Thursday, June 18, 2009

உன் அணைப்பினால் அழகாகிறேன்


மெல்லிய மழைச்சாரல்
ஜன்னல் வழியே தெறிக்க
பின்னிரவின் குளிரில் உன்னை
இறுக்கி அணைத்தபடியே
படுத்திருக்கும் அந்த சுகம்
மரணத்தின் விளிம்பு வரை நீளும் வரம் வேண்டும்.

எத்தனை வேதனைகளை
சுமந்தபடி வந்திருந்தாலும்,
உன் இறுகிய அணைப்பினால்
அத்தனை வலிகளையும் அழித்துவிடுகிறாய்.

இருவரும் அணைத்தபடி
படுத்திருக்கும் சுகத்தைவிட,
நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
எனக்கு எதிர்புறமாய் திரும்பியபடி
படுத்திருக்கும் நேரத்தில்,

மெதுவாய் உன் பின்னால் இருந்து
அணைத்துக் கொள்ளும் அந்த சுகம்
எனக்கு மிகப் பிடித்தது.
அப்போது மெதுவாய் உன் விரல்கள்
என் விரல்களை
சிறைப்பிடித்துக் கொள்ளும்.

அந்த ஒரு நொடியில்
இதுவரை என்னிடம்
நீ கொண்ட கோபம் எங்கே போயிற்று?
என்று கண்டுபிடிக்கும் பொறுப்பை
இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தால் கூட
அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

உனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் காஃபி குடிக்கிறாய்.
எனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் உன்னை
கட்டிப்பிடித்துக் கொள்கிறேன்.

உன்னை அறியாமல்
உன் தூக்கத்தின் இடையே
என் அருகே வந்து நீ என்னை
அணைத்துக் கொள்ளும்
அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
என்பதற்காகவே இரவு முழுவதும்
துங்காமல் விழித்திருப்பேன்.

எனக்கு தேவை
உன் முத்தங்கள்தான்.
ஆனால் அதை நேரிடையாக கேட்பதைவிட,
உன் அணைப்பை மட்டும்தான் கேட்பேன்.
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம் என்பது போல்,
நீ உன் அணைப்போடு சேர்த்து
உன் முத்தங்களையும்
இலவசமாக தருகிறாய்.

நீ அணைக்கையில்
உன் கழுத்தோரம் மணக்கும்
வாசனைக்கு இணையான பெர்ஃயூம்,
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.

தூக்கத்தைவிட,
கனவுகளைவிட,
உன் அணைப்பையே
அதிகம் விரும்புகிறேன்

நீ மட்டும் என்னை
அணைத்து கொண்டு இருப்பாயேயானால்
ஆயுள் முழுவதும் உன் அருகில்
தூங்கிக்கொண்டு இருப்பேன்.

32 comments:

Budthu said...

வாழ்த்துக்கள் மணி....

Budthu said...

/* உன்னை அறியாமல்
உன் தூக்கத்தின் இடையே
என் அருகே வந்து நீ என்னை
அணைத்துக் கொள்ளும்
அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
என்பதற்காகவே இரவு முழுவதும்
துங்காமல் விழித்திருப்பேன். */

Really Nice.......

விக்னேஷ்வரி said...

மெல்லிய மழைச்சாரல்
ஜன்னல் வழியே தெறிக்க
பின்னிரவின் குளிரில் உன்னை
இறுக்கி அணைத்தபடியே
படுத்திருக்கும் அந்த சுகம்
மரணத்தின் விளிம்பு வரை நீளும் வரம் வேண்டும். //

அழகு.

மொத்தமும் நல்லா இருக்கு.

பிரியமுடன்.........வசந்த் said...

சூப்பருங்க....

Arvind said...

//நீ அணைக்கையில்
உன் கழுத்தோரம் மணக்கும்
வாசனைக்கு இணையான பெர்ஃயூம்,
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.//


வாவ்... என்ன ஒரு Feel!
Excellent...

viji said...

