Wednesday, May 20, 2009

Love, the war begins = புத்தக விமர்சனம்.

புத்தகம் பற்றி ஒரு அறிமுகம் : "Mary Tate Engels" என்ற அமெரிக்க எழுத்தாளர் காதலையும், அது சார்ந்த நம்பிக்கையையும், காதல் துரோகத்தின் வலியையும் மையப்படுத்தி எழுதிய ஒரு , நாவல்தான் Love, the war begins . இவரது Love Is All That Matters புத்தகமும் ஒரு மிகக் சிறந்த படைப்பே. ஆனாலும் இந்த நாவலை குறிப்பிட வேண்டியதின் அவசியம் என்னவென்றால், இந்த புத்தகத்தின் உரையாடல்கள். ஆம், கெவின் அட்னர், லிசா கார்லட், ஜெனிஃபர் டெய்சி, கதாபாத்திரங்களின் வழியே ஒரு பரவச அனுபவத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர்.

சரி இனி விமர்சனத்திற்குள் செல்வோம்....

கெவினும் லிசாவும் காதலர்கள். எப்படி என்றால், சின்ன சின்ன விஷயங்களில் கூட அக்கறை எடுத்து காதலிக்காக, எதையும் செய்வான் கெவின். ஆனால் லிசாவுக்கோ அது டைம்டேபிள் போட்டு செய்யப்பட வேண்டிய வேலை. லிசாவின் பிறந்த நாளுக்காக அவள் கேட்ட, பரிசை வாங்குவதற்காக, விறைக்கும் குளிரில் அவன் படும் கஷ்டங்கள் நமக்கே பாவமாய் இருக்கிறது. ராத்திரி 12 மணிக்கு அவனிடம் இருந்து பரிசை வாங்கியதும் "தூக்கம் வருது டியர்" என்றபடியே லிசா செல்லும் போது நமக்கும் வலிக்கிறது. இங்கு கைதட்டல் பெறுகிறார் கதாசிரியர்.

அதே லிசா தன பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வாள் என அந்த நாள் முழுதும் காத்திருந்து ஏமாற்றமடையும் கெவின், அவளை நேரில் சந்தித்து இன்னைக்கு என் பிறந்த நாள் என்று சொல்லும் போது "ஓ! சாரி டியர், மறந்துட்டேன். என்று லிசா சாதாரணமாக சொல்லும் போது வெறுப்பின் உச்சத்திற்கே போகிறான் கெவின்".
எதையுமே ரசிக்க தெரியாத, சின்ன சின்ன அன்பை கூட பகிர்ந்துக்க முடியாத உன்னுடன் இனிமேல் எனக்கு காதல் தேவை இல்லை என்று கெவின் விலகிப்போக, காதல் என்ற பெயரில் என்னை தேவை இல்லாமல் டார்ச்சர் செய்யும் உன் தொல்லை எனக்கும் தேவை இல்லை என லிசாவும் கூற, இருவரும் விலகிப்போகிறார்கள். எதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டானே தவிர, கெவினால் லிசாவை மறக்க முடியவில்லை. அவள் வரும் வழியில் நிற்பது, அவள் கண்ணில் பட வேண்டும் என்பதற்காக தேவையில்லாத செயல்கள் செய்வது என உருகுகிறான் கெவின்.

ஒரு கட்டத்தில் லிசா யாரோ வேறு ஒருவனுடன் சுற்ற தொடங்க, அதிர்ச்சியில் உறையும் கெவின் உலக காதல்தோல்வி விதிகளின்படி தேவதாஸாக சுற்றி, பரீட்சையில் ஃபெயில் ஆகிறான். அவன் எதிர் வீட்டில் இருக்கும் ஜெனிஃபர் டெய்சி அவனுக்கு பல வகையில் உதவுகிறாள்.

ஒரு கால கட்டத்தில் ஜெனிஃபர், தன் காதலை கெவினிடம் சொல்ல, "கருணைக்கு பரிசாய் காதலை கேட்காதே" என்று கெவின் அவளிடம் சொல்லுகிறான். இந்த இடத்தில் அவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல் வெறும் 5 வரிகள் மட்டும்தான். ஆனால் இருவரது உணர்வுகளை ஆசிரியர் 17 பக்கங்களுக்கு விவரித்திருக்கிறார். அற்புதமான காட்சி இது.

