Wednesday, June 24, 2009

நேற்று இறந்து விட்டேன்


சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...

அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்...

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.

என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?

வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?

எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம்
என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்.

66 comments:

Arvind said...

ரொம்ப பெயினா இருக்கு உங்க கவிதைகள்...

rahul said...

// என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா? //


உண்மையான வார்த்தை..

Anonymous said...

Superb Boss

Anonymous said...

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.//

Fantastic lines

குளிர்தேசம் said...

// யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று.. //

சான்ஸே இல்லை மணி.. செமையா இருக்கு.. மனசை என்னமோ பண்ணுது.

நலம் விரும்பி said...
This comment has been removed by the author.
ஆளவந்தான் said...

காதல் தோல்வி பத்தின கவிதைன்ன உடனே ஓவரா டயலாக் எல்லாம் விடாம, இந்தக் கால கட்டத்துல எப்படி எல்லாம் பாதிக்கபட்டிருப்பான்ங்கிரத்தை ரொம்ப நேச்சுரலா எழுதி இருந்திங்க ரொம்ப சுஉப்பரா இருந்துச்சு.. வாழ்த்துக்கள். கங்கிராட்ஸ்..

தீப்பெட்டி said...

//வேறு யாரை நான் கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?//

வலிமிகும் வார்த்தைகள்..

kishore said...

மணி சார்.. ஏன் இப்படி? கமென்ட் என் கைதான் டைப் பண்ணுதே தவிர ஏன் மனசு என்கிட்டயே இல்லை. உங்க கவிதை எதைஎதையோ எனக்கு நியாபக்படுத்துது. என்னால அழுகைய கண்ட்டோல் பண்ண முடியலை. நீங்க சொல்லி இருந்த அத்தனை விஷயமும் நான் அனுபவிச்சது. என் தர்ஷினியோட மொபைல்ல, என் வாய்ஸ் இருந்த இடத்துல இன்னொருத்தன் வாய்ஸ், அவளோட Sent Items ல இன்னொருத்தனுக்கு அனுப்பிச்ச ஐலவ்யூ. இதெல்லாம் நான் கண்கூடா பார்த்திருக்கேன். நரக வேதனை மணிசார். ஆமா இதெல்லாம் எப்படி உங்களால Feel பண்ண முடியுது?

//இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா? //

சத்தியமா இது நீங்க எழுதலை. என் மனசு இது. ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தண்ணியடிக்க போறேன் சார். தப்பா எடுத்துக்காதீங்க..

கவிதை காதலன் said...

கிஷோர் நான் உங்களுக்கு ஆறுதல் எல்லாம் சொல்ல விரும்பலை. ஏன்னா அதோட வலி என்னன்னு எனக்கும் தெரியும். எல்லாருக்கும் என்னை ரொம்ப ஜாலியான ஒரு கேரக்டராத்தான் தெரியும். ஆனா எனக்குள்ள இருக்குற அந்த வலிகளை யாராலும் உணர முடியாது. தண்ணி அடிக்கிறதால மட்டும் உங்க வலிகள் என்ன குறைஞ்சிடவா போகுது?

viji said...

அன்பு கிஷோருக்கு... சகோதரி விஜி எழுதுவது.. நீ ஆனா இருந்து அனுபவிச்ச விஷயத்தை நான் பெண்ணா இருந்து அனுபவிச்சுருக்கேன். ஒரு படி மேல போய் பார்க்க கூடாத பல விஷயத்தை நான் பார்த்திருக்கேன். கவலையை மறக்க தண்ணி அடிக்க போறீங்க. நான் கவலையை மறக்காம இருக்க நிறைய விஷயம் பண்றேன். That alone Keeps me moving in my life. I should Live happily if not ! peacefully?.
I don't want to hold any pain in my heart for which i'have never been againt him in any situation. keep moving. forget it. Love urself more than anyone. get going. take care.

Budthu said...

நெஞ்ச தொட்டுட மச்சி..........

ரொம்ப அனுபவமா எழுதி இருக்கடா...

முனிசாமி. மு said...

இந்த கவிதையை நீங்கள் அனுபவித்து எழுதியிருந்தால் என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
கற்பனையாக எழுதியிருந்தால் கலக்கிடீங்க போங்க...

saran said...

//யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள், ஊமையாகிப் போனது என் தேசம்//

hi...superb line...amazing..poem...no words to explain.....

Budthu said...

விஜி அக்கா, உங்களை பார்க்கும் போதே என்மனதில் ஏதோ ஒன்று பட்டது, உங்கள் ஆழ் மனதில் ஏதோ ஒரு வலியுடன் இருகிறிர்கள் என்று. நீங்கள் சொன்னது மிகவும் சரி, நீங்க சொன்னதையே தான் நானும் கிஷோருக்கு சொன்னேன், கேட்பதாக இல்லை..

கிஷோர் திரும்பவும் ஒன்னே ஒன்னு சொல்ல விரும்புகிறேன், உங்களுடைய உண்மையான அன்பை அவங்க புருஞ்சிகிட்டு இருந்து, அவங்க மறைவால நீங்க அவங்களையே நினைத்துகிட்டு இருந்திங்கனா அதில ஒரு அர்த்தம் இருக்கும், உங்க அன்பையே புருஞ்சிக்கதா அவங்களுக்காக உங்க வாழ்கையை வேஸ்ட் பண்ணாதிங்க, காலம் திரும்ப கிடைக்காதுங்க ( சொல்ல வேணும்னா இது ஜோக் க இருக்கலாம் ) ஆனால் ஒருநாள் நீங்க கண்டிப்பா அவங்கள நினைத்து கொண்டு வேஸ்ட் பண்ண நாட்களையும், உங்களுடய உடம்பை வருதியதை எண்ணி யோசிபிங்க, அப்போ இது எல்லாம் முட்டால் தனமா இருக்கும்.

இதல்லாம் என்னுடைய அனுபவத்தில் சொல்லறது, நானும் பிரிவின் வலியை அனுபவித்து இருக்கிறேன், ஆனால் உங்களை போன்று தண்ணி அடித்ததில்லை.

இந்த உலகத்தில் கிஷோர், விஷ்ணு, கனகராஜ் மற்றும் விஜி அக்கா போல் உலகத்தில் நெயறைய பேர் இருங்காங்க, "வீட்டுக்கு வீடு வாசப்படி", அதனால பீல் பன்றத விட்டுட்டு விஜி அக்கா சொன்ன மாதிரி உங்கள முதல நேசிங்க... உங்களுக்கு ஒரு புது உலகம் உண்டாகும்.

இதில் எந்த கட்டாயமும் கிடையாது, ஆனால் உலகின் உண்மை இது தான்.....


நட்புடன் கனகராஜ்....

Budthu said...

நன்றி மிஸ் நதியா மேடம், தொலைந்து போன நம்முடைய கவிதை காதலனை மிட்டதற்கு.... உண்மைல சொல்ல போன நான்லாம் தகவல் தொழில்நுட்ப துறைல வேலை செய்வதற்கே தகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும், அது மட்டும் இல்லாமல் மணியோட "நண்பன்னு" சொல்லிக்கவே தகுதி இல்லை, இப்படி நடந்ததும் மணிக்கும் இதை தெரிவித்தேன், கமெண்ட் போட முடியலேன்னு ரொம்ப கஷ்ட பட்டேன், இன்று மட்டும் சுமார் ஒரு நாற்பது தடவையாவது ஓபன் பண்ணி பாத்தேன், அது மட்டும் இல்லாமல் மணி போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததால் கொஞ்சம் டென்ஷன் ஆகி விட்டேன், மணி evening சொன்ன அப்புறம் தான் தெரிந்தது யாரோ hack பண்ணிடங்கனு.

ஆனா நீங்க ரொம்ப முயற்சி பண்ணி திரும்பவும் கவிதை காதலனுக்கு மறு பிறவி கொடுத்து உள்ளிர்கள் என்றே சொல்ல வேண்டும். உங்களுடைய நட்பை எண்ணி பார்க்கும் போது நான் வெட்க படுகிறேன்.

வாசகர்களே இந்த நட்பின் சிகரத்தை அனைவரும் பாராட்டி ஆக வேண்டும், அது மட்டும் இல்லாமல் நட்பு என்றால் என்ன என்பதை கற்று கொள்ள வேண்டும்...

