Monday, June 22, 2009

நல்லவேளை..... சுஜாதா உயிருடன் இல்லை
இந்த தலைப்பு யாரையும் காயப்படுத்தவோ, வருத்தமடைய செய்யவோ இல்லை. சில யதார்த்தமான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தப் பதிவின் நோக்கம். ஒரு படைப்பாளிக்கு மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம் என்ன தெரியுமா? அவனுடைய ஒரு படைப்பு சின்னாபின்னமாக்கப்படுவது. ஒரு தாயிற்குதான் தெரியும் தன் கண் முன்னே தன் மகன் கொடுமைப்படுத்தப்படுவதன் வலி.

அப்பேர்ப்பட்ட ஒரு வலியைத்தான் நாம் சுஜாதாவிற்கு தந்திருக்கிறோம். நல்லவேளை... அந்த வலியை அனுபவிக்க சுஜாதா நம்மிடம் இல்லை. காரணம் அந்த அளவிற்கு அவரது படைப்பை பாழ்படுத்தி இருக்கிறோம்.


சமீபத்தில் மிக ஆர்வமாக "ஆனந்த தாண்டவம் " திரைப்படம் பார்க்க சென்றேன். காரணம் அந்த திரைப்படம் அமரர் திரு. சுஜாதா அவர்களின் "பிரிவோம் சந்திப்போம்" நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக...

"பிரிவோம் சந்திப்போம்" நாவல் தொடராக வெளிவந்த கால கட்டத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அதே வெற்றி திரைப்படத்திற்கும் கிடைத்திருக்க வேண்டியது, சில மெனக்கெடுதல்கள் இல்லாததாலும், சுவாரஸ்யங்களின் முடிச்சுகள் இல்லாததாலும் கைநழுவிப் போய்விட்டது.

கதையாக வெளிவந்த போது இருந்த வரவேற்பு ஏன் இந்நாவல் திரைப்படமாக வெளிவந்த போது இல்லை? சில காரணங்களை அலசலாம்...

மிக முக்கிய முதலாவது காரணம் கதாநாயன்... ஆம்.. நாவலாக படிக்கும்போது "ரகுபதி" என்ற கதாபாத்திரம் மதுமிதாவால் கைவிடப்படும் போது, நாமும் கூட சேர்ந்து அவனுக்காய் அழுவோம். அது சுஜாதாவின் வெற்றி.

ஆனால் அப்படி ஒரு வெற்றி இயக்குனருக்கு கிடைக்கவில்லை. காரணம், ரகுபதி கேரக்டருக்கு சரியான தேர்வு இல்லாதது. ஏதோ வினிகர் குடித்தவர் போலவே "சித்தார்த்" இருப்பது நமக்கும் அலுப்பை தருகிறது. நடிப்பு என்றால் என்ன விலை? என்று கேட்கிறார் சித்தார்த். ஒரு நல்ல கதைக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு அறிமுகம்?


நாவலில் மதுமிதா கதாபாத்திரமும், அவள் சார்ந்த குறும்புகளும், அவளது கதாபாத்திர இயல்பும் நம்மை ஒரு புது அனுபவத்திற்கு அழைத்து சென்றன. ஆனால் இந்தப் படத்தில் தமன்னாவின் பாடி லேங்குவேஜும், டயலாக் டெலிவரியும் நம்மை எரிச்சலுக்கு ஆட்படுத்துகின்றன.

"கனா காண்கிறேன்" பாடலைத் தவிர மற்ற பாடல்களில் எல்லாம் கேன்டீனில் ரசிகர்கள் கூட்டம். எந்த ஒரு பாடலும் சராசரியாய் கூட, ரசிகனை ஈர்க்கவில்லை.

உயர்தட்டுவர்க்கத்தின் வாழ்க்கை முறையை இந்தக் கதை பிரதிபலித்தாலும் கூட, எந்தவர்க்கத்து ரசிகர்களையும் ஈர்க்கவில்லை என்பதே உண்மை. ஒரு நாவலை படமாக்கும் போது அதிகபட்ச கவனத்தன்மை தேவை. புதிதாய் படத்தைப் பார்ப்பவர்கள் கூட, படத்தை பார்த்தபின் அந்த நாவலை தேடிப்பிடித்து படிக்கும் வண்ணமாய் இருக்கவேண்டும் அந்த படைப்பு.

ஆனால் இந்த படத்தைப் பார்த்தபின் நிச்சயமாய் யாரும் "பிரிவோம் சந்திப்போம்" நாவலை வாங்கி படிக்க மாட்டார்கள். "போதும்டா சாமி ஆளைவிடுங்க" என்று சொல்லும்படிதான் இந்த நாவல் படமாக்கப்பட்டிருக்கிறது. நான் ஒன்றும் இந்தக் கதை ஆஹா... ஓஹோ... என்று சொல்லவில்லை.