பின் லிசா அந்தக்காதலும் பிடிக்காமல், தான் செய்தது தவறு என உணர்ந்து கெவினிடம் வருகிறாள், உன் சுயநலத்தின் உருவத்திற்கு தயவு செய்து காதல் சாயம் பூசாதே. எப்போது உன்னால் என்னை மறந்து இன்னொருவனுடன் சுற்ற முடிந்ததோ அப்போதே நீ காதலை கொன்று விட்டாய் என கெவின் அவளை புறக்கணிக்கிறான்.


கெவின் வீட்டில் நடக்கும் இந்த உரையாடல்களின் வழியே துரோகத்தின் வலியையும், காதலின் அழகையும் மிக புதுமையாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். இதன் தொடர்ச்சியில் கெவினின் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? கெவினின் வாழ்க்கை என்ன ஆயிற்று? போன்ற சுவாரஸ்யங்கள் இந்த புத்தகம் முழுதும் விரவிக்கிடக்கிறது.

நாம் எதிர்பாராத, பல "அட" போட வைக்கும் சம்பவங்களை இந்நாவலில் அரங்கேற்றியுள்ளார் ஆசிரியர். காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் கெவின் கதாபாத்திரத்தையும், காதல் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் லிசா கதாபாத்திரத்தையும், படைத்து விளையாடி இருக்கிறார் Mary Tate Engels.

எனக்கு என்னமோ, இந்த நாவலை நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் படித்திருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த நாவலில் இருக்கும் பல காட்சிகள், நம் தமிழ் சினிமாவை கண்முன் நிறுத்துகின்றன. இருந்தாலும் காதலின் அழகியலையும், துரோகத்தையும், ஒரே புத்தகத்தில் இரு வேறு கதாபாத்திரங்களின் தன்மைகள் வழியே படைத்திருந்த இந்நூலின் ஆசிரியர் பாராட்டுதலுக்கு உரியவர்.

Hats Off to "Mary Tate Engels".

மொத்தத்தில் "Love, the war begins" என்ற இந்த நாவலின் தலைப்பு நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரி..

39 comments:

kulandhaivelnandhini said...

//எதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டானே தவிர, கெவினால் லிசாவை மறக்க முடியவில்லை. அவள் வரும் வழியில் நிற்பது, அவள் கண்ணில் பட வேண்டும் என்பதற்காக தேவையில்லாத செயல்கள் செய்வது என உருகுகிறான் கெவின்.//

ஆசிரியர் என்ன எழுதினார் என இப்போது எனக்கு தெரியவில்லை ஆனால் உங்கள் விமர்சனம் படித்தவுடன் உடனே படிக்கணும் போல இருக்கு -------- மேலும் ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளே வாழும் நிஜமான தோற்றம் ...., அனால் யாரும் அதை வெளிகாட்டி கொள்வதில்லை . நன்றி உங்கள் எழுத்து பணி தொடரட்டும் ஜெய் ஹிந்த்

nadhiya said...
This comment has been removed by the author.
nadhiya said...

மணி சார் நீங்க எப்போ இந்த புக்கை படிச்சீங்க? எத்தனை வாட்டி உங்களை இந்த book படிக்க சொல்லி இருப்பேன். எதிர்பார்க்கவே இல்லை.. அந்த புரஃபசர் கேரக்டர் "Paltry love u made" அப்படின்னு சொல்ற இடம் ரொம்ப டச்சிங்கா இருக்கும் இல்ல. அதே மாதிரி அர்னர் சொல்ற gallows டயலாக்கும் ரொம்ப ஃபீலிங்கா இருக்கும். எனக்கு அந்த பேஜ் படிக்கும் போது விஷ்ணு நியாபகம்தான் வரும். So sweet friend of yours. ஆமா, விஷ்ணு உங்க பிளாக் படிக்கிறாரா? அவரோட கமெண்ட் ஒண்ணு கூட காணோம்?

கவிதை காதலன் said...

ரொம்ப நல்ல புக்.. உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் நதியா. விஷ்ணுவுக்கு டைம் கிடைக்கலை. அதனால்தான் அவன் இன்னும் படிக்கலை.

ஆளவந்தான் said...

சார், கடைசியில கெவின் என்ன ஆனான்னு சொல்லவே இல்லையே.. ப்ளீஸ்.. சொல்லுங்க. இல்லைன்னா என் மண்டையே வெடிச்சிடும்....

கவிதை காதலன் said...

ஹாய் ஆளவந்தான்.. அதை புக்ல படிச்சாதான் சுவாரஸ்யமே...

rahul said...

intha book enga kidaikkum. enakku padikkanumnu romba aarvama irukku... Great.

கவிதை காதலன் said...

