Monday, June 15, 2009

வேகா - ஒரு அசத்தல் அறிமுகம்

முதன் முதலாக வேகாவை சரோஜாவில் பார்த்த போது, ஒரு சின்னப் பெண் அழகாய் இருக்கிறாள், என்ற சராசரி எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால் சமீபத்தில் பசங்க திரைப்படத்தில் இவரை பார்க்கும் போது என்ன ஓர் ஆச்சர்யம்! நடிப்பிலும் தோற்றத்திலும் என்ன ஒரு முன்னேற்றம்... ஒரு சிறந்த இயக்குனரால் மட்டும்தான் ஒரு நடிகனுக்குள் இருக்கும் முழு திறமையை வெளிக் கொண்டு வர முடியும். வேகாவிற்கு அது இயக்குனர் பாண்டிராஜால் சாத்தியமாயிருக்கிறது.

வெறும் அழகு மட்டுமே ஒரு ரசிகனை கவர்ந்துவிட முடியும் என்றால் யுகத்தாமுகி'க்களும், லாரா தத்தாக்களும் போதுமே.. ரசிகனுக்கு அழகையும் தாண்டி ஒரு ஈர்ப்பு தேவைப்படுகிறது. அப்படி ஒரு ஈர்ப்பு நிச்சயம் வேகாவிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.

பசங்க திரைப்படத்தில் பாராட்டுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், முக்கியமாய் குறிப்பிட வேண்டிய ஒன்று வேகாவின் எக்ஸ்பிரஷன்கள். வெள்ளந்தி சிரிப்பை இவர் வெள்ளமாய் அள்ளித்தரும் போது நமக்கே பரவசமாய் இருக்கிறது. மீராஜாஸ்மினுக்கு பிறகு பொய் கலப்பில்லாமல், வெகு இயல்பாய் சிரிக்க இதோ இன்னொரு நடிகை நமக்கு கிடைத்து விட்டார்.

ஏன் உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்னை ஓட்றாங்க? என்றபடியே இவர் முகம் சுழிக்கும் காட்சி கொள்ளை அழகு. "ஒரு வெட்கம் வருதே" பாடல் காட்சியில் வேகா நம் அனைவரது மனதையும் க்ளோரோஃபார்ம் இன்றி மயக்கி போகிறார். இந்த பாடல் இன்னும் சில நாட்களுக்கு பல பேரின் ரிங் டோனாகவும், காலர் டியூனாகவும் இருக்கும் என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. இரண்டு புருவங்களையும் வேகா ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி காட்டுவது அற்புதம். எனக்கு தெரிந்து தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் பத்மினி அவர்கள் இந்த மாதிரி செய்தார்கள். மிகக் கடினமான ஒன்று. வேகா அதை அனாயாசமாக செய்யும் போது நம் புருவங்கள் ஆச்சர்யத்தில் உயர்கின்றன.

"பிள்ளைங்களால கை விடப்பட்ட தாய்க்கு, நீ ஒரு வேளைக்காவது மகனா இருந்திருக்கே" அதை நினைச்சு பாரு, உன் மனசுக்கு கஷ்டமே வராது" என்று வேகா சொல்லுமிடத்தில் நாமும் அதை யோசித்து பார்க்கிறோம். விமலின் அண்ணனிடம் தொலைபேசியில் பேசுமிடத்தில் வேகா பின்னி இருக்கிறார். என்னை இப்படி பைத்தியக்காரி மாதிரி புலம்ப வெச்சிட்டியேடா'ன்னு சொல்லும்போது நமக்கே இயல்பாய் சிரிப்பு வருகிறது. அந்த காந்தக்கண்களில் தான் எத்தனை எத்தனை எக்ஸ்பிரஷன்கள். விழிச் சிறையில் நம்மை எளிதாக அரெஸ்ட் செய்து போகிறார் வேகா. சோபிக்கண்ணு.... சூப்பராக சோபித்திருக்கிறார்....

நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களும், எது பேச ஆரம்பித்தாலும் உடனடியாய் உதட்டில் குடி புகும் அவரது சிரிப்பும் மிகப்பெரிய பிளஸ். இயல்பான உடைகளும், அளவுக்கு மீறாத மேக்கப்பும், வேகாவின் அழகை ஒருபடி உயர்த்திக் காட்டுகின்றன. உதட்டு சுழிப்பிலும், விமலிடத்தில் கொள்ளும் மெல்லிய கோபத்திலும் இன்னும் அழகாய் தெரிகிறார் வேகா.