இந்தக் கதையை நாவலாய் படிக்கும் போது இருந்த ஒரு அனுபவம், திரைப்படமாய் பார்க்கும் போது கிடைக்கவில்லை என்றுதான் சொல்லுகிறேன்.
செல்லமே திரைப்படத்தில் சிக்சர் அடித்த இயக்குநர்... இந்தப் படத்தில் முதல் பந்திலேயே "க்ளீன் போல்ட்" ஆகியிருக்கிறார். நிலாக்காலம் திரைப்படத்தில் கூட சின்ன சின்ன சுவாரஸ்யங்களை அழகுபடக் கோர்த்திருந்த இயக்குநர் இந்தத் திரைப்படத்தில் கோட்டை விட்டிருக்கிறார்.

சுஜாதாவின் இளமைத்துள்ளும் படைப்பு, தமன்னா போன்ற ஒரு அழகுப் பெண், GV பிரகாஷ், வைரமுத்து, தோட்டா தரணி, ஜீவாசங்கர், VT விஜயன், எந்த செலவிற்கும் தயங்காத ஆஸ்கர் ரவிச்சந்திரன், இப்படி காணுமிடமெல்லாம் பலமான தூண்கள் சுழ்ந்திருந்தும், அஸ்திவாரமில்லாத கட்டடத்தால் "ஆனந்த தாண்டவத்தை" ஆட்டம் காண வைத்திருக்கிறார் A.R. காந்தி கிருஷ்ணா, மொத்தத்தில் உப்பு, புளி, காரம், இனிப்பு, ஏதும் இல்லாத கண்ணுக்கு குளிர்ச்சியான சாப்பாடு.. பசிக்கு ஏமாற்றம்..

நல்லவேளை..... சுஜாதா உயிருடன் இல்லை

22 comments:

kishore said...

நிலாக்காலாம் இந்த டைரக்டரோட படமா? அந்த மாதிரி ஒரு படத்தை கொடுத்தவரா இப்படி ஒரு கேவலமான படத்தை கொடுத்தாரு?

கே.ரவிஷங்கர் said...

தொடர்கதைய சினிமாவா எடுக்கும்போது அட்லீஸ்டு ஒரு மாசம் ரிசர்ச் பண்ணனும்.உள் வாங்னும்.Homework
பண்ணனும்.

தமிழ் காதலன் said...

.....சுஜாதாவின் நாவல் கொடுத்த சுவாரசியம் இந்த படத்தில் இல்லை என்றீர்கள் .,ஆகவே நாவலை படிக்க போகிறேன் ., உங்கள் விமர்சனம் தொடரட்டும் .......

nadhiya said...

//ஏதோ வினிகர் குடித்தவர் போலவே "சித்தார்த்" இருப்பது நமக்கும் அலுப்பை தருகிறது.//

வித்தியாசமான வர்ணனை..

நான் இன்னும் இந்தப் படம் பார்க்கலை. பார்த்திட்டு கமெண்ட் போடுறேன். சுஜாதாவைபத்தி நீங்க இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம். எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர். அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. "பிரிவோம் சந்திப்போம்" ரெண்டு பார்ட்டும் ரொம்ப நல்லா இருக்கும். நீங்க சொல்றதை பார்த்தா படத்துல கேவலப்படுத்தி இருப்பாங்க போல இருக்கே

கவிதை காதலன் said...

ஒரு மாசம் கூட பத்தாது ரவி ஷங்கர்..

கவிதை காதலன் said...

என்ன பண்றது கிஷோர்? எல்லாம் அலட்சியம்தான் காரணம்.

உங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி தமிழ்காதலன்....

கவிதை காதலன் said...

// சுஜாதாவைபத்தி நீங்க இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம். //

மன்னிக்கணும் மிஸ் நதியா...இது சுஜாதாவைப் பத்தின பதிவு இல்லை. சுஜாதாவோட படைப்பை கெடுத்ததுக்கான ஒரு வருத்தம் தெரிவித்தல்தான் இது. So சுஜாதாவைபத்தி நீங்க அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். சுஜாதாவைப் பத்தின ஒரு முழுமையான பதிவு கண்டிப்பா வரும். உங்கள் வருகைக்கு நன்றி

Anonymous said...

சார்... இந்த மாதிரி விமர்சனம் எல்லாம் எல்லாருமே எழுதுறதுதான். ஸ்பெஷலா ஒன்னும் இல்லை. ஆனா உங்களோட கவிதைகள் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. ப்ளீஸ் தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதுங்க. உங்களோட அந்த அணைப்பு பத்தின கவிதை செம சூப்பர். ஒரு சின்ன வேண்டுகோள் "முத்தம்" பத்தின ஒரு கவிதை எழுதுங்களேன்.. ப்ளீஸ்

Budthu said...
This comment has been removed by the author.
Vishnu said...

சோக்கா சொன்னடா மச்சி ............... நாளைக்கு நீ ஒரு படம்
எடுத்தா நான் ஒரு பிளாக் ஓபன் பண்ணி உன்ன நான் கலாய்பேன் இது mr கனகராஜ் மேல சத்தியம் ( ஏனா நா ஓபன் பண்ண மாட்டேன்......)

Vishnu said...

மிஸ் நதியா வாழ்கைல முதல்முறையா உங்களுக்கு ஒரு உதவி பண்றேன்.................. தயவு செஞ்சி அந்த படத்த பாக்காதிங்க.

