Wednesday, June 10, 2009

ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.

2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து வாங்குவாள்.

4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...

6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)
7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு, கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....


8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.

9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்" எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?

10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.

12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)

14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்.

இப்போதைக்கு இது போதும்.... அடுத்த பதிவுல இன்னும் இதைப்பத்தி பேசுவோம்


40 comments:

Vijay Anand said...

காதலர்கள் சார்பில் வீட்டுக்கு ஆட்டோ வர போகுது ....

"அகநாழிகை" said...

ம்ம்ம்... நடக்கட்டும், நடக்கட்டும்.
பொறாமையா இருக்குங்க.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆளவந்தான் said...

பொண்ணுங்களைபத்தி பி.ஹெச்.டி பண்ண மாதிரி எழுதி இருக்கீங்க.. சூப்பர்..

நர்சிம் said...

லேபிள்ல காதல் டிப்ஸ்னு போட்டுட்டு... போட்டுகொடுக்குறடிப்ஸ் மாதிரி இல்ல இருக்கு.. நல்லா இருக்கு எல்லாப் பாயிண்ட்டும்

அனுமாலிகா said...

எங்க அப்பா அம்மா படிச்சா அவ்வளவுதான். ஏன்யா உங்களுக்கு இந்த வேலை? ஏற்கனவே நாங்க எல்லாம் சந்தேக லிஸ்ட்ல இருக்கோம். இதுல நீங்க வேறயா? அகில உலக பெண்கள் சார்பா உங்களை கண்டிக்கிறோம். உங்களுக்கு லவ்வரே கிடைக்க கூடாது

Arvind said...

இந்த மேட்டர் சூப்பரா இருக்கு. இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதுனாலதான் பல பேரை மயக்கி வெச்சிருக்கீங்க போல... எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க பாஸ்...

tamilcinema said...

யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.|||||||

யப்பா சாமி நீங்க, காதலில் டாக்ரேட்டே முடிச்சாச்சு போல..

James said...

//"வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)//

sirichchu sirichchu vayiru valichchuduchu...

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு பாசு.. ஆனா இது பெத்தவங்க கிட்ட போட்டுக் கொடுக்குற பதிவு மாதிரில இருக்கு

சுரேஷ் குமார் said...

அது சரி..

//
இப்போதைக்கு இது போதும்.... அடுத்த பதிவுல இன்னும் இதைப்பத்தி பேசுவோம்
//

அடுத்த பதிவுளையுமாஆஆஆஆஆ ..
ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்..

நாமக்கல் சிபி said...

தெரியாம போச்சே இத்தனை நாள்!

அன்புடன் அருணா said...

ம்ம்ம்..நடத்துங்க...நடத்துங்க!!!!

வினோத்குமார் said...

ennappa chinna pulla thanama irukku...

naanga ellam eppadi kathal panurathu,...

ipadi potu kodutha

நிலாப்பெண் said...

இதுக்குத்தான் அதிகமா பொம்பளை புள்ளைங்க கூட அதிகமா உங்களை மாதிரி ஆளுங்களை பழகவிடக் கூடாதுங்கிறது.. கடைசியில பொண்ணுங்களை இப்படி போட்டு கொடுத்துட்டீங்களே...

சென்ஷி said...

என்ன தலைவா பசங்களுக்கு ஏதும் ஐடியா கொடுத்திருப்பேன்னு பார்த்தா எல்லாம் போட்டு கொடுக்குற வேலையால்ல இருக்குது :)

கவிதை காதலன் said...

பசங்களுக்கு Already ஐடியா குடுத்திருக்கேன் சென்ஷி... பாருங்க....

மௌனமான நேரம் said...

எப்படிங்க இவ்வளவு அழகா ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க?

சுபானு said...

:)

சுபானு said...

நல்ல ஆராய்ச்சி

radha said...

unkal arachi arumai

yeskay said...

இந்த பொண்ணுங்களே இப்படி தான் பாஸ் ... குத்துங்க எஜமான் குத்துங்க ....

பாலாஜி!!! said...

// சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.//

வாய்ப்பே இல்லை! கலக்கறீங்க! ரொம்ப அனுபவமா?

பாலாஜி!!! said...

// சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம். //


வாய்ப்பே இல்லை! கலக்கறீங்க! ரொம்ப அனுபவமா?

தமிழ் காதலன் said...

அத்தனை அனுபவமா
தொடர்க . ...................

Arvind said...