U REALLY MADE MY EYES TO SHED TEARS WITH SMILE:-)

IT MADE ME TO RECOLLECT MY SWEET MEMORRIES????
THANK U MANI KUTTY:-)
KEEP IT UP....
GET GOING.....
WITH LOVE:-)
Viji akka

nadhiya said...

// மெதுவாய் உன் பின்னால் இருந்து
அணைத்துக் கொள்ளும் அந்த சுகம்
எனக்கு மிகப் பிடித்தது.//

பொய்களால் தொடுக்கப்பட்ட மாலைதான் கவிதைன்னு சொல்லுவாங்க. ஆனா உங்க கவிதைகள்'ல பொய் இல்லை. மனசை மயிலிறகால் வருடிப் போகிற ஒரு அழகான Feel இருக்கு. So sweet......

மணி சார் எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது. உங்களுக்கு வாழ்க்கைத்துணையா வரப் போறவங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க. இந்த அளவுக்கு ஒருத்தரை நேசிக்க முடியும்ன்னா.... எனக்கு "அவங்க" மேல ரொம்ப பொறாமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க...All the Best

" உழவன் " " Uzhavan " said...

நல்லாருக்கு கவிதை.

//அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
என்பதற்காகவே இரவு முழுவதும்
துங்காமல் விழித்திருப்பேன்.//

//ஆயுள் முழுவதும் உன் அருகில்
தூங்கிக்கொண்டு இருப்பேன்//

தூங்குறது உங்களூக்கு பிடிச்சிருக்கா? இல்லை தூங்காம இருக்குறது பிடிச்சிருக்கா? எங்களுக்கு ஒரே குழப்பமா இருக்கு :-)

கவிதை காதலன் said...

அதாவது உழவன்... தன்னையறியாம "அவங்க" கட்டிப்பிடிக்கிற சுகத்துக்காக ராத்திரி முழுவதும் தூங்காம காத்துகிட்டு இருக்கலாம். அப்பேர்பட்ட அழகான அணைப்பு கிடைக்கும்ன்னா, ஆயுள் முழுவதும் தூங்கிகிட்டே இருக்கலாம். I Mean துங்குற மாதிரி நடிச்சிகிட்டே இருக்கலாம். இப்போ புரியுதா?

மின்சார கண்ணன் said...

அதெப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி ரொமாண்டிக் கவிதையா வருது? நானும் திங்கக் பண்ணி பண்ணி பாக்குறேன்... ம்ஹும்... எனக்கு துஉக்கம்தான் வருது.

ரொம்ப நேச்சுரலா இயல்பா இருக்கு. மனசுக்குள்ள உட்கார்ந்துகிட்டு வெளிய போக மாட்டேன்னு அடம் பிடிக்குது உங்க கவிதை

robert said...

கவிதை காதலன் அவர்களுக்கு இதுவரைக்கும் உங்களுடைய ப்ளாக் படித்துட்டு என்னுடைய வேலை முடிந்த பிறகு கமெண்ட் போடலாம்னு நெனைப்பேன் ஆனால் நேரம் கிடைக்காததால் கமெண்ட் போட முடியாமல் போய் விடும், ஆனால் இந்த போஸ்டை படித்த பிறகு கமெண்ட் போட்டுட்டு தான் என் வேலையை பார்க்கணும்னு முடிவு பண்ணி தான் இந்த கமெண்ட் போட்டேன், அந்த அளவிற்கு உங்களுடைய கவிதை மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது.

இன்னும் இரண்டு, மூன்று வருடம் கழித்து, முப்பது வயதில் கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு இருந்தேன் ஆனால் உங்களுடய ப்ளாக் என்னை நிலைகுலைய வைத்துள்ளது. இந்த சுகங்களை அனுபவிக்கவாது (" காமத்தை குறிப்பிட வில்லை" ) கல்யாணம் பண்ணி கொள்ள ஆசையா இருக்கிறது.

உங்களுடைய அடுத்த போஸ்டை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன், நாட்கள் பல எடுத்து கொல்லாமல் seikram உங்களுடைய போஸ்டை போடுங்கள்..

சுள்ளான் said...

//உனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் காஃபி குடிக்கிறாய்.
எனக்கு புத்துணர்ச்சி தேவைப்படும்
நேரங்களில் உன்னை
கட்டிப்பிடித்துக் கொள்கிறேன்.//


சான்சே இல்லை. செம லைன்ஸ்... கலக்கிட்டேங்க...
"அவங்களை" கேட்டதா சொல்லுங்க.

Vishnu said...

# அந்த ஒரு நொடியில்
இதுவரை என்னிடம்
நீ கொண்ட கோபம் எங்கே போயிற்று?
என்று கண்டுபிடிக்கும் பொறுப்பை
இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தால் கூட
அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. #

ஏன் சார் இந்திய ராணுவத்த தேவைல்லமா இழுகுரிங்க ? ........... இல்ல இதுக்கு முன்னாடி இந்தமாதிரி வேலை பார்த்துடு இருந்தோமா ? ....சார் . போலீஸ் மாமான்னு சொல்லுவாங்க .அதுக்காக மில்லிடரியேய் போய் மச்சான்னு சொல்லிடாதிங்க சார் ...........ப்ளீஸ் அது சரி இத்தன நாளா கடவுள தானே இலுபிங்க இப்போ என்ன புதுசா ........ வேணா. சார் பாவம் அந்த டிபார்மெண்ட்.

Vishnu said...

என்ன கனகராஜ் சார்... இப்படி ஏமாதிட்டேன்களே.... வெறும் வாழ்த்துக்களோடு நிறுத்திட்டீங்களே? இதுக்கா நான் இவ்ளோ கஷ்ட்டப்பட்டு இந்த பிளாக் ஓபன் பண்ணேன்? போங்க சார்..என்னை ஏமாத்திட்டீங்க... திட்றவங்க எப்பவுமே திட்டிக்கிட்டுதான் இருப்பாங்க. அதுக்கெல்லாம் Feel பண்ணாதீங்க. தயவு செஞ்சு நாளையில இருந்து உங்க சண்டைய ஆரம்பிங்க சார்... இல்லைன்னா நான் இனிமேல் கமென்ட் போடா மாட்டேன். இது மிஸ்டர் கே .கே. மேல (கவிதை காதலன் ) சத்தியம். ப்ளீஸ் சார் தயவு செஞ்சு சண்டை போடுங்க.

Vishnu said...

என்ன மிஸ் நதியா மேடம் நீங்களா அந்த கமென்ட் அனுப்புனீங்க? என்னால நம்பவே முடியலை. ஏன்னா அதுல ஒரு அட்வைசு கூட இல்லை . கனகராஜ் பேரு கூட வரல. எந்த ஜீனியஸ் புக் பேரு கூட வரலை. அதுனால நான் நம்பாம இருந்தேன். பட் அந்த so sweet வார்த்தைய வெச்சிதான் நீங்கன்னு கண்டுபிடிச்சேன் . ஏன் உங்க அப்பா இதுக்கு முன்னாடி ஸ்வீட் கடை ஏதாவது வெச்சிருந்தாரா? நேயர்களே நாளை பார்க்கவும்..... நதியாவின் கமென்ட்.....

Vishnu said...

என்ன தென்றல்.... இன்னைக்கு உங்க காத்தே அடிக்கலை? ஏன்?...... ஒகே..
"ரம்மி" ய கேட்டதா சொல்லுங்க.

ஹலோ உஷா அக்கா... &.. அனுமாலிகா.... என்ன உங்க கமெண்டை காணோம்? ஏன் கனகராஜ் ஏதாவது சொன்னாதான் நீங்க எல்லாம் கமென்ட் போடுவீங்களா? ஆகா மொத்தத்துல பிளாக்ல வர்ற விஷயத்துக்காக நீங்க கமென்ட் போடலை.. பாவம் அந்த "பால்" வடியுற மூஞ்சு கனகராஜ் ஏதாவது சொன்னா மட்டும் கையில டிகாஷனை எடுத்துகிட்டு டீ போடுறதுக்கு ரெண்டுபேரும், கிளாஸ் எடுத்திகிட்டு ரெண்டுபேரும் (நதியாவும், தென்றலும் ) வரிஞ்சுகட்டிகிட்டு வந்திடுறீங்க... டீ குடிக்கிறதுக்கு என்ன மாதிரி மத்த வாசகர் எல்லாம் வந்திடுறாங்க....

