Wednesday, May 6, 2009

உன்னை பிரிந்திருக்கிறேன்



விழியிலிருந்து கூட
வியர்வை வழிகிறது.
அவைகள் உன்னை தேடி தேடியே
களைத்துப் போய்விட்டன.
ஆம் நான் உன்னைப் பிரிந்திருக்கிறேன்.

உன்னை நியாபகப்படுத்தும்
அத்தனையும் என்னிடம் இருக்கின்றன,
உன்னைத்தவிர...

ஆயிரம் ரூபாய் கொடுத்தால்
ஆட்களை கொல்லக் கூட
இங்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
ஆனால் என்னை தினம் தினம் கொல்லும்
உன் நினைவுகளை கொல்ல யார் இருக்கிறார்கள்?
இருந்தால் சொல்
லட்ச ரூபாய் தருகிறேன்.

சிறு இரும்பை திருடினால் கூட
இங்கு தண்டனை உண்டு
அது எப்படி என் இதயத்தையே திருடியும்
நீ தண்டனையிலிருந்து தப்பித்தாய்?

இரு இரு என் இ.பி.கோ.வில்
நிச்சயம் உனக்கு தண்டனை உண்டு.
ஆம்.
என் (இ)தயம் (பி)டிக்கும் (கோ)ர்ட்டில்
சட்ட எண் 143' ன் கீழ் என்ன
தண்டனை தெரியுமா?

உன் காதுகளை கொடு சொல்கிறேன்.
..............................
என்ன புரிந்ததா?

உன்னை பிரிந்திருக்கும் வேளையில்
நீ எனக்கு எழுதிய கடிதத்தில்
உன் விரல்கள் பிரசவித்த வார்த்தைகளை
வாசித்து வாசித்தே கழிக்கிறது என் பொழுது.

தினம் தினம் என் இதழ் செடிக்கு
முத்த "நீ"ரூற்றுவாய்.
இப்போது பார் என் இதழ் செடி
காய்ந்து கிடப்பதை.
உன்னை பிரிந்திருப்பதை
என் இதழ்களும் விரும்பவில்லை.

எனக்காக கூட நீ வர வேண்டாம்..
தயவு செய்து என் இதழ்களுக்காகவாவது
ஒரு முறை என்னை சந்திக்க வா..
இப்படிக்கு நீயானவன்

15 comments:

viswa said...

great ...

nadhiya said...

உன் விரல்கள் பிரசவித்த வார்த்தைகள்
இந்த வரி Excellent டா...
கவிதைக்கு ஏத்த picture..
ம்ம்ம்ம் கலக்குற மணி

nadhiya said...

இ. பி. கோ. வுக்கு இப்படி ஒரு விளக்கத்தை உன்னைத்தவிர வேற யாராலையும் கண்டுபிடிக்க முடியாதுடா

கவிதை காதலன் said...

தேங்க்ஸ் விஷ்வா...

மிஸ் நதியா நம்ம கவிதைகளை
படிக்கறீங்க போல?

வலசு - வேலணை said...

//
உன் காதுகளை கொடு சொல்கிறேன்.
..............................
என்ன புரிந்ததா?
//
புரியல...:-)

கவிதை காதலன் said...

//
உன் காதுகளை கொடு சொல்கிறேன்.
..............................
என்ன புரிந்ததா?
//
புரியல...:-)

தலைவா அது ரகசியம்..
புரிய வேண்டியவங்களுக்கு புரியும்.
நீங்க ஏதாவது தப்பா கற்பனை பண்ணிக்காதீங்க.

அறிவிலி said...

///கவிதை காதலன் said...
//
உன் காதுகளை கொடு சொல்கிறேன்.
..............................
என்ன புரிந்ததா?
//
புரியல...:-)

தலைவா அது ரகசியம்..
புரிய வேண்டியவங்களுக்கு புரியும்.
நீங்க ஏதாவது தப்பா கற்பனை பண்ணிக்காதீங்க.///

அப்போ யாருக்கோ குறி வெச்சு எழுதினதா?
அவங்க படிச்சாங்களா இல்லியா?

sakthi said...

இரு இரு என் இ.பி.கோ.வில்
நிச்சயம் உனக்கு தண்டனை உண்டு.
ஆம்.
என் (இ)தயம் (பி)டிக்கும் (கோ)ர்ட்டில்
சட்ட எண் 143' ன் கீழ் என்ன
தண்டனை தெரியுமா?


nijama Really superb

sakthi said...

தினம் தினம் என் இதழ் செடிக்கு
முத்த "நீ"ரூற்றுவாய்.
இப்போது பார் என் இதழ் செடி
காய்ந்து கிடப்பதை.
உன்னை பிரிந்திருப்பதை
என் இதழ்களும் விரும்பவில்லை.


alagu varigal

கவிதை காதலன் said...

Thanks shakthi

saran said...

//உன்னை நியாபகப்படுத்தும்
அத்தனையும் என்னிடம் இருக்கின்றன,
உன்னைத்தவிர//.....dis line s really cute....ரொம்ப feel பண்ணி எழுதி இருக்கீங்க......gud one.....

தமிழ் காதலன் said...

// உன்னை பிரிந்திருக்கும் வேளையில்
நீ எனக்கு எழுதிய கடிதத்தில்
உன் விரல்கள் பிரசவித்த வார்த்தைகளை
வாசித்து வாசித்தே கழிக்கிறது என் பொழுது.

//


இன்று காதல் வளர்க்க தூது விட ஆயிரம் வழிகள் உள்ளன . அன்று மடல் மட்டும் தானே ......அருமையான பிரசவம் வார்த்தையில் ஜாலம் கட்டியதும் அருமை தொடரட்டும் அரும் பணி.................

தென்றல் said...

வாவ்... மானே, தேனே, மயிலே, குயிலேன்னு கவிதைங்கிற பேர்ல எரிச்சல்படுத்தாம, ரொம்ப இயல்பான வார்த்தைகளால எழுதறீங்க.. இதே ஸ்டைல்ல கலக்குங்க.

கவிதை காதலன் said...

உண்மையாவே எனக்கு மானே தேனே குயிலேன்னு எழுத வராது தென்றல்.... நம்ம இலக்கிய அறிவு அவ்வளவுதான். எதோ கவிதைங்கிற பேர்ல கிறுக்குகிறேன்.

ஸ்வீட் ராஸ்கல் said...

நீ யாரை பிரிந்து இருக்கிறாய் நண்பா. இப்படி ஒரு ஃபீலிங்...

இதையும் படியுங்கள்