
உன்னைவிட பேரழகு
ஒன்றும் இல்லை
இந்த உலகத்தில் எனக்கு...
நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி
அணைக்க தூண்டும் அழகு இல்லை...
ஆனாலும் பழகியவுடன் அள்ளிக் கொஞ்ச
தோன்றும் என் செல்லகுட்டி நீ...
எதோ காரணங்களுக்காய் சண்டையிட்டு
என்னிடம் பேசாமல் இருக்கிறாய்.
நீயாய் பேசுவாய் என நானும்,
நானாய் பேசுவேன் என நீயும்,
ஈகோ நண்பனை தோளில்
சுமந்தபடி காத்திருக்கிறோம்.
கோபம் கொள்ளும் நேரங்களில்
ஏதேதோ காரணங்கள் கொண்டு
உன்னிடம் பேச வருவேன்.
மிக இயல்பாய் என்னை
மரியாதையாய் அழைப்பாய்.
அது எதோ அந்நியப்படுதல் போலிருந்தாலும்,
அதிலும் ஒரு அழகுணர்ச்சி இருக்கும்.
உன்னை தவிர்க்க வேண்டும் என நினைத்து
நான் செய்யும் அத்தனை காரியங்களிலும்
நீயே தெரிவாய்.
நம் கோபங்களின் முடிவு எப்போதும்
முத்தங்களை நோக்கியதாகவே இருக்கிறது.
அதனால்தான் அடிக்கடி உன்னுடன்
கோபம் கொள்ளவேண்டும் போல் இருக்கிறது.
உன் கோபங்களோடுதான்
எனக்கு திருமணம் என்றவுடன்,
அந்த கோபத்தை தூக்கி எறிந்துவிட்டு,
என்னை தவிர நீ வேறு யாரையும் திருமணம்
செய்து கொள்ள கூடாது என்று என்னை
இறுக்கி அணைத்து கொள்கிறாய்.
Chooooo.... Chweeeeet....
ஆனாலும் உன்னைவிட உன்
கோபங்களைதான் எனக்கு பிடித்திருக்கிறது,
காரணம் அவைதானே உன் முத்த சாலைக்கு
என்னை வழி நடத்தி செல்கின்றன.

இதோ உன்னுடன் அடுத்த
சண்டைக்கு தயாராகி விட்டேன்.
பின் என்ன? யாரைக் கேட்டு உன்
பக்கத்து வீட்டுக் குழந்தையை
தூக்கி கொஞ்சினாய்?
எனக்கு மட்டுமே சொந்தமான
உன் முத்தங்களை அதற்கு
பரிசாகவும் தருகிறாயே?
இது நியாயமா சொல்..
அப்பாடி சண்டைக்கு ஒரு காரணம்
கிடைத்து விட்டது. இது போதும்...
எனக்கு சொந்தமான ஒன்றை மற்றவர்கள்
பயன்படுத்தினால் எனக்கு பிடிக்காது.
அதனால்தான் உன் ஆடைகளின் மீது கூட
ஆத்திரம் எனக்கு...
என்னுடன்தான் கோபம் உனக்கு..
என்ன பாவம் செய்தன என் செல்ஃபோன்?
உன் SMS இன்றி செத்துப் போய்விட்டது
என் இன்பாக்ஸ்.
உன் குரல் கேட்காமல்
என் வோடாஃபோனின் நாய்க்குட்டி
கூட தொலைந்து போய் விட்டது.
தயவு செய்து எவ்வளவு வேண்டுமானாலும்
என்னிடம் சண்டையிடு...
ஆனால் பேசாமல் மட்டும் இருக்காதே
உன்னுடன் பேசா நாட்களில்
என் நாட்காட்டி வேலை நிறுத்தம் செய்கிறது.
உன்னுடன் பேசிவிட்டு
உடனே மறந்துவிடுகின்றேன். ஆனால்,
உன்னுடன் கோபம் கொள்ளும் நேரங்களில்
நாள் முழுவதும் உன்னையே
நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
அதனால்தான் என்னவோ உன்
கோபங்களை மிக ரசிக்கிறேன்.
உன் சண்டையின் நீட்சியான
சமாதானங்கள் எப்போதுமே
சுவாரஸ்யமானதாகத்தான் இருக்கிறது.
என்னுடன் சண்டையிட்டு விட்டாய்,
இனி தயாராய் இரு, முத்த சமாதானங்களோடு...