Vishnu said...

வாசகர்களே என்னை எதுவும் தப்பா நினைக்காதீங்க..இதுவரைக்கும் நான் கமென்ட் எதுவும் போடலை. அதனால்தான் மொத்தமா போட்டேன்.

வாசகர்களே ஒரு முக்கிய அறிவிப்பு....
"சும்மா கிடையாது" இது என்னுடைய டயலாக். ஆனா மிஸ் நதியா மேடம் இந்த டயலாக்கை திருடிட்டாங்க....

தென்றல் said...

எங்க தெருவுல ஒருவாரமா பால்காரன் வரலை. கொஞ்சம் உங்க ஃப்ரெண்டு மிஸ்டர் கனகராஜை எங்க தெரு பக்கம் அனுப்பி வையுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்

நலம் விரும்பி said...

உன்னை அறியாமல்
உன் தூக்கத்தின் இடையே
என் அருகே வந்து நீ என்னை
அணைத்துக் கொள்ளும்
அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
என்பதற்காகவே இரவு முழுவதும்
துங்காமல் விழித்திருப்பேன்.

Mr. K.K I am not able to choose which line is so sweet and very good , i am just confused to choose the lines to pick up ,

The above line is very superb

Mr. K.K superb i really enjoyed, i am not able to do anywork after reading this , your so good , so sweet, i dont have words to express, but simple superb, Hello. Mr. vishnu First of all why your coming to this blog your coming only to read Mr. K. K presentation rights , ஊரு இரண்ட பட்டாள் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் அவங்க சண்டையில நீங்க குளிர் காயுறீங்களா? இது உங்களுக்க இது நியாமா , பவம் சார் Ms. உஷா அக்கா, Ms. தென்றல் & Ms. அனுமாலிகா பாவம் சார் அவ்ங்க எல்லோரம் விட்டுரங்க அவங்க அவர்களுடைய கருத்துகள்தான் போடறாங்க . நீங்கள் ஒரு வாட்டி போட்டாலும் நூறு கமெண்ட்ஸ் போட்டதுக்கு சமமாயிடுச

மிஸ்டர் விஷ்ணு எங்க விட்டுகும் மறக்காம அனுப்புங்க ப்ளீஸ்................................................, பால் வாங்குற செலவு மிச்சம். ஓகே , வேன்னுமனால் உங்க மிலிடரிக்கும் குட்டிட்டு போங்க .......
முக்கியமான விஷயத்தை நீங்க சொல்லவே இல்லை. வழியுறது தண்ணி பாலா? திக்கான பாலா?

nadhiya said...

மிஸ்டர் விஷ்ணு... நேத்தே நான் உங்களுக்கு கமென்ட் அனுப்பணும்ன்னு நினைச்சேன். ஆனா நீங்க சொன்ன அந்த "ஒரு வார்த்தைய" கேட்ட உடனே எனக்கு "Heart Attack" எ வந்திடுச்சு.. முடியலை.. இப்போ வரைக்கும் என் நெஞ்சு வலிக்குது. அப்புறம் உங்க டயலாக்கை திருடிட்டேன்னு சொன்னீங்க இல்லையா? அது திருட்டு இல்லை. என் உரிமை. என் நண்பனோட ஒரு பொருளை எடுத்துக்கறதுக்கு நான் யார்கிட்டேயும் அனுமதி கேக்கணும்'ன்னு அவசியம் இல்லை...உங்க கிட்டகூட.... புரியுதா மிஸ்டர் மிலிட்டரி?

நிலாப்பெண் said...

ஏன் தென்றல்.... உங்க தெருவுக்கு மட்டும்தான் கனகராஜை எழுதி வெச்சிருக்கா? நாங்களும் கொண்டு போய் அவரை யூஉஸ் பண்ணிக்குவோம். நியாபகத்துல வெச்சுக்குங்க. இது இந்திய ராணுவத்து மேல சத்தியம்.