Thanks rahul

kulandhaivelnandhini said...

photos selections superp

கவிதை காதலன் said...

நதியா மேடம், ஏன் விஷ்ணுவை மட்டும் தான்
கேப்பீங்களா? மத்த யாரையும் கேக்க மாட்டீங்களா?
( i mean நான் கேட்டது ஆர்த்திய பத்தி)

nadhiya said...

மத்தவங்களை பத்தி ஏன் கேட்கலைன்னு தானே கேட்டீங்க? யாரவது ஒரு மூணாவது மனுஷன் ஏதாவது நல்ல விஷயம் செஞ்சா நாம ஓடிப்போய் பாராட்டுவோம். ஆனா நமக்கு தெரிஞ்சவங்க யாராவது ஏதாவது ஒரு நல்ல விஷயம் செஞ்சா அதை கண்டுக்க கூட மாட்டோம். ஏன்னா அதுதான் நமக்குள்ள இருக்கிற (Red range TRV ortz.in). அட, நம்ம ஃப்ரெண்டு ஒரு விஷயம் செஞ்சிருக்கான்னே அப்படின்னு நம்ம மனசு நினைச்சாலே ஆட்டோமேட்டிக்கா நம்ம கை கமெண்ட்ஸ் கொடுக்க போய்டும். வேற அதுக்கு எந்த காரணமும் சொல்ல தோணாது. ஏன்னா Mind' க்கு மட்டும்தான் காரணம் சொல்ல தோணும். மனசுக்கு தோணாது. என்ன மனசு Fulla சந்தோஷம் மட்டும்தான் நிறைஞ்சு இருக்கும். ஒரு கலைஞனுக்கு சராசரி கைதட்டலை கூட கொடுக்க முடியாத மத்தவங்களைப்பத்தி நான் எதுக்கு நினைக்கணும்? ( I Mean, நான் சொன்னதும் ஆர்த்தியை ஆர்த்தியை பத்திதான்)

aarthi said...

Mani, i'm very sorry da. unakku comment anuppa kuudathunnu illada. nadhiya ellaam unakku thamizh'la comment anuppum bothu enakkum thamizhla anuppa aasaiya irukkum. enakku appadi anuppa theriyadhanaaladhan anuppalada. thappa nenachikkadhada. enakkum nadhiya maadhiri thamizhla comment anuppanumnu thaanda aasai. Pls da. Nadhiya, sorry pa.

நிலாப்பெண் said...

நதியா நீங்க சொன்ன எல்லா விஷயமும் செண்ட் பர்சண்ட் கரெக்ட். ஆனா அந்த Red range TRV ortz.in அதுக்கு மட்டும் என்ன அர்த்தம்'னு சொல்லுங்களேன் ப்ளீஸ்...

archana said...

உங்க பிளாக்கை விட, உங்களுக்கு வர்ற கமெண்ட்ஸ் ரொம்ப சுவாரஸ்யமா
இருக்கு

Unmai said...
This comment has been removed by the author.
Unmai said...

ஹாய் நான் பழைய ரசிகன், புதிய தோற்றதுடன் ..........

Unmai said...

அருமையான புத்தகத்தை அனைவர்க்கும் காட்டியதற்கு நன்றி

Unmai said...

மிஸ் நதியா மேடம்...... What is the different between Mind and மனசு. According to the theological books the Man made by god with following things ஆவி, ஆத்மா, சரிரம்.
இதில் மனசு எது? Mind எது? Can you explain?

Unmai said...

மிஸ் நதியா மேடம்...... அது எப்படி கமெண்ட் எழுதுனா தான் மற்றவர்களை பற்றி பேசுவிர்களா( i mean ஆர்த்திய பத்தி, Every body has their own style to appreciate a creative writer.

கமென்ட் எழுதுனா தான், ஒருவன் நல்ல ரசிகனோ அல்லது நண்பனோ என்று கிடையாது.

எடுத்துகாட்டாக பைபிள்ல கடவுளை துதிப்பதற்கு ஏழு வழிகள் உள்ளது.

1) Todah (Sacrifice of praise)

2) Yadah (With Hands be raised)

3) Barak ( With a Quiet Voice)

4) Hallal (Soul rejoice)

5) Zamar (With a song)

6) Tehellah (sing along)

7) Shebach ( shout for joy)

இதுல ஏதாவது ஒரு வழியில் துதித்தால் தான் கடவுளுக்கு பிடிக்கும் என்றில்லை. எந்த வழியில் வேண்டும் என்றாலும் துதிக்கலாம்.

