Friday, July 3, 2009

கோகுலம் கதிரில் எனது பதிவு - காதல் மன்னன் ஆவது எப்படி?

சமீபத்தில் என்னுடைய பதிவுகளான

1.தமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம்
2.ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
3.நேற்று இறந்துவிட்டேன்

ஆகிய மூன்று பதிவுகளும் யூத்ஃபுல் விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன


இவை தவிர "காதலிப்பது எப்படி" என்ற தலைப்பில் நான் நான் எழுதிய ஒரு பதிவு இந்த மாத கோகுலம் கதிர் புத்தகத்தில் "காதல் மன்னன் ஆவது எப்படி" என்ற பெயரில் பிரசுரம் ஆகியுள்ளது.
என் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் ரசிகர்களுக்கும், பின்னுட்டம் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நேயர்களுக்கும், முக்கியமாய் என் நண்பர்களுக்கும் மிக்க நன்றி..


காதல் மன்னன் ஆவது எப்படி

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

13 comments:

nadhiya said...

சார். உங்களோட இந்த பதிவை கோகுலம் கதிர் புத்தகத்துல படிச்ச உடனே உங்களுக்கு வாழ்த்து சொல்லணும்ன்னு நினைச்சேன். But, முடியலை... தினத்தந்தி மாதிரி ஒரு குழுமத்துல இருந்து உங்களுக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்குன்னா அதுநிச்சயம் உங்களோட திறமையால மட்டும்தான். தொடர்ந்து எழுதுங்கள். எப்பவும் உங்களுக்கு பக்கபலமா உங்க நண்பர்கள் நாங்க இருக்கோம். All the Best.

Budthu said...

ஹாய் மணி,

என்னை பொறுத்த வரை இது உன் திறமைக்கு லேட்டா கிடைத்த அங்கிகாரம், பட் இப்போவாது அங்கிகாரம் கொடுத்தார்களே... தினதந்தி குழுமத்துக்கு மிக்க நன்றி...

உனக்கு நியாபகம் இருக்கும் என்று நெனைக்கிறேன், ஒரு லோக்கல் நியூஸ் பேப்பர் ஸ்டார்ட் பண்ண ரொம்ப try பண்ணி அப்படியே விட்டுடோம், இப்போ ஏன் அதை பத்தி நீ யோசிக்க கூடாது?

தொடர்ந்து உன் கலையை ருசிபார்க்க வாய்ப்பு கொடு....

ஆல் தி பெஸ்ட்.......................................

கவிதை காதலன் said...

ரொம்ப நன்றி கனகராஜ். நிச்சயமா அந்த பேப்பர் வெளிவரும். உங்க ஆதரவு எப்பவும் எனக்கு வேண்டும்.

கவிதை காதலன் said...

ரொம்ப நன்றி மிஸ் நதியா...

அனுமாலிகா said...

வாவ், கலக்கிட்டிங்க.. உண்மையிலேயே நான் அந்த காதலிப்பது எப்படி படிக்கும் போது விழுந்து விழுந்து சிரிச்சேன். செம நாட்டி. அது சரி Treat எங்க?

nadhiya said...

Ice Age -3 பார்த்திட்டீங்களா? செமையா இருக்கு. முடிஞ்சா அதைப்பத்தின ஒரு விமர்சனம் எழுதுங்களேன். அப்புறம் இன்னைக்கு நைட் 9 மணிக்கு HBO'ல Jodie Foster நடிச்ச "The Brave One" படம். கண்டிப்பா பாருங்க.. ஓய்! Movie பார்த்தாச்சா? உங்க ஷாலினியோட தங்கச்சி நடிச்ச படம். நான் இன்னும் பார்க்கலை. பிரெஞ்சு பட விமர்சனம் எல்லாம் எழுதறீங்க. சில நல்ல ஆங்கிலப் படங்களோட விமர்சனங்களையும் நீங்க எழுதலாமே...

Budthu said...
This comment has been removed by the author.
Budthu said...

மணி சார்,

இவள்ளவு பெரிய விஷயம் நடந்த பிறகு, உங்கள் profile ல இந்த வரிகளை மாற்றி எழுதலாமே ... ( உங்களுக்கு விருப்பம் இருந்தால்)


/* இதுவரை பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை */

கவிதை காதலன் said...

மன்னிக்கணும் நதியா நான் உங்களோட கமெண்டை இன்னைக்குதான் பார்த்தேன். எங்க வீட்டுல HBO வராது. இவ்வளவு அக்கறை எடுத்துகிட்டதுக்கு நன்றி.

கவிதை காதலன் said...

கனகராஜ் சார்... ரொம்ப நன்றி... இது மட்டுமே பெரிய விஷயம் இல்லையே. கண்டிப்பா இந்த வரிகளை மாற்றணும்'ங்கிறதுதான் என்னோட விருப்பமும். நிச்சயம் ஒரு நாள் மாறும். உங்கள மாதிரி நண்பர்களோட ஊக்கம் என்னை இன்னும் வேகமா செயல்பட வைக்குது.

சுள்ளான் said...

எல்லாரையும் கவர்ந்த ஒரு பதிவு தினத்தந்தியையும் கவர்ந்ததுல ஆச்சர்யமே இல்லை. வாழ்த்துக்கள் மணி சார். தொடர்ந்து எழுதுங்க .

குளிர்தேசம் said...

அட்ரா சக்கை... பிளாக் எழுத ஆரம்பித்த இவ்ளோ குறுகிய காலத்துல இவ்ளோ பெரிய அங்கீகாரம் நினைச்சு பார்க்க முடியாதது. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்...

govind said...

டுப்ளிகாட் ரெபொக் சூ , ரேய்போன் கண்ணாடி , ஸ்மார்ட் கேப் , கையில் 3,4 கயிறு கட்டி இருந்த அடிசனல் குவளிபிகாசன்

இதையும் படியுங்கள்