன்னுடைய காதலியே தன்னுடைய இருதயத்தில் வைத்து இருப்பதாக சொல்லும் காதலனுக்கு, இது எல்லாம் எதற்கு?????????

தமிழ் காதலன் said...

உங்கள் தளம் 10,000 ஹிட்கள் தாண்டிய மிகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் . உங்கள் படைப்புகள் தொடரட்டும் .
வாழ்த்துக்கள் . விரைவில் 20,000 plus ............

Budthu said...

அடுத்தது மிஸ்டு கால் மேட்டருக்கு வருவோம், பெண்களை இந்த அளவுக்கு மாற்றியது ஆண்கள் தான், எப்படின்னு கேக்கலாம் முதல பொண்ணுக கிட்ட பேசும் போது "வெறும் மிஸ்டு கால் கொடுத்த போதும்" நான் உண்டனையே கால் பண்ணுறேன்னு சொன்ன, என்ன நடக்கும்? அவங்களும் பதிலுக்கு மிஸ்டு கால் கொடுப்பாங்க, நம்ம ஆளும் பதிலுக்கு கால் பண்ணுவாரு, முடிவு என்னனு கவிதை காதலனே சொல்லிட்டாரு (இது எல்லாம் பொண்ணுகளை கரெக்ட் பண்ண சொல்லுறது, ஆனா கடைசில.......................)

தப்பு செய்றவங்கள விட அதை செய்ய தூன்றவர்களுக்கு தண்டனை அதிகம்னு சொல்லுவாங்க, அதனால் எல்லா பழியும் பெண்கள் மீது போட வேண்டாம்.

அதுமட்டும் இல்லாமல், இப்போது reverse ல வேலை செய்து கொண்டு இருக்கிறது, ஆண்கள் மிஸ்டு கால் கொடுத்தா கால் பண்ணுற பெண்களும் இருகாங்க, உதாரணத்துக்கு எனக்கு தெரிந்த ஒரு நபர், நண்பர்களுக்கு மட்டும் இல்லாமல் காதலிக்கும், பிறந்தநாள் மற்றும் பல விசயங்களுக்கு வாழ்த்துகள் சொல்லனும்னா மிஸ்டு கால் கொடு பாரு என்ன ஏது என்று கால் பண்ணினால் வாழ்த்துகளை சொல்லுவார், இவர் ஒருவரை மட்டும் வைத்து நான் சொல்ல வில்லை, இதுபோல நெறைய பேர் என்னகு தெரியும். அதனால் பெண்களை மட்டும் குறை சொல்ல வேண்டாம்..

இது என்னுடைய தனிபட்ட கருத்துகள், யாரையும் புண்படும் நோக்கோடு கம்மென்ட் போட வில்லை, அப்படி யாரையாவது பாதித்து இருந்தால் மன்னிக்கவும்.....

நலம் விரும்பி said...

நலம்விரும்பி: நீங்க நல்லவரா கெட்டவரா?
கனகராஜ் : தெரியலையே....

pratap said...

சரி மிஸ்ஸெட் கால் வருது பேசு

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆஹா..ஹீரோ சார் ரொம்பத்தான் பட்டிருப்பீங்க போலிருக்கு :P

Vishnu said...

/,ம்சிழ்ச்ய்துச்க் ஹ்ச்க்க்ச்ப்ஜ்ச்க்ட் க்ய்க்த்ஸ்த௬ஸ்ட்ஹ்ஜ்ப்ஸ்ய்த் உட்ய்த்ய்ஹ்க்ட௬த்ர்ட்ய் ௬த௬ஸ்த்ய்த்ஸ்ய்த்ழ்ழ௬த்ழ் ௭௬௫௬ஸ்ட௭த்ஸ்ட்த௭௬ட்த்ட் த்வ்ட௭ஸ்வ்த்ட்ய்ய்த்ஸ்ட்த்ட் த்ட௬௭த்ட௭வ௬எ௭வ௬எ

Maddy said...

கவிதை கவிதையா மனசுல கொட்ட நெனசிருகேங்க - முத்துவேல்

GOGO said...

simply superb pa. anubavam illenaalum padika pavam payapullaiga padara padu puriyuthu. athanayum unmai. enna panrathu ellam hormone mayakkam.

enna koduma sir ithu ???

Iravinvelicham said...

இவ்வளவு தெரிஞ்சும் பசங்க திருந்தறது இல்லை

நட்புடன் ஜமால் said...

யப்பா எங்கீயோ போய்ட்டீங்க

அருமை.

எனக்கு முன்னே ஒருத்தர் சொன்னதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.

எவனோ ஒருவன் said...

இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் ஒரு பையன் மனசுல வந்தா....அந்த பையனுக்கும் பொண்ணுக்கும் இருக்கிறது உண்மையான காதலா இருக்காது.. எனக்கு தோன்றியதை சொல்கிறேன்....

siva said...

யப்பா எங்கீயோ போய்ட்டீங்க

அருமை.

Priya said...

கலக்கலா இருக்கு!

காதிர் மீரான்.மஸ்லஹி said...

க..க..க..போ

காதிர் மீரான்.மஸ்லஹி said...

க..க..க..போ

இதையும் படியுங்கள்