Wednesday, June 3, 2009

வெண்ணிலவே பாடல் - ஒரு பரவச அனுபவம்


கேள்வி : எத்தனையோ பாடல்களுக்கு நீங்கள் நடனம் அமைத்திருக்கிறீர்கள். உங்களை மிகவும் கவர்ந்த நடனம் எது?

பதில் : எத்தனையோ பாடல்களுக்கு நான் நடனம் அமைத்திருந்தாலும், பிரபுதேவா, கஜோல், ஆடும் வெண்ணிலவே பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த பாடலை பார்க்கும் போதெல்லாம் நானே காதலிக்க தொடங்குகிறேன்.

இப்படி சொன்னவர் யார் தெரியுமா? இந்தியாவின் மிகச்சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவரும், பல தேசிய விருதுகளையும், பாராட்டுகளையும் வாரிக்குவித்த சரோஜ்கான் அவர்கள். ஆம்... இந்தப்பாடல் அந்த அளவுக்கு தகுதி வாய்ந்தது. இசை, நடனம், கலை, பாடகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, என அத்தனை துறை சார்ந்தவர்களும் தங்களது முழு அர்ப்பணிப்பை கொடுத்த பாடல் இது.

"வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?" என்று மெல்லிய குரலில் காதலின் முதல்பிரசவத்தை அரங்கேற்ற தொடங்குவார் ஹரிஹரன். பிரபுதேவாவும் தயக்கத்தின் குழந்தையை சுமந்தபடியே பாடலை பாட தொடங்குவார். பின் காதல் பூதம் பிரபுதேவாவின் விழிகளில் இருந்து எட்டிப்பார்த்தபடியே கஜோலை நோக்கி பாய தொடங்கும். அதுவரை அசுவாரஸ்யமாய் நின்றிருக்கும் கஜோல், மெல்ல மெல்ல தன் பார்வை அம்புகளை பிரபுதேவாவை நோக்கி வீச தொடங்குவார்.

பிரபுதேவாவினால் மெல்ல மெல்ல ஈர்க்கப்படும் கஜோல், மெல்ல மெல்ல அந்த பாடலுக்குள் நுழைய தொடங்குவார். தன்னை முழுவதுமாக அந்த பாடலுக்குள் இழந்த கஜோல், ஒரு கட்டத்தில் பிரபுதேவாவின் மெஸ்மெரிச விரலுக்கு கட்டுப்பாட்டு பாடத்தொடங்குவார். கஜோல் பாடுவார் என எதிபார்க்காத பிரபுதேவா, ஒரு நிமிடத்தில் கஜோலின் விழி ஈர்ப்பில் நிலை குலைந்து போவார். பின் சுதாரித்துக் கொண்டு பாடலை மெதுவாய் ரசிக்கத்தொடங்குவார்


"எட்டாத உயரத்தில் நிலவை வைத்தது யார்? கையோடு சிக்காமல் காற்றை வைத்தது யார்?" என்று கஜோல் தன் காதலை சூசகமாக தெரிவிக்க, "அதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்" என பிரபுதேவாவும் தன்னை மறைத்தபடியே பதில் சொல்லவார். இதோ காற்றை என் கையில் பிடித்து விட்டேன் என்று சொல்வது போல் கஜோல் மெதுவாய் பிரபுதேவாவின் விரல்களை பிடிக்க,


கஜோலின் கரங்கள் தன் மீது பட்டவுடன், அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த பிரபுதேவாவின் காதல் மிருகம் தன் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு பாய தொடங்கி, உணர்ச்சி வேகத்தில் " உலகை ரசிக்க வேண்டும் நான், உன் போன்ற பெண்ணோடு" என்றபடியே கஜோலை கட்டி அணைத்துக் கொள்வார் . வாவ். காதலும் காதலும் கலக்கும் அற்புத சங்கமம் அது.

முதல் முறையாக ஒரு ஆணின் ஸ்பரிசத்தை உணரும் பெண்ணின் உணர்வுகளை கஜோல் இந்த இடத்தில் மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார். பின் இருவரும் கை கோர்த்தபடியே காதல் தேசத்தில் நுழைவார்கள். பிரபுதேவாவிற்கு இந்தப்பாடல் ஒரு வரம். ஆர்ப்பாட்டமான நடனமும், பைத்தியக்காரத்தனமான எக்ஸ்பிரஷன்களும் இல்லாமல், மெல்லிய காதலை வெளிப்படுத்தியபடி பிரபுதேவா அமர்க்களப்படுத்தி இருப்பார்.