ஒரு ரசிகனுக்கும் நடிகைக்கும் இடையேயான தூரம் மிக தொலைவு. அந்த இடைவெளி வேகாவுக்கும் நமக்கும் இடையில் நிச்சயமாய் இல்லை. என்னமோ பல நாட்கள் நம்முடன் பழகிய தோழியைப் போல் வேகா இருப்பது ஒரு Sweet Feel. வேகா அந்த "ஸ்கூட்டி பெப்ட்" ஓட்டி செல்கையில் எனக்கும் கொஞ்சம் லிஃப்ட் கொடுங்களேன் என்று கெஞ்சுகிறது மனம். அந்த அளவிற்கு யதார்த்தத்துடன் நம்மை நோக்கி பயணிக்க வைக்கிறார் வேகா.

ரசிகனுக்கு ஒரு நடிகையின் மீதான ரசனை என்பது, ஆடைக்குறைப்பில் இல்லை என்பதை சில அரைவேக்காடு இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பால்வாடியில் குழந்தைகளுக்கு வேகா பாடம் சொல்லித்தரும் அழகிற்காகவாவது நாமும் அந்த குழந்தைகளாக மாறிப்போகலாம். (ஆமா, அந்த பால்வாடி எங்க இருக்கு?)

வேகாவிற்கு ஒரு வேண்டுகோள்... உங்களிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் இது போல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால், ரசிகர்களின் இதயத்தில் நிச்சயம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கும். தயவு செய்து அரைகுறை ஆடைகளையும், ஐட்டம் பாடல்களையும், நம்பாதீர்கள். தமிழ் சினிமாவின் கவர்ச்சி அலையில் நீங்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதே எங்களின் விருப்பம்.


வேகா - முழு வோட்கா பருகியதைப் போல் திருப்தி தருகிறார்.

30 comments:

Budthu said...

Really Nice machi,

பொண்ணுகள பற்றி பட்டி மன்றம் வைத்தால் நடுவராக செயல்பட உனக்கு மட்டுமே தகுதி இருக்கிறது கவிதை காதலா......

சோபிக்கண்ணு உங்க அம்மாவை சுத்திபோட சொல்லுங்க, மிஸ்டர் மணி யோட கண்ணு மோசமான கண்ணு.......

நிலாப்பெண் said...

என்னோட காலர் டியுன் இந்த பாட்டுதான்... நைஸ்..

usha said...

உன் திறமைக்கு என் வாழ்த்துக்கள்

usha said...

நதியா உங்களுடைய கமெண்ட்ஸ் காணோம் ? நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

Anonymous said...

// பொண்ணுகள பற்றி பட்டி மன்றம் வைத்தால் நடுவராக செயல்பட உனக்கு மட்டுமே தகுதி இருக்கிறது கவிதை காதலா......//


Well said Mr.Budthu.... இவர் சொன்னதை நானும் வழி மொழிகிறேன். வர்ணிக்கரதுக்கு ஒரு அளவு இல்லை. வேகாவே வெட்கப் படுற மாதிரி இல்லை எழுதி இருக்கீங்க. உண்மைய சொல்லனும்னா நானும் உங்களை மாதிரியே நானும் இந்த பொன்னை ரொம்ப ரசிச்சேன்.

rahul said...

// பால்வாடியில் குழந்தைகளுக்கு வேகா பாடம் சொல்லித்தரும் அழகிற்காகவாவது நாமும் அந்த குழந்தைகளாக மாறிப்போகலாம். (ஆமா, அந்த பால்வாடி எங்க இருக்கு?)//


சார்... உங்களால மட்டும் எப்படி முடியுது? வீட்டுல சொல்லி சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க...

usha said...

Mr. rahul and Mr. Budthu i thought we are here to encourage kavithai kadhalan not as a alliance fixer

கவிதை காதலன் said...

உஷா மேடம் நன்றி... நீங்க என் பிளாக்குக்கு வர்றது என்னோட பதிவுகளை படிக்கறதுக்கா? இல்லை நதியாவோட கமெண்டுகளை படிக்கறதுக்கா?

ராகுல் சார்.. உங்க Approch எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

archana said...

வேகா சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்காங்க. உங்க Analize ரொம்ப அழகா இருக்கு.... Keep it up

aarthi said...

//என்னமோ பல நாட்கள் நம்முடன் பழகிய தோழியைப் போல் வேகா இருப்பது ஒரு Sweet Feel. வேகா அந்த "ஸ்கூட்டி பெப்ட்" ஓட்டி செல்கையில் எனக்கும் கொஞ்சம் லிஃப்ட் கொடுங்களேன் என்று கெஞ்சுகிறது மனம்.//

இந்த வரிகள் எதையோ சொல்ல வர்ற மாதிரி இருக்கே...