இது மாதிரி பல வழிகளில் ஒருவரை பாராட்டலாம்

1) உங்களை போல் கமென்ட் எழுதலாம்

2) படித்துவிட்டு மற்றவர்களுக்கு சொல்லலாம்

3) நேரிடையாக கூட கருத்துகளை தெரிவிக்கலாம் (If he /she knows the writer)

4) இன்னும் பல வழிகள் இருக்கிறது.

திரைப்படங்களை பலர் பார்பார்கள் ஆனால் எத்தனை பேர் படத்தின் பாராட்டுகளை டைரக்டர்கு அனுப்புகிறார்கள் (உடனே நான் அனுப்புவேன் என்று சொல்லாதிர்கள் )

Because of this we can't say that they didn't like the movie or we can't take this way that their mind not said to do so.

Do you know how they express their appreciation?

திரும்ப அந்த டைரக்டர் ரோட படத்தை போய் பார்பார்கள் மற்றவர்களிடம் சொல்லுவார்கள்.
அவருடைய அடுத்த படைப்புகாக ஏங்குவார்கள்.

ஒரு கலைஞனுக்கு வெற்றி ஏது தெரியுமா? அவனின் அடுத்த படைப்புக மக்கள் ஏங்குவது தான்.

Comments will give only suggestion to improve and happy but what I mention earlier will give victory.

ஆர்த்தி, நான் மற்றும் எங்களை போன்றவர்கள் இந்த கவிதை காதலனுக்கு வெற்றியை தர ஆசைபடுகிறோம். தயவு செய்து தப்பா எழுத வேண்டாம்.

நோபல் பரிசு பெற்றாலும் பாராட்டாமல் போகும் மனமுடைய எனக்கு தெரிந்தவர்களை விட ஆர்த்தி போன்றோர் எவ்வளளோ மேல்...

என்ன சரியா மிஸ் நதியா, நிலாப்பெண் மற்றும் கவிதை காதலா.

இதை யார் மனதையும் கஷ்டப்படுத்தும் நோக்கத்துடன் எழுத வில்லை, உண்மை அனைவர்க்கும் தெரியவேண்டும்.

குறிப்பு : கமெண்ட் எழுதாத எத்தன வாசகர்கள் உனக்கு இருகிறார்கள் என்று தெரியுமா? கவிதை காதலா. என்போன்றோர்கு தெரியும்.

கடைசியா ஒன்று கமென்ட் எழுதுறவங்க விமர்சகர்கள், எழுதாதவர்கள் வாசகர்கள்.

nadhiya said...

Welcome மிஸ்டர் உண்மை. உங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தத்தான் விரும்பறேன். படிச்ச உடனே கமென்ட் போட்டாகணும் அப்படிங்கிறது ஒண்ணும் கட்டாயம் இல்லை. அது ஒரு அழகான Feeling ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். இன்னைக்கு மிஷ்கின் தமிழ்ல ஒரு மிகச்சிறந்த டைரக்டர். அவரோட முதல் படம் சித்திரம் பேசுதடி'க்கு அவருக்கு எத்தனையோ லட்சம் பேருகிட்ட இருந்து பாராட்டு கிடைச்சிருக்கும். ஆனா அவர் தன்னோட ஆஃபீஸ்ல இன்னமும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கிறது என்ன தெரியுமா? பாலச்சந்தர் கிட்ட இருந்து வந்த பாராட்டு கடிதத்தைத்தான். அந்த கடிதத்தை படிக்கும் போதெல்லாம் இன்னும் நல்ல படம் பண்ணனும். இன்னும் நல்ல படம் பண்ணனும்ன்னு மனசுக்குள்ள ஒரு வெறி வரும். அப்படின்னு மிஷ்கின் சொல்லுவாரு. ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரக்கூடியது ஒரு ரசிகனோட பாராட்டு. அவன் சோர்ந்து போய் இருக்கிற சமயத்துல அந்த கடிதத்தை படிக்கும் போது ஆயிரம் மடங்கு உற்சாகம் வரும். அதுக்காகத்தான் கடிதங்கள். புரியுதா? அட, Web cam, Email, chating, cellphone' ன்னு ஆயிரம் விஷயங்கள் இருக்கிற இந்த கால கட்டத்திலேயும் கிரீட்டிங் கார்டுக்கு உயிர் இருக்குதுன்னா அதுக்கு என்ன காரணம்? ஒரு விஷயத்தை வாயில சொல்றதை விட வார்த்தைகள்'ல சொல்லும் போது அது இன்னும் அழகாகும். இது ஷேக்ஸ்பியர் சொன்னது. ரெண்டு பேர் லவ் பண்ணும் போது எதுக்கு கிஃப்ட் கொடுத்துக்கறாங்க? ரெண்டு பேர் மனசுலயும்தான் காதல் இருக்கே? அப்புறம் எதுக்கு கிஃப்ட் கொடுத்து அன்பை வெளிப்படுத்தனும்ன்னு நீங்க கேட்டு இருக்கீங்களா? அந்த சின்ன சின்ன அன்பளிப்புகள் சந்தோஷத்தோட வெளிப்பாடு. அதே மாதிரிதான் கமெண்ட்ஸ் கொடுக்கறதும் ஒரு அன்போட வெளிப்பாடு.