அவ்வளவு சீக்கிரம் சமாதானம்
அடைந்து விடுபவன் இல்லை நான் .
42 comments:
ரொம்ப அழகா இருக்கு.. தொடர்ந்து எழுதுங்கள்..
//நம் கோபங்களின் முடிவு எப்போதும்
முத்தங்களை நோக்கியதாகவே இருக்கிறது.
அதனால்தான் அடிக்கடி உன்னுடன்
கோபம் கொள்ளவேண்டும் போல் இருக்கிறது. //
அப்போ... சார் அடிக்கடி சண்டை போடுவீங்க போல இருக்கே? அவங்களும் உங்களை அடிக்கடி சமாதானப் படுத்துவாங்க போல இருக்கே.. ம்ம்ம்ம்... குடுத்து வெச்சவரு நீங்க..
யாருக்கு இந்த லெட்டர்?
சூப்பர்.. சார் ஒரு சின்ன Request, விமர்சனம், கதை, இதெல்லாம் எழுதறதுக்கு நிறைய பேரு இருக்காங்க. But இந்த மாதிரி ரொம்ப யதார்த்தமான் கவிதைகள் எழுதறதுக்கு நிறைய பேரு இல்லை. So, ப்ளீஸ் நிறைய இந்த மாதிரி கவிதைகள் எழுதுங்க.... ரொம்ப இயல்பா, காதலை நேச்சுரலா அனுபவிக்கிற மாதிரி இருக்கு உங்க வரிகள். கவிதை காதலன்ன்னு பேரு வெச்சிகிட்டு கவிதைகள் எழுதலைன்ன எப்படி சார்?
பொதுவா உங்க கவிதைகள்ல தெரியுற ஒரு ஊடகவியல் தன்மையை மீறி, இந்த கவிதைகள்'ல ஒரு யதார்த்தம் + சுயநிலை வெளிப்பாடு கொஞ்சம் அதிகமா தெரியுதே ஏன்?
நீங்க லவ் பண்றீங்களா? அப்படி இப்படின்னு நான் உங்களை கேள்வி எல்லாம் கேட்க மாட்டேன். ஏன்னா எனக்கு தெரியும். "காதலிக்காதவனின் இதயத்திலிருந்து கவிதைகள் பிறப்பதில்லை' அப்படின்னு மில்டன் சொல்லி இருக்காரு.
(மணி சார், நீங்க எழுதப்போற நட்பு பத்தின கவிதைக்காக ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணி கிட்டு இருக்கேன். )
Its Cute.. so nice.. very touchy.. keep it up. i enjoyed this poem lot
கவிஞர் தாமரை கூட இந்த மாதிரிதான் ரொம்ப இயல்பான வார்த்தைகளால்தான் கவிதைகள் எழுதுவாங்க. உங்க ஸ்டைலும் அப்படியே இருக்கு.. இந்த நடையை மாத்திக்காதீங்க...
ஹலோ... உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி ஃபோட்டோஸ் கிடைக்குது? எங்க இருந்து எடுக்கறீங்க? எல்லாமே அசத்தல்.. தலைப்பும் அட்டகாசம்.. பின்றீங்க.. "உன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்." Extreme' ஆ ஒருத்தரை நேசிக்கிற ஒரு காதலனாலத்தான் இப்படி ஒரு டைட்டில் வைக்க முடியும்.
நான் கூட சொல்லனும்னு நினைச்சேன். அந்த ஃ பர்ஸ்ட் ஃபோட்டோ செமையா இருக்கு. டைட்டிலுக்கு ஏத்த Picture..
உன் மனைவி உலக அழகியாகவே இருந்தாலும், உன் மோகம் தீர்ந்தபின் நிச்சயம் ரசிக்க மாட்டாய். தூக்கத்தைதான் தேடுவாய். காமம் தீர்ந்த அடுத்த கணத்தில் மனைவி தொட்டால் கூட தள்ளிப்படுக்கத்தான் தோன்றும். இதை நான் சொல்லலை. ஒரு மிகப்பெரிய கவிஞர் சொல்லி இருக்காரு. அது யாருன்னு உங்களுக்கே தெரியும். So, இந்த காதல் அது இது எல்லாம் சும்மா பைத்தியக்காரத்தனம். காமத்துக்குதான் நாம எல்லாம் காதல்ன்னு பேரு வெச்சி சுத்திகிட்டு இருக்கோம்.