"Scooty Pept" வரைக்கும் நுணுக்கமா ரசிச்சிருக்கீங்கண்ணா..... ம்ம்ம்ம்...

usha said...

உங்களுடைய பிளாக் - இல உங்க படைப்புகள் சூப்பர் என்றில் அதிலயும் நதி அவர்களுடைய கமெண்ட்ஸ் இன்னும் பின்னி பெடலடுக்குது

nadhiya said...

நான் என்ன எல்லாம் வேகாவை பத்தி நினைச்சேனோ, அது எல்லாமே உங்க விமர்சனத்துல ரொம்ப அழகா வெளிப்பட்டிருக்கு. அதுவும் அவங்களோட "அந்த புருவம் அசைக்கிற ஸ்டைல்" செம க்யூட்... சண்டை கோழி படத்தை தவிர, மத்த படங்கள்ல மீரா ஜாஸ்மின் சிரிப்புல ஒரு போலித்தனம் இருக்கும். "பாடம் ஒன்னு ஒரு விலாபம்" படத்துலதான் மீராவோட ஒரிஜினாலிட்டியை பார்க்க முடியும். தமிழ்ல ரொம்ப அழகான சிரிப்புன்னா ஷோபா'வை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

// "பிள்ளைங்களால கை விடப்பட்ட தாய்க்கு, நீ ஒரு வேளைக்காவது மகனா இருந்திருக்கே" அதை நினைச்சு பாரு, உன் மனசுக்கு கஷ்டமே வராது" //

ஒரு சாதாரண காட்சியை கூட இந்த வசனத்தால டைரக்டர் எங்கேயோ கொண்டு போயிருப்பாரு. Very Nice. வெறும் அழகுப்பதுமையா மட்டும் இல்லாம வேகாவுக்கு "நடிக்கவும்" வர்றது Sweet Shock. Basic'a வேகா ஒரு Economist.அது தெரியுமா உங்களுக்கு?

//சோபிக்கண்ணு.... சூப்பராக சோபித்திருக்கிறார்....//

//வேகா - முழு வோட்கா பருகியதைப் போல் திருப்தி தருகிறார்.
//
//விழிச் சிறையில் நம்மை எளிதாக அரெஸ்ட் செய்து போகிறார் வேகா. //

பன்ச் எல்லாம் பக்காவா இருக்கு...

nadhiya said...

சார் வாழ்த்துக்கள்... இப்பத்தான் பார்த்தேன். தமிழிழ்ல உங்களோட இந்த போஸ்ட், 17 வோட்ஸ் வாங்கி செலக்ட் ஆகிடுச்சு.. Keep it up.

nadhiya said...

என்னோட காலர் Tune இந்த பாட்டு இல்லை. ஆனா ரிங் டோனா இந்தப் பாட்டைத்தான் வெச்சிருக்கேன். Very Nice. டைட்டானிக் படத்தோட தீம் ஸ்கோர் அதுக்கு அப்புறம் As Good as It Gets திரைப்படத்தில் வரும் மைனர் நோட்சும் இந்த பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்திருக்கும். Sounds cool..

கலையரசன் said...

ஒகே, எது எதுகோ சொல்றோம்.,
இதுக்கும் சொல்லுவோம்.....
வாழ்த்துக்கள்!!

எங்கள் தான தலைவி...
தன்மான புதல்வி..
வேகாவை பத்தி எழுதியதற்க்காக!!

Joe said...

//
வேகா - முழு வோட்கா பருகியதைப் போல் திருப்தி தருகிறார்.
//

சென்னையில நல்ல வோட்கா (Smirnoff, Absolut) கெடைக்கவே மாட்டேங்கிது, இந்த மாதிரி திருப்திபட்டுக்க வேண்டியது தான்.

ஊர்சுற்றி said...

நான் வேகாவை இன்னும் 'பசங்க'வில் பார்க்கவில்லை - பார்த்துவிட்டு முடிவெடுக்கிறேன்...

Raj said...

அண்ணே..நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்தான்....ஆனா வீட்ல சொல்லி சீக்கிரம் பொண்ணு பார்க்க சொல்லுங்க....இப்படியே போனா அப்புறம் வேகாவைத்தான் கல்யாணம் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நிப்பீங்க போல

தமிழ் காதலன் said...