nadhiya said...

ஒரு மிகச்சிறந்த விமர்சகனாலத்தான் ஒரு நல்ல ரசிகனா இருக்க முடியும். இதுவும் நான் சொல்லலை. கவிபேரரசு வைரமுத்து சொன்னது. ஒரு படைப்பாளிக்கு ரொம்ப பிடிச்சது விமர்சகரத்தான். அதுக்கு அப்புறம்தான் ரசிகர்கள். அப்புறம் மனசுக்கும் mind' க்கும் என்ன வித்தியாசம்னு கேட்டீங்க இல்லையா? உண்மையான காதலோட, அன்பை வார்த்தைகளால எழுதி ஒரு பொண்ணுகிட்ட கொடுத்தா அது மனசுல இருந்து வர்ற காதல். நாளைக்கு இந்த பொண்ணு இந்த லெட்டரை போலீஸ்ல கொடுத்து நம்மள மாட்டி விட்டுட்டா என்ன பண்றதுன்னு சந்தேகத்தோட லெட்டரை டைப் பண்ணி கொடுத்தா அது Mind ல இருந்து வர்ற காதல். இதுதான் மைண்டுக்கும் மனசுக்கும் இருக்கிற வித்தியாசம்.

nadhiya said...

மிஸ்டர் உண்மை, கவிதை காதலன்கிட்டன்னு இல்லை, வேற எந்த ஃபிளாக் எழுதுறவங்க கிட்ட இருந்து வேணுமின்னாலும் கேளுங்க. உங்க பிளாக்கை ஒருத்தர் வாயால பாராட்டுறது உங்களுக்கு ரொம்பபிடிக்குமா? இல்லை கமென்ட் கொடுத்து பாராட்டுறது ரொம்ப பிடிக்குமான்னு? வாயில பாராட்டுனாலே போதும்னு யாராவது ஒருத்தர் சொல்லிட்டா கூட, நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்டுகிறேன்

nadhiya said...

உண்மை சார், அப்புறம் எத்தனை அத்வைதம், லோகிசம், பத்தின புத்தகங்கள் படிச்சிருக்கீங்கன்னு தெரியலை. மனசை பத்தி எதுல சொல்லி இருக்கீங்கன்னு கேட்டீங்க பாரு ஒரு கேள்வி. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். உங்களுக்கு எத்தனை புத்தகம் வேணும் சொல்லுங்க. நான் Suggest பண்றேன். சும்மா காமடி பண்ணாதீங்க சார். ஒரு விஷயத்தை பத்தி சொல்றதுக்கு முன்னாடி அதை பத்தி தெரிஞ்சுகிட்டு சொல்றது நல்லது . ஓகே? கடவுள் இல்லைன்னு சொல்றவங்க கூட இந்த உலகத்துல இருக்காங்க. ஆனா மனசு இல்லைன்னு சொல்றவங்க ஒருத்தர் கூட கிடையாது. அது சரி அதை பத்தி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைன்னு நினைக்குறேன்.

எவனோ ஒருவன் said...

உண்மைதான் மிஸ் நதியா. ஒரு மனுஷனோட முதுகுக்கு பின்னால செய்யக் கூடிய ஒரே விஷயம் தட்டிக்கொடுக்கறதுதான். நீங்க அதைத்தான் செய்யறீங்க. வாழ்த்துக்கள் உங்களோட வார்த்தைகள்ல ஆயிரம் அர்த்தம் இருக்கு. Keep it up.

Unmai said...

என்னுடைய கருத்துகளை ஏற்றுகொண்டதற்கு நன்றி நதியா மேடம்........