Budthu said...

நன்றி மிஸ்டர் கவிதை காதலன், இந்த "நரபலியை" பற்றி யாராவது எடுத்து உரைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன், என் நண்பன் செய்தது மிகவும் மகிழ்ச்சி.

நட்பின் கிரியை உணர்ந்து கொண்டேன்..

இப்போதான் முதல் பாகம் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன், நான் இந்த "நர பலியை" பார்க்கவில்லை, படத்தின் ஒரேஒரு சீன் பாத்தேன் ( புத்தகம் படிக்க ஆரம்பித்த பிறகு தான்), பட் சொல்லுறேன்னு தப்ப எடுத்துக்க கூடாது, மீடியா industry la இல்லாதவங்க கூட இது மாதிரி அடுத்தவங்க படைப்பை (உயிர் உள்ள ) கொள்ள முடியாது.

இது அந்த ஒரு சீன் பார்த்ததோட வெளிபாடு தான், என்னுடைய கணிப்பு தவறாக தெரிந்தால் மன்னிகவும்...

Budthu said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

சன் டிவி பாணியிலே சொன்னாக்க, இது ஆனந்த தாண்டவம் இல்லை.ஆங்கார தாண்டவம்.

Budthu said...

இதுக்கு தான் மணி சார் அப்பவே சொன்னேன், சிக்கிரம் ஒரு படத்தை இயக்க, ஏற்கனேவே மிஷ்கின் சார், பாண்டியராஜன் சார் (பசங்க பட இயக்குனர்) மற்றும் சிலர் இருந்தாலும், இதுபோல காரியங்களை தடுக்க இன்னும் நிறையபேர் தேவை படுகின்றனர், ஆகவே சிக்கிரம் சினிமா பக்கம் வாங்க, இவர்களை போன்றோருக்கு படம்னா எப்படி இருக்க வேண்டும் ,என்று உணர்த்துங்கள்.

நன்றி.... கருத்துகளில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்....

Budthu said...

ஒரு மொக்ககைக்காக இப்படி ஒரு சிந்தனை......

என்னகு தெரிந்து இயக்குனர் ஒரு பொறாமை இல் தான் இதை செய்து இருக்கவேண்டும், என்னடா அடுத்த துறைஎல் இருந்து வந்து இவ்வளவு பிரபலமாக ஆயீடார் நு பொறாமை இல ரோம்பல்னலா காத்து இருந்து இதை செய்து இருக்கிறார்.

(குறிப்பு சுஜாதா சார் ஒரு பொறியாளர் முதலாவதாக Civil Aviation Department of Government of India வேலை பார்த்தார், பிறகு Bharat Electronics Limited in Bangalore, India வேலை பார்த்தார்.)
அது மட்டும் இல்லாமல் தங்களின் தோல்விக்கு காரணம் இது தான் என்று எல்லா கட்சிகளும் குறை கூரும் மின்னன்னு வாக்கு பதிவு மிஷன் கண்டுபிடிக்க முக்கியமான key person இவர்தான்.

இதற்காக இவர் ரொம்ப கஷ்ட பட்டு இருக்கிறார், செல்லமே (2004), ஆனந்த தாண்டவம் ( 2009), ஆனால் நினைத்ததை சாதித்து விட்டார், மிக பெரிய இயக்குனரின் கலையுலக வாரிசு ஆனா இந்த இயக்குனர்.

கவிதை காதலன் said...

மிக்க நன்றி Mr.கனகராஜ்.. உங்களுடைய எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன். உங்கள் ஆதரவு நிச்சயம் எனக்கு தேவை.

கவிதை காதலன் said...

பிரணவ்.. முத்தம் அப்படிங்கிறது ரொம்ப ஸ்பெஷலான ஒரு விஷயம். கண்டிப்பா அதுக்கு நிறைய டைம் தேவைப்படும்., கூடிய விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும். தேங்க்ஸ்..

கவிதை காதலன் said...

விஷ்ணு சார்.. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

ஸ்ரீ.... said...

விமர்சனம் நேர்மையாகவும், தெளிவாகவும் இருந்தது. நான் இம்மாதிரி அதிகம் கேள்விப்பட்டதால் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. இனி பார்ப்பேனா? தெரியாது.

ஸ்ரீ....

nadhiya said...

மணி சார்... படம் பார்த்தேன். வெரி ஆவரேஜ். நாவலா படிக்கும் போது எனக்கு இருந்த அந்த ஃபீல், படமா பார்க்கும் போது டோட்டலா மிஸ்ஸிங். சுஜாதாவோட கதைய இந்த அளவுக்கு Spoil பண்ணி இருக்க வேண்டாம். எனக்கு இப்போ என்ன பயம்ன்னா சுஜாதாவோட "ஆ" கதையா படமா எடுக்கப் போறாங்களாம். அவ்ளோ அருமையான கதைய எப்படி எடுக்கப் போறாங்களோன்னு நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு.

Ram said...

I think the start cast was a complete let down ,and ratna's characterisation was screwed in the movie

இதையும் படியுங்கள்