// "பிள்ளைங்களால கை விடப்பட்ட தாய்க்கு, நீ ஒரு வேளைக்காவது மகனா இருந்திருக்கே" அதை நினைச்சு பாரு, உன் மனசுக்கு கஷ்டமே வராது" //

கண்டிப்பா எல்லோரையும் பாதிக்கும் வாக்கியம் . பாண்டிராஜ் மிகவும் அருமையாக வசனம் எழுதியிருக்கிறார் , மணியின் விமர்சனம் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

nalamvirumbi said...

good

சுபானு said...

//ரசிகனுக்கு ஒரு நடிகையின் மீதான ரசனை என்பது, ஆடைக்குறைப்பில் இல்லை என்பதை சில அரைவேக்காடு இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அருமையான படம்.. நல்லாயிருக்கு விமர்சனம்..

நலம் விரும்பி said...

Mr. Kankaraj why you become silent , where is your comments?

viji said...

super da chella kutty :-)

viji akka

Vishnu said...

ஆகா மொத்ததுல உங்க விமர்சனத படிக்க யாரும் உங்களுடைய ப்லோக் ஓபன் பண்ணுறது இல்ல.........(நீங்க போட்ட விமர்சனதவிட உங்களுக்கு வர்ற விமர்சனம் பெருசா இருக்கே ) ஆனா இந்த டீலிங் எனக்கு ரொன்ப புடிச்சிருக்கு ........... mr. கே கே ( கவிதை காதலன் )

robert said...

பெரும் மதிப்பிற்குரிய கவிதை காதலனுக்கு, உங்களுடைய ப்ளாக் எல்லா வற்றையும் படித்து கொண்டு இருக்கும் உங்களுடைய வாசகர், உங்களுடைய போஸ்ட் ஐ படிக்கும் போதெல்லாம் கமெண்ட் போடனும்னு ரொம்ப ஆசையா இருக்கும் , ஆனால் ரியல் எஸ்டேட் சமத்தப்பட்ட தொழில் செய்வதால் கமெண்ட் போட நேரம் கிடைப்பது ரொம்ப கஷ்டம்..

முதேல்யே பசங்க படம் பாத்தேன் ஆனால் இந்த அளவுக்கு ரசித்து பார்க்கவில்லை, உங்களுடைய போஸ்டை பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன், வேகா இவள்ளவு சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று, அதுக்கு அப்புறம் நீங்கள் சொன்னதை குறித்து கொண்டு மற்றொரு முறை பசங்க படம் பாத்தேன் நீங்க சொன்ன அத்தனயும் ரொம்ப கரெக்ட், என்னகு தெரிந்து நோட்ஸ் எடுத்துக்குட்டு, அதை பாத்து கொண்டே படத்தை பார்த்தவன் நானாகத்தான் இருப்பேன்,

ஒரு நல்ல படத்தை முழு திருப்தியோடு பார்க்க வைத்த உங்களுக்கு மிக்க நன்றி.

nadhiya said...
This comment has been removed by the author.
ஷோபிகண்ணு said...

உங்கள மாதிரிதான் எனக்கும்.அந்த கேரக்டர் எனக்கு ரொம்ப புடிச்சி போனதால கொஞ்ச நாள் " ஷோபிகண்ணு" அப்படிங்கிற பேர்ல எழுத எழுதிகிட்டிருக்கேன். அந்த அளவுக்கு புடிச்சி போச்சு..... சூப்பரோ சூப்பர்..

##$$# said...

na oru ponnai kathalithyen avalum ennai kathalithlal ..just 6 month ah
eppo ava enkuda sanda potu poita enna vitu... enaku vayasu 19 avaluku 18..
na avala pakameye love panna just photo than pathu irka ..eppo ennala avakuda pesama irka mudeyala
ana ava mattum enkuda pesama irka ponnugalala mattum athu eppadi mudeuthu
ava mopile no mail id ellam change pannita ,, ennala avakuda pesama irkamudeyala thinamum aluthutu irka..i cut my hand also..
1 time sucide kuda atten panna
1 weak college kuda pogala.. first 3 days sapdave illa..
na enna pannaranu enakeye theriyala
sethudalanu irku,,
ana ava mattum epadi irka enkuda pesama ..
love panna thappa,,,
ava enkuda kadaisiya pesum pothu ava innoru pyyana love panra enna disturp pannatha nu solitu poita ,,,ava varuvala ... na enna panarathu ,,

ரிஷபன்Meena said...

விமர்சனம் அருமை.

பாசாங்கில்லாத எளிமையான விமர்சனம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைவரே, நம்ம வேகாவுக்கு என்னதான் ஆச்சு? எந்தப்படத்திலேயும் நடிக்கலையா? எனி அப்டேட்ஸ்?

இதையும் படியுங்கள்