கமெண்ட் மற்றும் விமர்சனத்தால் உற்சாகமும் சந்தோஷமும் மட்டும் தான் கொடுக்க முடியும் வெற்றி அல்ல.... (Indirectly you mentioned here) //* ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரக்கூடியது ஒரு ரசிகனோட பாராட்டு. அவன் சோர்ந்து போய் இருக்கிற சமயத்துல அந்த கடிதத்தை படிக்கும் போது ஆயிரம் மடங்கு உற்சாகம் வரும் *//

நாம் அனைவரும் கவிதை காதலனுடைய வளர்ச்சிக்கு தான் பாடுபடுகிறோம். ஒரே ஒரு வித்யாசம் நீங்கள் அவன் சோர்ந்து போகும் பொது உற்சாகத்தையும், ஒவ்வொரு படைப்பின் போதும் சந்தோசத்தையும் தருகிறிர்கள். நாங்கள் அவருடைய வெற்றி க்காக பாடுபடுகிறோம்.

நாம் இருவர்க்கும் எந்தவித வேற்றுமையும் கிடையாது. நீங்கள் செய்வது மட்டும் தான் சரி என்று கிடையாது நங்கள் செய்வதும் சரி தான்..

எவனோ ஒருவன் சொன்ன மாதிரி தட்டி கொடுக்குறது நல்லது தான். ஆனால் விமர்சனம் மட்டுமே அதை செய்யாது, நிறைய வாசகர்கள் கிடைப்பதும் ஒரு உற்சாகம், பொறுப்புகளும் அதிகமாகும்.

Unmai said...

சரி மிஷ்கின் சார் மேட்டருக்கு வருவோம். அவரை எனக்கும் ரொம்ப புடிக்கும், ஆனால் அவர் பண்ணது ரொம்ப தப்பு, அவர் எல்லா லேட்டேர்ரையும் பாதுகாத்து வைக்கலநாளும் பரவ இல்லை, நல்ல விமர்சனம் பண்ண லேட்டேர்களை எடுத்து வெச்சி இருக்கலாம்.

ஏன் பாலாசந்தர் சார் காக மட்டும் தான மிஷ்கின் சார் படம் எடுத்தாரு எங்களை போல ரசிகர் ரசிகத்தான்.

கடைசில் பாராட்டு என்று வந்ததும் ரசிகர்கள் அனுப்பிய விமர்சனத்தை கொஞ்சம் குறைவா மதிபிட்டது சிறிய வருத்தம் தான், ஏன் என்றால் என் போன்ற ரசிகர்களால் தான் அந்த படம் பெரிய ஹிட் ஆனது......

Unmai said...
This comment has been removed by the author.
nadhiya said...

மிஸ்டர் உண்மை, ஒரு விஷயத்தை புரிஞ்சுக்குங்க. உற்சாகம் இருந்தாதான் ஒரு படைப்பு அற்புதமா வரும். அந்த உற்சாகத்தை தர வேண்டியது வாசகர்களாகிய நம்ம கடமை. ஒரு அழகான கவிதை சொல்லுவாங்க.
"அவசர வேலை நியாபகம் வருகிறது,
ரோட்டில் கழைக்கூத்தாடி
நம்மை நோக்கி தட்டை நீட்டும் போது". இதுதான் பலபேரோட நிதர்சனம். உண்மையிலேயே நம்மோட நண்பனோட வளர்ச்சிக்காகத்தான் i mean கவிதை காதலனோட வளர்ச்சிக்காகத்தான் நாம பாடுபடுறோம்னா அவனுக்கு உற்சாகத்தை தர வேண்டியது நம்மோட கடமை. உற்சாகம்இருக்கும் போதுதான் ஒரு படைப்பாளி தன்னோட ஒரு கட்டத்துல இருந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவான். இங்க யாருமே உங்களை கமென்ட் போட்டாகணும்னு கட்டாயப்படுத்தலை. அது உங்க விருப்பம். சாட்டிங்க்ல நாள் கணக்குல நம்மால கடலை போட முடியும். ஆர்குட்ல ஆயிரம் Scrap' க்கு Reply அனுப்ப முடியும். ஆனா புதுசா ஒரு விஷயம் செய்யுற ஒரு நண்பனுக்கு "நல்லா பண்ணி இருக்கேடா" அப்படின்னு தட்டி கொடுக்க முடியாது.
உங்களாலோ என்னாலோ அவன் வெற்றிக்கு பாடுபட முடியாது. ஆனா சின்னதா தோள் கொடுக்கலாம் இல்ல. நான் அதைத்தான் சொல்றேன். மிஸ்டர் உண்மை, அல்டிமேட்டா ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கலை. நீங்க அவரோட ஒரு வாசகர். நான் உங்களை எந்த குறையுமே சொல்லலை. நான் சொன்னது நண்பர்கள் பத்திதான். ஒரு நண்பனோட வெற்றியில ஒரு தாயை விட ஒரு நண்பனுக்குத்தான் அதிக சந்தோஷம் இருக்கும். ஒரு சராசரி வாசகன். படிப்பான், மத்தவங்ககிட்ட அதைப்பத்தி சொல்லுவான். நல்லா வெற்றி பெறணும்னு வேண்டிப்பான். அவ்வளவுதான். அதையும் மீறி அவன் மேல ஆர்வமும், அவன் படைப்பு மேல விருப்பமும் இருக்கிறவங்க மட்டும்தான் இது நல்லா இருக்கு, இது நல்லா இல்லை, அப்படின்னு சொல்லி அவனை ஊக்கப்படுத்துவாங்க. அதனால நீங்க கவலைபடாதீங்க.