கஜோலைப்பத்தி என்ன சொல்வது? பிரபுதேவா இத்தனை ஆட்டங்கள் ஆடி, பாடி, கஷ்டப்பட்டு தன் காதலை வெளிப்படுத்த, கஜோல் Just Like that தன் ஓர விழிப்பார்வையாலே வெளிப்படுத்திவிட்டு போவார். பிரபுதேவாவின் அத்தனை நடிப்பும் கஜோலின் காந்தக கண்களின் அசைவிற்கு முன்னால் காணாமல் போய்விடும். She is Amazing.

சாதனாசர்கம்'இன் குரலிலும், ஹரிஹரனின் குரலிலும் தேன் தடவி பாட பாட வைத்திருப்பாரா ரஹ்மான்? இருவரது குரலும் இன்னமும் காதுகளில் இனித்துக் கொண்டு இருக்கிறது. இந்த பாடலுக்கு இசையை ரஹ்மான் கீபோர்டில் அமைத்திருப்பாரா? இல்லை காதல்போர்டில் அமைத்திருப்பாரா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இருவரது காதல் உணர்வுகளும் அற்புதமாக, இசையாய் வெளிப்பட்டிருக்கிறது.

காதல் தூதுவன் போல், ஒளிப்பதிவு வாழ்ந்திருக்கிறது. கண்ணை உறுத்தாத செட் பாடலுக்கு இன்னும் உயிர் கொடுக்கிறது. பெரிய கவித்துவமான வரிகள் எல்லாம் இல்லாமல், மனதை மெஸ்மரிசம் செய்யும் இயல்பான வார்த்தைகளை ரகுமானின் இசையுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார் வைரமுத்து.

பாடல் என்றால் எப்படி எடுக்க வேண்டும் என்று இந்த பாடலை பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். 50 குரூப் நடன நடிகர்கள், பிரம்மாண்ட செட், அதிரடி நடனம், காதை கிழிக்கும் இசை, என பைத்தியக்காரத்தனங்களை ஒதுக்கிவிட்டு, மனதில் ரசிப்புத்தன்மையை மட்டும் சுமந்து கொண்டு உருவாக்க முனைந்தால் நிச்சயம் இப்படிப்பட்ட பாடல்கள் உருவாகும் என்பது மட்டும் உண்மை.

32 comments:

தென்றல் said...

//கஜோலின் கரங்கள் தன் மீது பட்டவுடன், அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த பிரபுதேவாவின் காதல் மிருகம் தன் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு பாய தொடங்கி, உணர்ச்சி வேகத்தில் " உலகை ரசிக்க வேண்டும் நான், உன் போன்ற பெண்ணோடு" என்றபடியே கஜோலை கட்டி அணைத்துக் கொள்வார் . வாவ். காதலும் காதலும் கலக்கும் அற்புத சங்கமம் அது.//

அற்புதமான வார்த்தைப் பிரவாகம்.... தொடருங்கள்

jackiesekar said...

ரசித்து எழுதி இருக்கின்றீர்கள்

nadhiya said...

வாவ்.... என்னோட ஃபேவரைட் சாங் இது. இந்தப் பாட்டை விட, அதை நீங்கவர்ணிச்சு எழுதி இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. ரொமான்ட்டிக் டூயட்'ல இந்த சாங் ஒரு மைல்கல்.

// காதல் தூதுவன் போல், ஒளிப்பதிவு வாழ்ந்திருக்கிறது.//
அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். கஜோல் பத்தி நீங்க சொல்லி இருந்தது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை. இப்பேர்ப்பட்ட ஒரு Artist 'ஐ ஏன் தமிழ்சினிமா சரியா பயன்படுத்திக்கலை?

James said...

அநேகமா நீங்க காதலிச்சுகிட்டு இருக்கீங்கன்னு நினைக்குறேன்.. இல்லன்னா இவ்ளோ ஆழமா விமர்சனம் பண்ண முடியாது....

erbalaji said...