மிஸ்டர் கிஷோர்... நீங்க சொன்ன அத்தனையும் கரெக்ட்தான். நான் இல்லைன்னு சொல்ல வரலை. நீங்க சொன்ன அந்த கவிஞர் யாருன்னு எனக்கும் தெரியும்.. ஒரு பக்கத்தை மட்டும் படிச்சிட்டு பேசாதீங்க. அதே புத்தகத்துல 47 வது பக்கத்துல இருக்கிற இன்னொரு கவிதையை படிங்க. அப்புறமா பேசுங்க. See, இந்த உலகத்துல நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. ஒரு கண்ணோட்டத்தோட மட்டும் பார்க்காதீங்க. காமத்தோட ஆரம்பம்தான் காதல். நான் இல்லைன்னு சொல்ல வரலை. காமம் மட்டும் இல்லைன்னா நீங்களும் இல்லை, நானும் இல்லை, ஏன் இந்த உலகமே இல்லை. "நாம் அனைவரும் காமத்தால் காறி துப்பப்பட்டவர்கள்" இந்த கவிதையை படிச்சிருக்கீங்களா? அதுக்காக 24 மணிநேரமும் அதைப்பத்தியே பேசிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை. காதல் போர்வையாலத்தான் காமத்தை நாம சுத்தி வெச்சிருக்கோம் அப்படின்னு சொல்றீங்க. அதையே ஏன் நாம இப்படி யோசிக்க கூடாது? காமம்'ங்கிற பரிசை காதல்ங்கிற அழகான துணியால சுத்தி கடவுள் நம்ம கிட்ட கொடுத்திருக்கார் ன்னு ஏன் சொல்லக் கூடாது?
ஒருத்தன் ஒரு பொண்ணை லவ் பண்றது காமத்துக்காகன்னு நீங்க சொல்றீங்க. சரி உங்கவாதப்படியே வந்தாலும், ஒரு கட்டத்துல அந்தக்காதல் தோல்வி அடைஞ்சி, வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிற சுழ்நிலை வந்து அவ கூட வாழ்ந்துகிட்டு இருக்கிறான்னு வெச்சுக்குவோமே.... இப்போ அவனுடைய காமம் சம்மந்தப்பட்ட தேவைகள் எல்லாமே இன்னொரு பொண்ணால நிறைவேறிடுச்சுன்னு தானே அர்த்தம். அப்புறம் எதுக்கு சார் அவன் இன்னமும் தான் காதலிச்ச பொண்ணையே நினைச்சுகிட்டு இருக்கனும்? இன்னமும் முதல் காதலோட வலிகளை மனசுல சுமந்துகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கிற எத்தனையோ கோடி பேரு நம்ம நாட்டுல இருக்காங்க. வெறும் உடம்பை பகிர்ந்துக்கறது மட்டும் வாழ்க்கை இல்லை. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, மனசை புரிஞ்சுகிட்டு, உன்னோட அழுகையில நான் ஆறுதலாவும், என்னோட சந்தோஷத்துல நீ புன்னகையாவும், சின்ன சின்ன விஷயத்துலேயும் ஈடுபாட்டோடவும் வாழ்றதுதான் வாழ்க்கை. அதுக்கு பேருதான் காதல். நீங்க சொல்றது எல்லாம் மெரீனா பீச்ல வாழற காதலைப்பத்தி. நான் சொல்றது மனசுக்குள்ள வாழற காதலைப்பத்தி..
எங்க தெருவுல ஒரு தாத்தா பாட்டி இருக்காங்க. அவங்களுக்கு 70 வயசுக்கு மேல ஆச்சு. இன்னமும் அவங்க ரெண்டு பேருக்கு இடையில இருக்கிற அந்த அன்னியோன்யம் குறையலை, இப்போ அவங்க ரெண்டு பேருக்கு இடையில் இருக்கிறதுக்கு பேரு என்ன சார்? நீங்க சொன்னது தானா? சொல்லுங்க சார்.... காமம்ங்கிறதும் ஒரு கட்டம் வரைக்கும்தான். அதுக்கும் மேல நாடி தளர்ந்து, நரம்புகள் சுருங்கி, முதுமையோட கால கட்டத்துலதான் நம்மால காதலோட தன்மைய முழுசா உணர முடியும். So, காதலை தப்பா பேசாதீங்க.. காதலிக்க தெரியாம Dating, மகாபலிபுரம்'ன்னு போறாங்க பாருங்க. அவங்களைப்பத்தி பேசுங்க.