வாசகர்களே உங்களுடைய பாரட்டுகளை தெரிவியுங்கள்

Vishnu said...

நன்றி...............

Vishnu said...

கவிதை காதலன் said...

கிஷோர் நான் உங்களுக்கு ஆறுதல் எல்லாம் சொல்ல விரும்பலை. "{"ஏன்னா அதோட வலி என்னன்னு எனக்கும் தெரியும்"". எல்லாருக்கும் என்னை ரொம்ப ஜாலியான ஒரு கேரக்டராத்தான் தெரியும். ஆனா எனக்குள்ள இருக்குற அந்த வலிகளை யாராலும் உணர முடியாது. தண்ணி அடிக்கிறதால மட்டும் உங்க வலிகள் என்ன குறைஞ்சிடவா போகுது?


நா அப்பவே சொன்னே மச்சி , கனகராஜ் தான் நம்பவே இல்ல........

கலையரசன் said...

வாழ்த்துகள்,

உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது...

கவிதை காதலன் said...

கலையரசன் மிக்க நன்றி

நலம் விரும்பி said...

Ms. Nandiya so much thanks to you to bring back this website and our kavithai kadhalan again . Ms. vigi and Mr. kishore everyone is facing a promblems . Each individual having promblem but the promblem may differ. Dont think i am giving advise,
i too face this same promblem but i came out and i am leading life happily now

Mr. KIshore எல்லோரும் அவங்கவங்க கஷ்டத்துக்கு எல்லாம் தண்ணி அடிக்கறதுதான் தீர்வுன்னா உலகத்துல எல்லோரும் தண்ணி தான் அடிக்கணும்.
so vigi akka sollara mathir change ur life style . we are born to acieve anything in this vast world. kadthal is a part of life. u have more to achieve, you have great friends with you . so please for heaven sake come out from that incident sorry accident.


Ms. Vigi hats offs of to you i love you , i like you

viji said...

நதியா தொலைந்து போன எங்கள் கவிதை காதலனை தேடி கொடுத்ததிற்கு மிக்க நன்றி, உன் சேவை
தொடர என் வாழ்த்துகள்.......
மணி பயலே என்ன சந்தோஷமா?

கவிதை காதலன் said...

உண்மையிலேயே ரொம்ப சந்தோஷம் விஜி அக்கா...

நாகு said...

நான் மறந்து கொண்டிருக்கும் வலிகளின் நரம்புகளை, வீணை போல் ஒரு முறை மீண்டும் மீட்டிச் செல்கிறது உங்கள் கவிதை. எந்த காயம் பட்டாலும் வலி சிலகாலங்களில் வலுவிழந்து மாண்டுவிடும். ஆனால் மீண்டும் மீண்டும் பங்குச்சந்தை சென்செக்ஸ் கோடு மாதிரி இறங்கி ஏறி... .... ...

நான் அவளோடு வாழ்ந்திருந்தால் கூட சிலவேளைகளையில் அவளை மறந்திருக்க வாய்ப்புள்ளது..... ஆனால் அதற்க வாய்ப்பே தராமல் நினைவுகளோடு வாழவைத்து விட்டாள்.

வலிகளோடு நான்
வசந்தங்களோடு அவள்
ஆனால் உன்னை திட்ட முடியவில்லை
குறைந்த பட்சம் நீயாவது சந்தோசத்தோடு வாழ்

மனம் + மனம் = மணம்
சிலவேளைகளில் ரணம்.

நாகு said...
This comment has been removed by the author.
கவிதை காதலன் said...

கனகராஜ்... உங்களோட தீவிர அபிமானத்துக்கு மிக்க நன்றி. விஷ்ணு... உங்களோட கெஸ் கரெக்ட்டுதான்.

கவிதை காதலன் said...