DAY BEFORE YESTERDAY ONLY I HAVE SEEN THIS ENTIRE FILM..

"அகநாழிகை" said...

பாடல் வெளிவந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்தது. ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

தமிழினி said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

நட்புடன் ஜமால் said...

மிக அழகான பாடலுக்கு

மிக அழகிய விமர்சணம்

நீண்ட நாட்களாக நான் நினைத்துண்டு பாடல்களுக்கு விமர்சணம் எழுதலாம் என்று.

(நல்ல வேலை நினைத்ததோடு நிறுத்தி கொண்டேன்)

sha said...

wonderful selection of song i love it

Anonymous said...

Just last one week, i am hearing this song with out any reason. I feel some different now.

Budthu said...

என் இனிய நண்பன் "புன்னகை மன்னன்" பெல்லுக்கு (மணிக்கு) உலகத்தில் பலதரப்பிலும், பலராலும் நேசிக்கபட்டாலும், ஒரு சிலரால் வெறுக்கப்படும் உன் இனிய நண்பன் கனகராஜ்,தன் குறிப்பு எழுத உன்னுடைய போர்கள சோலையில் அடிஎடுத்து வைக்கிறேன்.

உன்மேல் புன்னகைக்கு கோவம் தான் Mr. பெல், இப்படி ராஜா இல்லாத அரசாங்கமாக மாற்றியதற்கு..... ஆனால் அதற்கும் ஒரு சிறிய ஆறுதல் ஏற்படுத்தி இருக்கிறாய்,கலை துறைக்கு கவிதை காதலனாக உன்னுடைய சேவை தேவை என்று முன் அறிந்து, இணை அரசனாக (புன்னகைக்கு) நமது நண்பன் விஷ்ணுவை நியமித்து அந்த புன்னகை அரசாங்கத்தை காப்பாற்றியதற்கு நன்றி........

சரியான தேர்வு, நாட்டுக்காக சேவை செய்வதில் கைதேர்ந்த கமேண்டோ விஷ்ணு, இதிலும் திறம்பட செய்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

என்ன போட்டி!!!!!!! இரு நண்பர்கள் இடையே.....(சேவை செய்வதில்) ஒருவன் கலை துறைக்கும் இன்னொருவன் நாட்டுக்கும்!!!!!!!!

இருவரையும் நண்பர்களாக பெற்றதற்கு நான் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்கவேண்டும்(போன ஜென்மத்தில்)

என்னடா கமெண்ட் எழுத வந்துட்டு வேற எதையோ எழுதுறேன்னு மற்றவர்கள் கோவப்பட வேண்டாம், என் நண்பர்களின் சேவை அனைவருக்கு தெரிய வேண்டும் என்று தான் எழுதினேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்...

Budthu said...

மிக்க நன்றி மிஸ் நதியா & உண்மை...... உண்மை இன் கிளர்ச்சியில் நதியா போதித்த பாடம் நன்றாக புரிந்து கொண்டேன்.

எனக்கும் கமெண்ட் எழுத ஆசை தான் என் நண்பனை மனதார வாழ்த்த வேண்டும் என்று, ஆனால் வெறுமெனே நல்ல இருக்கு சூப்பரா இருக்குனு மட்டும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை, ரொம்ப பெரிய விதமா, உலகத்திலேயே இதுவரைக்கும் யாரையும் பாராட்டாத அளவுக்கு பாராட்ட வேண்டும் என்ற ஆசையோடு என் நண்பனுடைய படைப்புக்களை படிக்கும் போது என் மனம் எவ்வள்ளு துடித்தது என்று எனக்கு மட்டும் தான் தெரியும்.

அப்படி இருந்து ஏன் எழுத வில்லை என்று நினைக்கலாம், வார்த்தைகளின் மூலம் மற்றவர்களை சந்தோஷ படுத்த தெரியாது என்று என் உள் மனது சொல்கிறது.

ஆகையால் இப்பொழுது இந்த கமெண்ட் மூலம் "A,B, C,D" படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன், கூடிய விரைவில் எனது மனதில் உள்ள ஆசையை பூர்த்தி செய்வேன் என்று நெனைக்கிறேன்.