உன்னுடன் பேசிவிட்டு
உடனே மறந்துவிடுகின்றேன்
கலக்கலா இருக்குது கவிதைக்காதலன் :)
மணி சார் என்னுடைய வாழ்துகள் ...............
கிசோர் சார் என்ன மன்னிச்சிடுங்க ............... உங்களுக்கு அறிவு கொஞ்சம் கூட கிடையாது .........காதல பத்தி காதலிக்கதவங்க சொல்ல முடியாது ...........தயவு செஞ்சி இனிமேல் அப்படி சொல்லாதிங்க ........... சொன்னா? நா எல்லோரும் படிப்பாங்கன்னு பாக்க மாட்டேன் அசிங்க அசிங்கமா சொல்லிடுவேன் புரியுதா ?
போங்க சார் போய் முதல்ல நல்ல பொண்ண பார்த்து காதல் பண்ணுங்க எல்லாம் தான புரியும் .......வாழ்த்துக்கள்
மிஸ் நதியா என் வார்த்திகள் உங்கலை ரொம்ப காயப்படுத்திடுச்சின்னு நினைக்கிறேன். Iam sorry.. நீங்க சொன்னதை நான் புரிஞ்சுகிட்டேன். மன்னிச்சுக்குங்க.
வாழ்த்துக்கள் மணி சார்,
உங்களுடைய நினைவுகளுக்கு
மிகவும் அழகாக வடிவம் கொடுக்க பட்டுள்ளது......
விஷ்ணு சார், ஏதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்குங்க. நீங்க காதலிச்சுகிட்டு இருக்கீங்கன்னு நினைக்குறேன். அதனால்தான் இவ்ளோ கோவம் உங்கலுக்கு வருது.நான் தப்புன்னு சொல்லலை. காதல பத்தி காதலிக்கதவங்க சொல்ல முடியாது அப்படின்னு சொன்னீங்க இல்ல. காதல் தோல்வியை எல்லோரும் அனுபவிச்சு இருப்பாங்க. ஆனா இந்த மாதிரி ஒரு வலியை யாராவது அநுபவிச்சுப் இருப்பீங்களா? ராத்த்ரி 12.30 மணி வரைக்கும் நான் சொன்ன I Love you க்கு, I Too Love you ன்னு சொல்லிட்டு, பெசிக்கிட்டுஇருந்த ஒரு மணி நேரத்துல 16 தடவை முத்தம் கொடுத்த என் மனைவி (நான் அவளை அப்படித்தான் கூப்பிடுவேன்) மறுநாள் காலையில என் கூட பைக்ல வரும் போது மயக்கம் விழுந்தா.. என்ன ஆச்சுன்னு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் பார்த்தா, அவ கர்ப்பமா இருக்கான்னு நியுஸ் வந்தா உங்களுக்கு எப்படி சார் இருக்கும்? இத்தனைக்கும் அவளுக்கு முத்தத்தை தவிர நான் வேற எதையும் கொடுத்தது இல்லை. ராத்திரியில என் கூட பேசற அந்த ஒரு மணி நேரத்துல, என் குட பேசிகிட்டே பக்கத்து வீட்டு பையன் கூட சைகையில விளையாடி இருக்கா. அவன் இவ கிட்ட இன்னும் விளையாடி இருக்கான். கடைசியில ரெண்டு பெரும் சேர்ந்து என் வாழ்க்கையில விளையாடிட்டாங்க. மூனு வாட்டி Sucide அட்டெம்ப்ட் பண்ணவன் சார் நான். அவ இன்னைக்கு அதையும் கலைச்சிட்டு நிம்மதியாதான் வேற எவன் கூடவொ வாழ்ந்துகிட்டு இருக்கா.. ஆனா நான் தான் சார் தினம் தினம் செத்துகிட்டு இருக்கேன். எல்லா Friends ம்ம் சொன்னாங்க. அவளே விட்டுட்டு போயிட்டா, அப்புறம் என்னடா உனக்கு.... வேற யாராவதுஒறு நல்ல பொண்ண பார்த்து லவ் பண்ணுடான்னு சொன்னாங்க. முடியலை சார். எதோ வேளைக்கு போறேன். சம்பாதிக்குறேன். சத்தியமா என்னோட தர்ஷினி இருந்த இடத்துல வேறொரு பொன்னை என்னால நினைச்சு பார்க்க முடியலை சார். அவளுக்கு காதலைத்தான் நான் அள்ளி கொடுத்தேனே.. ஆனா அவளுக்கு படுக்கை சுகம் தானே முக்கியமா இருந்தது. இப்போ சொல்லுங்க சார் நான் சொன்னது தப்பா>....