உஷா மேம்... உங்களோட நீண்ட பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

நதியா மேம்... நன்றி'ங்கிற வார்த்தைய உச்சரிக்க கூட தகுதி இல்லாத ஒரு நிலையில நான் இருக்கேன். உங்ககிட்ட இருந்து நான் கத்துகிட்ட பல விஷயங்கள்ல நேத்து நீங்க கற்று கொடுத்த பாடமும் ஒண்ணு. தேங்க்ஸ்'க்கு மேல ஏதாவது உயர்ந்த ஒரு வார்த்தை இருந்தா அதை ----------- இங்க Fill up பண்ணிக்குங்க. எனக்கு வேற எதுவும் சொல்ல தோணலை. "Milianu merciar kinoto aktiyathi jinmuuhaah" இதுக்கு அர்த்தத்தை நீங்க கண்டு பிடிச்சுக்குவீங்கன்னு நினைக்குறேன்.

jackiesekar said...

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.

அற்புத வரிகள்

தமிழ் காதலன் said...
This comment has been removed by the author.
அனுமாலிகா said...

ரொம்ப வலியான் கவிதை. மனசை ரொம்ப வலிக்க வைக்குது. ப்ளீஸ் மணி இனிமே இந்த மாதிரி கவிதை எழுத வேண்டாமே. உங்க கவிதைகள் படிச்சா எனக்கும் காதலிக்கனும்ன்னு தோணும். ஆனா இந்தக் கவிதையை படிக்கும் போது காதலே வேணாம்னு தோனுது. ப்ளீஸ் மணி இந்த மாதிரி காதல் தோல்வி கவிதைகள் வேண்டாம். விகடனில் உங்க கவிதை செலக்ட் ஆனதுக்கு என்னோட வாழ்த்துகள் ...

தென்றல் said...

சுஉப்பரா இருக்கு கவிதைகள்.. அட்டகாசம் வாழ்த்துக்கள்.

Budthu said...

/ * Ms. Vigi hats offs of to you i love you , i like you */

நலம் விரும்பி நீங்க செய்தது கொஞ்சம் கூட நல்லா இல்ல, என்ன கேட்பதற்கு யாரும் இல்லங்குற தைரியமா, தம்பிங்க நாங்க இருக்கும். இன்னொரு தடவை இது மாதிரி பண்ணாதிங்க, புருஞ்சிட்டு இருப்பிங்கனு நினைக்கறேன்..

நலம் விரும்பி said...

Hello! who are you men? what is your promblem if i love viji ? mind your business, she (Viji) is my sweet heart.

Budthu said...
This comment has been removed by the author.
Budthu said...

Hello I am Her Brother.. If you have doubt ask her? I am doing my business only man. If I am not asking you, Then who else you want to ask? Don't spoil her name in public. I think You understand now.

I don't Know whether you are male or female.

If you are a female I am really sorry for what I did.

If you are male the above comment for you only.

நலம் விரும்பி said...

வணக்கம் தானைத் தலைவர் அவர்களே.... மொதல்ல இங்கிலீஷ்ல Love you 'க்கு எத்தனை அர்த்தம் இருக்குதுன்னு தெரிஞ்சிகிட்டு பேசுங்க. அக்கா - தம்பி, அக்கா - தங்கச்சி, அண்ணன் - தங்கச்சி, அம்மா - பையன், இரண்டு நண்பர்களுக்கிடையே, இரண்டு தோழிகளுக்கிடையெ, இப்படி எல்லா உறவுகளுக்கிடையேயும் இந்த வார்த்தையை பரிமாறிக்கலாம். நீங்க லவ்வுன்னா "அந்த" அர்த்தத்துல தான் எடுத்துக்குவீங்களா? கொஞ்சமாவது Broad Mind'a யோசிங்க சார். சும்மா எல்லாத்துலேயும் குற்றம் கண்டு பிடிக்கிரதுனாலையே நாம புத்திசாலி ஆகிட மாட்டோம். விஷ்ணு சொன்னது கரெக்ட்தான் ... ரொம்ப "பால்" வழியுது போல இருக்கு. நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவருதான்... நாங்க ஒத்துக்குறோம்.

Budthu said...