மீண்டும் நன்றி நதியா..... முதல் அடி எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணியதற்கு.

Budthu said...

அருமையான பாடல், என்னோட ஃபேவரைட் சாங் இது..... நல்ல கெமிக்கல் reaction னை பார்க்கமுடியும் இந்த பாடலில்......

Budthu said...

வாழ்த்துக்கள் மச்சி வெண்ணிலவே பாடல், reaches 404(636-232(by 1.20 AM)) views in last 8 hours..... Today evening treat machi(you have give)........ விஷ்னுகும் சொல்லிட்டேன்.

Saravanan said...

இந்த பாடலை முதன் முதலில் கேட்டபோது, ஒன்றுமே புரிய வில்லை...அப்படியே ஒரு மந்திரம் நம்மை கட்டி போட்டது போல இருந்தது.....சில நாட்கள் காற்றில் மிதந்து கொண்டிருந்த மாதிரி ஒரு உணர்வு..

எந்த பாடலும், இசையும் இப்படி ஒருவரை ஆட் கொள்கிறது என்பது, அபூர்வம் தான்

கவிதை காதலன் said...

நன்றி கனகராஜ். உங்க வருகையும் கமெண்ட்டும் ரொம்ப ஷாக்கிங் சர்ப்பிரைஸ்'ஆ இருந்துச்சு.

கவிதை காதலன் said...

ஆமா ஜேம்ஸ்...நீங்க சொன்ன விஷயத்தை நான் மறுக்க மாட்டேன்.

Budthu said...

என்ன மச்சி, நீயும் காதலிக்க ஆரம்பித்து விட்டாயா?????? வாழ்த்துக்கள்........

கவிதை காதலன் said...

நன்றி கனகராஜ்... ஆனா நான் காதலிக்கறது என்னுடைய Profession'ஐ தான்

nadhiya said...

// மிக்க நன்றி மிஸ் நதியா & உண்மை...... உண்மை இன் கிளர்ச்சியில் நதியா போதித்த பாடம் நன்றாக புரிந்து கொண்டேன்//

இதுல பாடம் கத்துக்க எல்லாம் என்ன இருக்கு? என்னோட கருத்து மட்டும்தான் சரி. எனக்கு பிடிச்சதை மட்டும்தான் செய்வேன்ங்கிற ஈகோ எல்லாம் எனக்கு கிடையாது. மத்தவங்க சொல்றது சரியா இருக்கும் பட்சத்துல நிச்சயமா அதை ஏத்துக்க நான் எப்பவுமே தயங்கியது இல்லை. என்னால என் ஃபிரண்ட்ஸ்க்கு கொடுக்கு முடிஞ்சது சின்ன சின்ன சந்தோஷங்கள்தான். அதை கூட தர முடியலைன்னா நாம எல்லாம் எதுக்கு ஃபிரண்ட்ஸா இருக்கோம்? நான் உண்மைகிட்ட விவாதம் பண்ணதுக்கு காரணம், உணர்வுபூர்வமான ஒரு விஷயத்தை அவரால புரிஞ்சுக்க முடியலையே அப்படின்னுதான். But, என்னோட வார்த்தைகளை நீங்க புரிஞ்சுகிட்டீங்க அப்படிங்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு. ஒரு விஷயத்தை ஒத்துக்கறத்துக்கு கூட மனசு வேணும். You have it. Gud.

Budthu said...

நன்றி மிஸ் நதியா, அதேமாதிரி பாராட்டுவதற்கும் பெரிய மனசு வேணும்க.... அது உங்க கிட்ட இருக்குனு அறிந்து கொண்டேன்.. God bless you......

Budthu said...

Mr.புன்னகை மன்னன் இப்படி நீங்க மொக்கை காமெடி அடிபிகன்னு தெரிந்து தான் நீங்க யாரை காதலிச்சுகிட்டு இருக்கீங்கன்னு கேட்கல

Budthu said...

எல்லோருக்கும் அவங்களின் profession தான் முதல் காதலி

மதுவதனன் மௌ. said...