மணி சார் உங்க கவிதை எல்லாம் எதோ உங்களுடைய பர்சனல் டச் இருக்குற மாதிரி இருக்கு.....
உலகத்தில் வடிவம் கொடுக்க
பல விஷயங்கள் இருக்கும் போது, ஏன் நீங்கள் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடக்கும் நெருக்கமான பரிமாற்றங்களை மட்டும் கவிதையாய் எழுதுகிறிர்கள்?
பல விஷயங்கள் உன்னை போன்ற திறமையானவர்களின் மூலம் வார்த்தைகளாக பிரசவித்து இந்த உலகத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றன...
"காதலிக்காதவனின் இதயத்திலிருந்து கவிதைகள் பிறப்பதில்லை' அப்படின்னு மில்டன் சொல்லி இருக்காரு...
என்று நதியா மேடம் மேற்கோள் காட்டியது போல்,
காதலிபவர்கள் இந்த உலகத்தில் நிறைய பேர் இருகிறார்கள் (குறிப்பா சொல்லனும்னா பெண்களை காதலிபவர்கள் ) அவர்கள் பார்த்து கொள்ளட்டும், ஆனால் உன்போல் திறமை உள்ளவர்களால் மட்டுமே செய்யமுடிந்த பல விஷயங்கள் நோக்கி பார்க்க வேண்டும் என்பதே இந்த ரசிகனின் விருப்பம்...
என்ன வாசகர்களே, நான் சொல்லுவது சரியாக இருந்தால் என்னுடன் சேர்ந்து நிங்களும் இந்த கவிதை காதலனுக்கு கோரிக்கை வையுங்கள்...
தவறுகள் இருப்பின் மன்னிச்சுடு கவிதை காதலா..
சாரி Mr. கிஷோர், முதல உங்க கமெண்ட் படிச்சபோ நானும் கோவபட்டேன், உங்களுக்கு கமெண்ட் எழுத பல விஷயங்களை யோசித்து வைத்து இருந்தேன், இப்பயும் சொல்றேன் ஒரு பொண்ணு பண்ண தப்பால காதல் பொய் ஆகிடாது கிஷோர், உங்க வலிய என்னால் புருஞ்சிக்க முடியுது, உலகத்தில் இது போன்ற சில பெண்களும், ஆண்களும் இருகிறார்கள், இவர்களால் தான் காதலின் புனிதமே கெட்டு கொண்டு இருக்கிறது. இதனால் பலரும் காதலை காமமாக பார்க்கின்றனர் (மிகவும் வேதனையான விஷயம்).
எல்லோரும் life la தினம் தினம் குறைந்தது ஒரு பாடமாவது படித்து கொண்டு இருக்கிறோம், ஆனால் யாருமே படிக்க விரும்பாத, படிக்க கூடாத பாடத்தை படிசிட்டேன்னு எடுத்துக்குங்க...
நீங்க நினைக்கலாம், சொல்லுவதற்கு சிம்ப்ள இருக்குனு, ஆனா இதனுடைய உல் அர்த்தத்தை யோசித்து பார்த்திங்கனா உங்களுக்கு புரியும், உங்களுடைய விசயத்தில் நீங்களும் தப்பு பண்ணி இருக்கிங்க ( இது என்னுடைய் கருத்து தவறா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க), நீங்க மட்டும் இல்ல இன்னைக்கு காதலிக்குற பாதி பேர் இந்த தப்பு தான் செய்றாங்க, சரியான துணையை தேர்வு செய்வதில்லை, இதனால் தான் பல காதல் தோல்வி காண்கின்றன.
உங்க விசயத்தில் என்ன நடந்து என்று தெரிய வில்லை, ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும், உங்களுடைய லைப் ல நல்ல லைப் partner ஐ தேர்வு செய்விர்கள்.