ரொம்ப டென்ஷன் அகதிங்க நலம் விரும்பி... ரொம்ப நாளா ப்ளாக் ல ஒரு விறு விருப்பே இல்லை, ஆதனால் தான் இப்படி கமெண்ட் போட்டேன், உன்மைஎல் அக்கா- தம்பி முறைஎல் இதை செய்து இருந்தால் மிகவும் சந்தோசம், அப்போ நாம ரெண்டு பெரும் பிரதர்ஸ் ஓகே வா. இது மாதிரி தான் நானும் என்னை சில கேள்வி கேட்டப்ப டென்சன் ஆனேன், ஆனால் சும்மா கலாச்சாங்கலாம், என்னகு broad mind இருக்குற நாளாத்தான், அக்கா தம்பி பாசத்துல, என் அக்காவை பற்றி யாரும் தப்ப பேச கூடாதுன்னு கமெண்ட் போட்டேன். ஓகே வா பிரதர். அண்ணன் தம்பி குள்ள சண்டை வேண்டாம் பிரதர்.

Budthu said...

உங்க மனதை புண்படும் படி பேசி இருந்தால் என்னை மன்னியுகள் பிரதர், இது கூட அண்ணன் தம்பி பாசத்துல செய்தது தான்

Vishnu said...

இதோட .................

புது படம் .

அண்ணன் - தங்கை உறவுணா ? அது " பாசமலர் "
அண்ணன் - தம்பி உறவுன்னா ? அது " நலவிரும்பி . கனகராஜ் பா

நலம் விரும்பி said...

என்னடா இது நம்ம மில்டரிய இன்னும் காணோமேன்னு பார்த்தேன். வாங்க்க சார் வாங்க... . கனகராஜுக்கு அந்த அளவுக்கு மெச்சுரிட்டி இல்லை. எதையும் கரேக்ட்ட புரிஞ்சுக்குற தன்மையும் இல்லை. இனிமேல் இதைப் பத்தி பேச வேணாம் ப்ளீஸ்.

sumi said...

its jst amazing, fantastic touching lines n wt else yar..no more words to say..im in search of words..keep goin on dis spirit n good luck

கிருஷ்.... said...

நல்ல கவிதை....மனதில் உறைந்திருந்த விஷயங்களை எழுப்பி விட்டுடீங்க....எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாது...அனா..ஒரு வேலை நான் என் அனுபவத்தை எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ...அப்படியே நீங்கள் இந்த கவிதையில் சொல்லி இருக்கீர்கள்....
உறைந்து போனது...என் காதல் மட்டும் இல்லை...என் வாழ்கையும் தான் என்று...வாழ்ந்து கொண்டிருந்தேன்....
ஆனால் இன்று...மூன்றரை வருடங்கள் நான் பார்த்திராத உலகம்...நான் எத்தனை அழகான விஷயங்களை பார்க்காமல் ரசிக்காமல் ...வாழ்கையை வீணடித்து விட்டேன் என்று நினைக்கும் பொது எனக்கு என்மேல் கோபம் தான் வருகிறது ....
நமக்கு வாழ்கையில் எப்படி ஒன்று நல்லது என்று தெரியும்...ஒரு கெட்டதை அதோடு ஒப்பிடும் பொது தான்...
இதை ஒரு கெட்டதாக நினைத்தாள்...நிறைய நல்ல விஷயங்கள் கண்களுக்கு தெரியும்...

உலகத்தில் நிறைய கனவுகள்...நல்ல மனிதர்கள்...அழகான விஷயங்கள்....இருக்கின்றன...அதை...பார்க்க என்னை ஒரு புது மனிதனாக மாற்றிக் கொண்டேன் ....இனிமையான வாழ்கை வாழ்கிறேன்...
காதல் தோல்விக்கு மன்னிக்கவும் இதை நான் தோல்வி என்று என்ன மாட்டேன்..நாம் தோற்கவில்லை... இது துரோகம்....இதற்கு பின் ஒரு உண்மையான நிஜமான வாழ்க்கை இருக்கிறது...அதை...உங்கள் கவிதை நடையில் சொன்னால்...இந்த உறைந்த எண்ணங்களால்...வேதனைக்கு உள்ளன சிலர் அதை வேரோடு அளிக்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்...
இது ஒரு அன்பு வேண்டுகோள்

இந்த உலகில் எழுத்துக்களுக்கு அப்படி ஒரு மதிப்பு இருக்கிறது....அவை வெறும் எழுத்துக்கள் இல்லை...ஒருவர் மனதை பொய் சேரும்போது அது உயிர் பெரும்...உங்களுக்கு அந்த எழுத்து வரம் இருக்கிறது....வாழ்த்துக்கள்...
உங்கள் கவிதைகளை...அன்புடன் எதிர்பார்க்கும்...ஒரு உணர்வுகளால் பின்னப்பட்ட உடல்.....
பி.கு - எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்...
இதுவே என் முதல் பின்னூட்டம்

உயிருடன் செத்தவன் said...