இந்தப் பாடல் என்னுடைய கணிணியில் என்றும் இருக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி ஓடி வரும்போது கஜோலின் கண்களில் தோன்றும் உணர்ச்சி காதலா எதிர்பார்ப்பா முதன்முதல் தோன்றும் உணர்ச்சியில் முகத்தில் தோன்றும் சந்தோசமா என மிக அழகாக இருப்பார்.

மிக அருமையான பாடல், காட்சி சக உங்கள் விமர்சனம்.

மீண்டும் இன்றொருமுறை பார்த்தால் போச்சு

கவிதை காதலன் said...

நன்றி மதுவதனன்

கவிதை காதலன் said...

மிஸ்டர் காதல் மன்னன் (Budthu).... மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ? புரிஞ்சா புரிஞ்சுக்குங்க....

Budthu said...

நன்றி மிஸ். நதியா, இதுவரைக்கும் நான் வேற மற்றும் யாரோட பெயரலேயும் இருந்து யார்க்கும் எதுவும் அனுப்பியது இல்லை, ஒரேஒரு முறை என்னுடைய asimo என்கிற மெயில் ல இருந்து உங்களுக்கு மெயில் அனுப்பினேன் அதுமட்டும் தான் நான் தெரியதா பெயரில் அனுப்பினேன்.

Actually விஷ்ணு நேற்று என் விட்டில் இருந்து கமெண்ட் எழுத ட்ரை பண்ணிட்டு இருந்தான், அப்போ அவங்க விட்டுல problem னு போன் வந்தது, உடனே நான், மணி, மற்றும் விஷ்ணு எல்லோரும் விஷ்ணு விட்டுக்கு போய்டோம்.

Morning விஷ்ணு எனக்கு போன் பண்ணி கமெண்டா எழுதின மேட்டரை சொல்லி கமெண்ட் போஸ்ட் பண்ண சொன்னான், நான் வேண்டாமுன்னு சொன்னேன் அதுமட்டும் இல்லாமல் உங்க பெயரை specific க சொல்லியும் மறுத்தேன், ஆனால் அவன் as usual மில்லிடரி கமெண்ட் கொடுத்தான்( அது எப்படி இருக்கும்னு எனக்கும் மணிக்கும் தான் தெரியும் ) அதனால தான் நான் இந்த கமெண்ட் போட்டேன். மணி மற்றும் உங்களோட பீலிங்க்ஸ் என்னால உணர முடிகிறது.

இனிமேல் விஷ்ணுவே சொன்னாலும் மில்லிடரி கமெண்ட் கொடுத்தாலும் அவன் சார்பா இது மாதிரி செய்யமாட்டேன்.

Thank you..

பால்வெளி said...

உங்களுக்கு தெரியாத ஒரு புது செய்தி..

அந்த "வெண்ணிலவே.." பாடல், அப்படியே 1951இல் வெளியான "An American in Paris " படத்திலிருந்து எடுக்கப்பட்டது. நடன அசைவுகள், காட்சியமைப்பு, முக பாவனைகள் எல்லாமே..பிச்சைக்காரர்கள் மட்டும் ஒரிஜினல் படத்தில் இல்லை.. முடிந்தால் பாருங்கள்..என்னிடம் அந்த பாடல் சுட்டி இல்லை..

Anonymous said...

TATS MY FAVOURITE SONG TOO...UR EXPLANATION HAS MADE ME TO SEE AND ENJOY D SONG AGAIN... GOOD AL D BEST

Budthu said...
This comment has been removed by the author.
Anonymous said...

your explanation is better than the song

தமிழ் காதலன் said...

//காதல் தூதுவன் போல், ஒளிப்பதிவு வாழ்ந்திருக்கிறது. கண்ணை உறுத்தாத செட் பாடலுக்கு இன்னும் உயிர் கொடுக்கிறது. பெரிய கவித்துவமான வரிகள் எல்லாம் இல்லாமல், மனதை மெஸ்மரிசம் செய்யும் இயல்பான வார்த்தைகளை ரகுமானின் இசையுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார் வைரமுத்து.//


கேள்விக்கு பதில் என்பது எங்கும் உள்ளது.
மணி சார், நீங்கள் பதிலுக்கு விளக்கம் கொடுத்து அசத்தி விட்டீர்கள். அருமை.

இதையும் படியுங்கள்