பல விஷயங்கள் உங்களை சுற்றி இருக்கும் அதை நேசிக்க ஆரம்பியுங்கள், காலம் எல்லாவற்றையும் மாற்றும்...
உங்களுக்கு நிறைய ஷேர் பண்ணிகணும்னு நெனைக்கிறேன், விருப்பம் இருந்தால் இந்த ஈமெயில் id கு மெயில் அனுப்புங்க
skanaga_raj@yahoo.com
கிஷோர் சார் உங்க மெயில் ஐடி கொடுங்க. நான் உங்களுக்கு மெயில் அனுப்பறேன். இல்லைன்னா
ஃபோன் நம்பர் கொடுங்க நான் உங்களுக்கு என்னுடைய வாழ்க்கைய பத்தி தெரிவிக்கிறேன். ஏன்னா நானும் லவ் ஃ பெயிலியர் தான்.
தாங்க்ஸ் மிஸ்டர் Budthu.. விஷ்ணு சார் உங்களுக்கும் தேங்க்ஸ்... எந்த ஒரு ஆறுதலும் நிச்சயமா எனக்கு நிம்மதியை கொடுக்காது
ஹாய் கிஷோர் நான் ஆறுதல் சொல்ல உங்களை மெயில் அனுப்ப சொல்லல.... சில உண்மைகளை சொல்ல தான் மெயில் அனுப்ப சொன்னேன், விருப்பம் இருந்தால் அனுப்புங்க, கடைசியா ஒன்று சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்,
இந்த life கடவுளால உங்களுடைய பெற்றோர் மூலம் உங்களுக்கு கொடுக்க பட்டு இருக்கிறது இதை உங்க அன்பை புருஞ்சிக்கதா ஒருத்தருக்காக வேஸ்ட் பண்ணாதிங்க.....
superb sir.... keep ti up al the best for ur upcomings.... u have mentioned al the practical things which is happenin.. its really coool...
ஸுபெர்டா I லவ் யு DA .........................
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
அதைத்தானே சொல்றிங்க
hi,interesting poems. keep up de good work. :)
சார், சூப்பரா இருக்கு இந்த சைட், நதியா கலக்குறாங்க,
எப்பிடி உங்களால மட்டும் இப்பிடி எல்லாம் யோசிக்க முடியுது , எங்களுக்கும் சொல்லி கொடுங்கப்பா
Veru nice..
nadhiya உங்கள் கருத்து மிகவும் சரி.காதல பத்தி எவனாவது தப்பா பேசுனா வந்து வேடுவன்
கோபிக்கும் போதுதானே பெண்கள் இன்னும் அழகாகிறார்கள்.. அப்போதுதானே கவிஞர்கள் இன்னும் போதையேறி இன்னும் இன்னும் அழகான கவிதைகள் எழுத முடியும்.. கோபம் காதலின் நியதி.. சமாதானம் கூடலின் சன்னதி ! அருமையாகச் சுட்டிக் காட்டுது இந்தக் கவிதை
romba nalla kavithai
kishore sir neenga solrathu kaathal enbathu kaamathin adithalam enru.ithu neengal unmaiyaga oru pennai kathalithu avalal yematrapattathal pesu varthai neengal onrai yosikka vendum neengal ippadi pesa karanam oru pennai unmaiyaga kaathalithathaal enru...... itharku neengal thervu seitha thunaithan kaaraname thavira ungalai ponra kaathalarai thervu seitha kaathal illai....
andru naan kanden nilavil oru karai, innum un kaalthadam pada villayo ......
antha nilavin karayai thudaikum sakthi ull unaku ean enmel unakul ulla kobam enum karayai thudaika marukirai
........
alagana kaviothai sir migaum alagana kavithai kathal thirumanam udal ellathaium romba alaga sonninga thirumanathuku pin en manaiveeyoda eppudi irukanumnu nan asai pattanno athai unga kavithai mulama sollitinga thank u
intha kavithai enakakave ezhuthiyathu pola ullathu.
intha kavithaya palamurai padichutten.. ovvoru muraoyum pudhusa irukku.innum adhikama pidikkuthu. enga sandaikalukkahavey eluthunatha nenaichukkuven
hii.. Nice Post
Thanks for sharing
More Entertainment
For latest stills videos visit ..
.
Post a Comment