நேற்று இறந்து விட்டாள்...

NELLAI D.S.SRITHAR said...

really fact kavithati,

super da mappla....

love means
Lake of sorrows
ocean of worries
Valley of death
End of life............

fraud said...

hi friends i like this pls i am also love failure pa but i kike this kavithai i want more feelings pls send any kavithai in my mail id pls note it karthikdce2007@yahoo.co.in pls help

நட்புடன் ஜமால் said...

பெரும் கவிதை

அதனை விட

பெரும் வலி ...

பாலா said...

உருக்கிட்ட மச்சான்

பெய்ன் புல் யப்பப்பா

Anonymous said...

கவிதை நல்ல இருக்கு
காதல்
வலியை அனுபவித பொண்ணு நான்
மனவேதனை
செத்தாலும்
போகாது.

Anonymous said...

"இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா? "

excellent wordings pa.

ungaloda indha kavidhai padichu mudikkumbodhu ennoda kangal kalangi irundhadha nan accept panikiren.

really very touching kavithai.

Anonymous said...

இன்று நான் இறந்துவிட்டேன்.

மதி
சிங்கப்பூரில் இருந்து....

Anonymous said...

Just I donno what to say... But simply I am unable to do anything for some time after reading this..

RAMYA said...

Hi! I have no words to say,,,, superb..... fantastic...

Swin said...

Kavithaiya Iethu...
Oru manathin Valiiiiiiiiiii
Sooooooooooooooooo,,,,


Yennaya Yetho Pannuthu
Solla varththai illa.................


..........
...........
.........!!!!1

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

ம்..கவிதையின் தாக்கம் பின்னூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது. நானும் அந்த வரிசையில்.

எவனோ ஒருவன் said...

உங்களோட வலியை ஒவ்வொரு வரியிலும் உணர்கிறேன்....

மதி said...

கடைசி வரிகள் இந்தக் கவிதையின் மொத்த வலியையும் ஒரு வரியில் நிறுத்துகிறது .. நல்ல கவிதை

gowri said...

sory boss unga nega girls ah comment pani eludhunadha pathu ungala semaya thitita but indha kavidha chance ah illa super super super super... suppose ungaluku love fail na ungala miss pana ponnu sariyana unlucky indha kavidhya adichukave mudiyadhu but ela ponnugalum ipadi pasanga engdha alavuku sincere ah irukangalo adha vida ponugalum irukanga but avanag chose pandra person tha thapa poidudhu.. oru oru linesum cha words ah ila vikadan la idhu epauo vandhurundha sila per thirundherkalam bt late vandhalum latest ah tha iruku unga varthaigal...

Seethasri said...

"netre iranthu viten" intha kavithaiku enna comment so0lrathu. ennidam varthaikal illai en kathaliyai patri pugala.. kanneer thuligale vazhthukalaga...
enna sir kathaliya patri kekala kavithuku comment sollunganrigala.. KAVITHAI THANGA EN KATHALInen. nanum ungal kavithaiyal iranthuviten. "PURITHUKOLLAKUDIYA KAVITHAIKALA ILLAMA UNGA KAVITHAIKAL UNGA KAVITHAILA ELLAME, UNARAKUDIYATHA IRUKU. intha kavithaiku ennidam comment illanga en "kaneerthuligal" than commennt.ROMBA NALAIKAPRUM ennidam ipadi oru kannera enta naan ethirpakala... . nan muthal muthalga anupra comment ithu. ivlo late'a padichurken athukaga sorrynga sir..sorry mani sir.
Nan enna commennt thatirkenu therila sir. en thaanagave type panna arambichurchu. KAVITHAI KATHALA NANUM KATHALIKIREN INRU MUTHAL, ILLATHA EN KATHALAI...
Notes: thavarukal irunthal mannikavum. nathiya sister comment super.. nan ithupol innum unga kavithaikalai padithu comment panna asaipadren... THANK YOU vel sir.

Seethasri said...
This comment has been removed by the author.
Tamilraja k said...