பொண்ணுங்க பசங்களை ஏமாத்திட்டு ஓடுறதை கண்டுபிடிக்க ஏதாவது டிப்ஸ் வெச்சிருக்கீங்களா? ப்ளீஸ் சொல்லுங்க. நாட்ல பல பேருக்கு யூஸ் ஃபுல்லா இருக்கும்.

nadhiya said...

//எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை.//

எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா?....

//"வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. //

அதுதான் எனக்கும் புரியலை. காதலிச்சாதான் இவங்களுக்கு வைரமுத்து, கண்ணதாசன், வானம், கடல், மேகம் எல்லாம் தெரியும் போல...

ஆனா இதையெல்லாம் நோட் பண்ணி நீங்க எழுதி இருக்கீங்கன்னா.... ம்ம்ம்ம்.... சும்மா கிடையாது.....

nadhiya said...

//பொண்ணுங்க பசங்களை ஏமாத்திட்டு ஓடுறதை கண்டுபிடிக்க ஏதாவது டிப்ஸ் வெச்சிருக்கீங்களா? ப்ளீஸ் சொல்லுங்க.//

மிஸ்டர் அர்விந்த்... நீங்க சொல்றதைப் பார்த்தா பசங்க எல்லாம் என்னமோ உத்தமபுத்திரனுங்க மாதிரியும், பொண்ணுங்க எல்லாம் ஏமாத்துகாரங்க மாதிரியும் இல்ல இருக்கு. நாட்ல தப்பு பண்ற பொண்ணுங்களும் இருக்காங்க. பையன்களும் இருக்காங்க. அதுக்காக ஒரேடியா பொண்ணுங்களை தப்பு சொல்லாதீங்க. இங்க யாரு சார் சின்சியரா இருக்கா? எல்லாரும் பிராக்டிகலா வாழத்தான் பார்க்கறாங்க.. ஒரே ஒருத்தரை மனசார நேசிக்கிற ஒரே ஒரு ஜீவனை காட்டுங்க பார்க்கலாம். இவ இல்லைன்னா அடுத்தவ... இவன் இல்லைன்னா அடுத்தவன். என்னமோ
டிபார்ட் மெண்டல் ஸ்டோர்ல மளிகை சாமான் வாங்குற மாதிரி ஆகிப்போச்சு காதல். சுஜாதா சொன்ன மாதிரி No one perfect here.

தென்றல் said...

ம்ம்ம்ம்... வாங்க நதியா... வாங்க... என்னடா பிளாக்'ல இன்னும் அடிதடி ஆரம்பிக்கலியேன்னு பார்த்தேன். நதியா வந்தாதான்பா பிளாக் கலை கட்டுது. ம்ம்ம்ம்ம்.. யோசனை மஞ்சு வாண்டுதான்...

chitra said...

its really fantastic

ஊர்சுற்றி said...

இம்புட்டு நாளா இந்த மேட்டரெல்லாம் தெரியாம்ப் போயிடுத்தே!!!

சிலதுகள் உண்மையாலுமே நடக்குதோன்னு ஒரு சின்ன சந்தேகம்!!! :)))

Thamizhmaangani said...

காமெடியா எழுதுறீங்கப்பா! வாழ்த்துகள்.
இப்படி எல்லா உண்மைகளையும் போட்டு உடைச்சா, பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க?
ஹிஹி...

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

\\
சென்ஷி said...
என்ன தலைவா பசங்களுக்கு ஏதும் ஐடியா கொடுத்திருப்பேன்னு பார்த்தா எல்லாம் போட்டு கொடுக்குற வேலையால்ல இருக்குது :)
\\

ரிப்பீட்டு!! :)

கவிதை கிறுக்கன் said...

Good ...

appadiye koncham ingaum visit pannunga

http://ungaludan.blogspot.com/.

Anonymous said...

creating problems between parents and us....

romba nalla ennam...

keep it up sir...

ஷோபிகண்ணு said...

//கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம்.//
பில்லு வருமா இல்ல அது கூட வராதாமா?

Anonymous said...

யோசனை மஞ்சு வாண்டுதான்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

தாயே ஜக்கம்மா.. இந்த பதிவருக்கு காதலர் சார்பா தக்க பரிசு(!!!) கொடும்மா!!!

gowri said...

அட சாமி love ku tips தர மாதிரி parents ku information pass பன்றீஙகளே பாவம் lovers...

Ram said...

வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்.


Chansae ella THALAIVA U R GREAT

இதையும் படியுங்கள்