James said...

எங்க தானை தலைவன், தன்மான சிங்கம், "பால்" கொடுத்த பாரி வள்ளல், அவரை யாராவது தப்பா சொன்னீங்கன்னா அவங்க வீட்டுக்கு ஒரு வாராத்துக்கு பால் சப்ளை நிறுத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்... தல... ம்ம்ம்ம்.... கோதால குதிங்க...

எவனோ ஒருவன் said...

கவிதை காதலன் சார்.. இந்த கவிதை ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு.... உண்மைய சொல்லனும்ன்னா இந்த கவிதையை படிச்ச உடனே ஏதேதோ நியாபகங்கள் வந்திடுச்சு. ஒரு அழகான தாலாட்டு மாதிரிரி ரொம்ப சுகமா இருக்கு. தேங்க்ஸ். ப்ளீஸ் இந்த மாதிரி கவிதைகள் நிறைய எழுதுங்க...

rahul said...

சார் உங்களுக்கு கல்யாணமாயி எத்தனை வருஷம் இருக்கும்? இன்னமும் உங்க துணையை ரொம்ப நேசிக்கிறீங்க போல... சத்தியமா சொல்றேன்... நுஉத்துக்கு இருனுஉறு பர்சன்ட் சொல்றேன் நீங்க லவ் மேரேஜாதான் இருக்கணும்..

கவிதை காதலன் said...

ராகுல் சார்.... இந்திய ராணுவத்து மேல சத்தியமா சொல்றேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. சின்னப் பையன் சார் நான்..

Vishnu said...

ஓகே வாசகர்களே சண்டை போட வேண்டாம்.............. கனகராஜ் உங்க தெருவுக்கும் வருவார், வீடுக்கும் வருவார். பட் திருப்பி அனுபிடனும் ....... யாரப்பா அது தண்ணி பால ? நல்ல பால நு கேட்டது ? உண்மைல் அது நல்ல பால் தான் . அதுக்கு mr கே கே கேரண்டி. சும்மா கிடையாது ..........................

Anonymous said...

HATS OFF MONEY SIR....

நீ அணைக்கையில்
உன் கழுத்தோரம் மணக்கும்
வாசனைக்கு இணையான பெர்ஃயூம்,
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.

SHOULD SEARCH A NEW WORD TO APPRECIATE YU... :)

ALL THE VERY BEST.... KEEP POSTING

Vishnu said...

என்ன கனகராஜ் எதுவும் பேசமாட்டேன்குரிங்க ? புயலுகுமுன் அமேதி யா ? ஓகே ஓகே கலக்குங்க ..............

தமிழ் காதலன் said...

//எத்தனை வேதனைகளை
சுமந்தபடி வந்திருந்தாலும்,
உன் இறுகிய அணைப்பினால்
அத்தனை வலிகளையும் அழித்துவிடுகிறாய்.//


ஒவ்வொரு சராசரி மனிதனின் மனதினுள் வேதனைகள் என்பது கண்டிப்பாக படிந்திருக்கும் அத்தனையும் மறந்து போகிறோம் என்றால் அது துணையின் அன்பினூடே துளிர்க்கும் அணைப்பு மட்டுமே.


அத்தனை வலிகளையும் அழித்துவிடும்.

அன்பவ வாக்கியம் .

௧௩௩௦ இல் வள்ளுவர் சொல்லியது போல் ,

Pandiya said...

nice

Anonymous said...

ஆழகு மிக ஆழகு
கவிதை காதலன் இல்லை
இது காதலன் in கவிதை

Gowri said...

/* உன்னை அறியாமல்
உன் தூக்கத்தின் இடையே
என் அருகே வந்து நீ என்னை
அணைத்துக் கொள்ளும்
அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
என்பதற்காகவே இரவு முழுவதும்
துங்காமல் விழித்திருப்பேன். */ anna kavidha superb na idha vida adhigama neraya ethir pakra unga kita sister kaga oru sister touching kavidhaum ungaluku time kedaikum podhu eludhungale pls...

இதையும் படியுங்கள்