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

சற்றே வியந்து தான் போனேன் நானும் இந்த வரிகளைத் தொடர்ந்து உங்கள் கவிதையைப் படிக்கும் பொழுது. இன்று நல்ல ஒரு காதல் வலிக் கவிதையைப் படிக்க வேண்டும் என்று எண்ணி http://linoj.do.am/publ/15-1-0-642
இந்த வலைத்தளத்தில் தேடிக் கொண்டிருக்க, இந்த சுட்டியில் உங்களின் கவிதையைப் படிக்க நேர்ந்தது. உங்களின் கவிதைக்கு முன், நிறைய கவிதைகளைப் படிக்க முடிந்தது. அது வெறும் வார்த்தைகள் மட்டும் தான்.
உங்கள் கவிதையில் வலிகளைத் தாண்டி ஒரு மிகப் பெரிய காலத்தின் கண்ணாடித் தெரிகிறது. இந்த சூழலில் காதல் எந்தெந்த நிலைகளைக் கடந்து வந்திருக்கிறது. காலம் தோறும் ஆணிற்க்கும் பெண்ணிற்க்குமான அன்பு பரிமாற்றங்களில் வலிகளை ஒரு பாலினம் மட்டுமே உணர்வது இயல்பாகவே இருந்து வருகிறது. ஆணோ, பெண்ணோ இந்த வலிகளை காலம் தோறும் அனுபவித்தபடியே வாழ்ந்திருக்கின்றார்கள். இருப்பினும் உண்மையான அன்பை புரிந்துக் கொள்வதில் அவர்களுக்கிடையே பெரிய இடைவெளி இருந்தபடியே இருக்கிறது. ஆண் பெண் புரிதலில் எங்கோ தவறு இருக்கிறது. ஏனெனில் இந்த வலி ஆணிற்க்கு மட்டுமின்றி பெண்ணிற்கும் நிகழ்கிறது.
இன்று தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டதால் அதன் தாக்கம் அதிகரித்துவிட்டது.
அன்பை உணரத் தெரியாத, புரிந்துக் கொள்ள முடியாத உயிர்களை காலம் காலமாக இந்த உலகம் பெற்றுக் கொண்டுத்தானிருக்கிறது.
ஏனென்றால் அந்த உயிர்களின் மூலமே அன்பின் பெருவெளியாகத் திகழும் உயிர்களை வெளிக்காட்ட முடியும். சில வரிகளை எழுத நினைக்கிறேன் , இருப்பினும் கவிஞனைத் தாண்டி நண்பா நீயும் மனிதன் தான் என்பதால் எழுதி உன் மனதின் வலிகளை நினைவுப் படுத்த விரும்பவில்லை.
கவிதைக் காதலா,இன்று நல்ல ஒரு காதல் வலிக் கவிதை எழுதலாமென்று நினைத்தேன் ஆனால் அதை 3 ஆண்டிற்கு முன்னரே நீ எழுதி இன்று என்னை எழுதவிடாமல் செய்துவிட்டாய்...
இன்று அந்த வலிகள் உனக்கு உறுதியைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்
இதை வெகுக் காலம் கடந்து நான் படிக்கிறேன். ஏனெனில் இப்பொழுது எனக்கு இந்த கவிதைத் தேவைப்படுகிறது. மனதிற்க்கல்ல என்னுடைய வலைத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதுவதற்கு... பயன்படுத்தலாமா...?
நேரமிருப்பின் என்னுடைய இந்த கவிதையைப் படிக்கவும்...
http://tamilraja-thotil.blogspot.in/2007/12/blog-post_12.html
இது வேறு...

கமால் -அன்பின் உச்சம் said...

இதைப் படிக்கும் பொது மனசு வலிக்கிறது தோழா...

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்..மிக்க நன்றி.

இரவின் புன்னகை said...

வலி நிறைந்த வரிகள்... வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்!!!

Anonymous said...

yen vazhkkaiyel naan anupavikkum aththanai valigalaium nengal anubavikkirirgan aruthal solla mudiyavillai analum kadaulidam vendikkolkiren ungalukkaga

kishokanth vadival said...

எனக்கு பிடித்த விசித்திரமான கவிதை

இதையும் படியுங்கள்