nadhiya said...

மிஸ்டர் உண்மை, ஒரு விஷயம் சொல்றோம்னா அதோட உட்கருத்து என்னன்னு பாருங்க. நான் மிஷ்கின் பத்தி சொன்னது ஒரு உதாரணம். மிஷ்கின் சார் பத்தின ஒரு விஷயத்தை புரிஞ்சுக்குங்க. அவர் மத்த கடிதங்களை பத்திரப்படுத்தி வைக்கலைன்னு உங்களுக்கு தெரியுமா? இல்லை எனக்குதான் தெரியுமா? திருப்பத்தூர்ல இருந்து பாலுன்னு ஒருத்தர் லெட்டர் போட்டார்னு சொன்னா அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா? இல்லை டிவி பேட்டியில ஜப்பான்ல இருந்து கிமொடோ லெட்டர் போட்டார்ன்னு சொன்னா நல்லா இருக்குமா? அவருக்கு லெட்டர் போட்ட ஆயிரக்கணக்கான வாசகர்கள் பேரையும் அவரால Interview'ல சொல்ல முடியாது. அவர் எதுக்காக பாலச்சந்தர் சார் பேரை சொல்லணும்? தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம்ன்னு இன்னைக்கு அத்தனை லேங்குவேஜ்'ல இருக்கிற டாப் மோஸ்ட் ஆர்டிஸ்ட் அத்தனை பெரும் பாலச்சந்தரால உருவாக்கப்பட்டவங்கதான். டைரக்ஷன்ல ஒரு சகாப்தத்தையே உருவாக்கின பாலச்சந்தரே தன்னை பாராட்டி இருக்கிறாரே அப்படின்னு ஒரு சந்தோஷத்துலதான் மிஷ்கின் அப்படி சொல்லி இருக்காரு. அதை புரிஞ்சுக்குங்க. சரி சார், நான் ஒரே ஒரு கேள்வி கேக்குறேன். இப்படி சாதனைகளோட அத்தனை உச்சத்தையும் பார்த்த பாலச்சந்தர் எதுக்காக ஒரே ஒரு படம் பண்ணிஇருக்கிற மிஷ்கினுக்கு லெட்டர் அனுப்பணும்? பாலச்சந்தருக்கு என்ன தலைஎழுத்தா? இல்லை அவருக்கு வேலையே இல்லையா? சொல்லுங்க பார்க்கலாம்?

nadhiya said...

// கமெண்ட் மற்றும் விமர்சனத்தால் உற்சாகமும் சந்தோஷமும் மட்டும் தான் கொடுக்க முடியும் வெற்றி அல்ல....// ஒரு படைப்பாளிக்கு உற்சாகம் கொடுத்தாலே அந்த சந்தோஷத்துல அவன் இதைவிட இன்னும் சிறப்பா எழுதுவான். ஒரு நண்பன் வெற்றி அடையறதுக்கு உற்சாகப்படுத்தறதைவிட மிகச்சிறந்த வழி எதுவுமே இல்லை. கைதட்டலைவிட மிகச்சிறந்த உற்சாகம் எதுவுமே கிடையாது. (இதைப்பத்தி இன்னும் ஈசியா தெரிஞ்சுக்கனும்னா பசங்க படம் போய் பாருங்க.) நீங்க ஒண்ணும் உங்க நண்பனுக்கு வெற்றியை கொடுக்க முடியாது. நானும் கொடுக்க முடியாது. அட்லீஸ்ட் உற்சாகம் கொடுக்கலாம் இல்லையா? ஒரு வாசகருக்கு வேணா அந்த கடமை இல்லாம இருக்கலாம். ஆனா நண்பனுக்கு இருக்கு இல்லையா? மிஸ்டர் உண்மை இப்பவும் சொல்றேன். நான் சராசரி வாசகனைப்பத்தி சொல்லலை.

தென்றல் said...

ரசிகர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம். சண்டை இருக்கக் கூடாது.

கவிதை காதலன் said...

மிஸ்டர் உண்மை & மிஸ் நதியா, ப்ளீஸ் ரெண்டு பேரும் நிறுத்துங்க. மிஸ்டர் உண்மை. உங்களைப் பத்தி யாரும் தப்பா சொல்லலை. உங்களுக்கு கமெண்ட் போடறதுல விருப்பம் இருந்தா போடுங்க. இல்லன்னா விட்டுடுங்க. உங்களை யாரும் கட்டாயப்படுத்தலை. மிஸ் நதியா கட்டாயப்படுத்தி எல்லாம் ஒருத்தரை நம்ம பக்கம் வர சொல்லி வற்புறுத்தக் கூடாது. எல்லோருக்கும் ஒரு விருப்பம் இருக்கும். நாம அதுல தலையிடக் கூடாது. ப்ளீஸ் நதியா இனிமேல் நீங்க இதைப்பத்தி பேச மாட்டீங்கன்னு நினைக்குறேன். உங்ககிட்ட இருந்தும் நான் இதை எதிர் பார்க்குறேன் மிஸ்டர் உண்மை.

Unmai said...

சாரி மிஸ்டர் கவிதை காதலா கடைசியா ஒன்று.........

மிஸ் நதியா எனக்கு மட்டும் கவிதை காதலனுடைய நட்பு கிடைத்தால் உங்களை விட அதிகமாய் உற்சாகம் கொடுப்பேன்... உண்மையாகவே கவிதை காதலனுடைய நண்பன் என்று சொல்லுவதற்கே பெருமை பட வேண்டும், அந்த வாய்பை தருவிர்களா கவிதை காதலா

nadhiya said...

யாருப்பா அங்க? மிகச் சிறந்த நடிப்புக்கு ஆஸ்கர்'ன்னு ஒண்ணு இருக்காமே.. அதை கொண்டு வாங்கப்பா...

nadhiya said...

"எல்லா குற்றவாளியும் தான் தப்பு செய்யுற எடத்துல தன்னையறியாம ஒரு தடயத்தை விட்டுட்டுதான் வருவான்." இதுதான் உலக போலிஸ் விதிகளின் முதல் பாடம். (Scotland yard (polis 72) Terminal law code boryee says) (மிலிட்டரில இருக்கிறவங்களுக்கு இது நல்லாவே தெரியும். வேணுமினா கேட்டு கிராஸ் செக் பண்ணிக்கலாம்.)
"உண்மைய" அவ்ளோ சீக்கிரம் மறைக்க முடியாது.

கவிதை காதலன் said...

ஹாய் மிஸ்டர் உண்மை... என்னோட பிளாக்ல இவ்ளோ உரிமையா வந்து சண்டை போடுறீங்கன்னா நிச்சயமா நீங்க என் நட்புக்குள்ள இருக்கீங்கன்னு தான் அர்த்தம். ஓகே? we'll be good friends. Thank you. If u "vish", உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

கவிதை காதலன் said...

அந்த "Vish" ஸ்பெல்லிங் மிஸ்டேக்'ன்னு நினைக்க வேண்டாம். That is symbol of Friendship

kulandhaivelnandhini said...

அப்பாப்பா!
உண்மையான நட்புக்காக உழைக்கும் (போராடும்) எத்தனை எத்தனையோ நிகழ்வுகளை நேரில் பார்த்திருக்கிறேன் .
ஆனால் இணைதளத்தில் இன்று (கவிதைகாதலன்) இல் பார்த்து நெகிழ்ந்து விட்டேன் . சபாஷ் நதியா உண்மையுடன் உரிமை போராட்டம் . தொடரட்டும் உங்கள் விமர்சனம் மற்றும் ..........

கவிதை காதலன் said...

Mr or Miss Unmai. நீங்க யாரா வேணா இருக்கலாம். But, ப்ளீஸ் பர்சனல் சம்மந்தமான விஷயங்கள் வேண்டாமே... I Mean, Work பண்ற இடம், அது சம்மந்தப்பட்டவங்க யாரைப்பத்தியும் பேச வேண்டாம். ப்ளீஸ்..

இதையும் படியுங்கள்