Thursday, May 28, 2009

கால் கிலோ "காதல்" என்ன விலை?

பனிமலர் பொறியியல் கல்லுரியில்தான் நம் கதாநாயகி நதியா முன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறாள். மிக அழகானவள். (பின் நம் கதைகளில் வரும் எந்த கதாநாயகி அழகாய் இல்லாமல் இருக்கிறாள்?) பணக்காரப் பெண், Born with silver Spoon என்று சொல்வார்கள். இவளோ Born with Golden Spoon. பாட்டு, படிப்பு என அனைத்திலும் முதலிடத்தில் இருப்பதால் கல்லுரியின் செல்லம். பாதி மாணவர்கள் இவளின் இதய கல்லூரியில் காதல் படிப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள். அதனாலே என்னவோ இவள் ஆண்களை பார்க்கும் பார்வையில் அலட்சியத்தின் அளவு அதிகமாய் இருக்கும். பிரம்மனால் 55 கிலோவும் திமிரால் செய்யப்பட்டே படைக்கப்பட்டவள். நதியாவிற்கு பிடிக்காத விஷயம் ஒன்று இருக்கிறது என்றால் அது காதல்தான்.

ஆனாலும் நதியாவிற்கு பிடித்த ஒருவன் அந்த கல்லூரியில் இருக்கிறான் என்றால் அது விஷ்ணு மட்டும்தான். காரணம் நதியாவிடம் நட்புக் கோட்டை தாண்டி பழகியவனில்லை விஷ்ணு. அதனாலே விஷ்ணு என்றால் நதியாவிற்கு ரொம்ப பிடிக்கும். நம்மை போல் விஷ்ணுவிற்கும் காதல் பிடிக்காது என்ற எண்ணமே நதியாவிற்கு விஷ்ணுவின் மேல் மிகப்பெரிய மரியாதையை உண்டாக்கி வைத்திருந்தது. இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக கல்லூரியில் வலம் வந்தனர்.

விதி வலியதாயிற்றே. மெல்ல மெல்ல காதல் சாத்தான் விஷ்ணுவின் மனதிலும் குடி புகுந்தான். (நம் கதாநாயகன் கதாநாயகி அறிமுகம் போதும். கதைக்குள் போகலாமா?)

கல்லூரி கேன்டீன் : -

ராஜ் : மச்சி, நீ உண்மையாதான் சொல்றியாடா?

விஷ்ணு : டேய், இவ்ளோ நேரம் நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? நான் இன்னைக்கு என் லவ்வை நதியாகிட்ட சொல்லத்தான் போறேன்.

ராஜ் : டேய், கொஞ்சம் பொறுமையா இருடா.

விஷ்ணு : இல்லடா. இத்தனைநாள் பொறுமையா இருந்ததே பெரிய விஷயம். என்னால இந்த விஷயத்தை உள்ளுக்குள்ள மறைச்சி வெச்சிட்டு அவகூட இயல்பா பழக முடியலடா.


ராஜ் : மச்சான் ஒரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சுக்க. யார் கிட்டயும் பழகாத நதியா, இவ்ளோ நாளா உன் கூட மட்டும் க்ளோஸா பழகறதுக்கு என்ன காரணம்? அவளை மாதிரியே உனக்கும் காதல் பிடிக்காது அப்படிங்கிற ஒரே விஷயத்துனாலதானே. இப்போ அவகிட்டயே போய் நீ காதலிக்கிறதை சொன்னா அவ உன்னைப்பத்தி என்னடா நினைப்பா?

விஷ்ணு : இல்ல மச்சான்.. என்ன நடந்தாலும் சரி.. இன்னைக்கு என் காதலை நதியாகிட்ட சொல்லத்தான் போறேன். அவ என்னை புரிஞ்சுக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இவ்ளோ நாளா அவ கூட பழகி இருக்கேன். என் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு நிச்சயமா அவளுக்கு தெரியாம இருக்காது. என்னோட காதலை நிராகரிக்கறதுக்கு நிச்சயமா அவளால ஒரு காரணம் கூட சொல்ல முடியாது. நான் என் காதலை அவகிட்ட சொன்ன உடனே அவளோட சந்தோஷத்தை நான் கண்கூடா பார்க்கணும். எனக்கு என்னமோ இந்த காதலை நானா என் வாயால சொல்லனும்னுதான் அவ எதிர் பார்க்குறாளோ என்னவோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.

ராஜ் : மச்சி திரும்பவும் நான் சொல்றேன். ஒரு காதல்னால உங்களுக்குள்ள இருக்கிற நட்பு பாதிச்சிடக்கூடாது. சரி.. நீ இவ்ளோ உறுதியா இருக்கும்போது நான் என்ன சொல்றது? என்னால் சொல்ல முடிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான். "ஆல் தி பெஸ்ட்".

கிரீன் வியூ ரெஸ்ட்டாரெண்ட்..

"சொல்லு விஷ்ணு. என்ன அவ்ளோ அர்ஜென்ட்டா என் கூட பேசணும்?" என்றாள் நதியா.

மெதுவாய் தயங்கியபடியே "நதியா நீ காதலைப் பத்தி என்ன நினைக்குற?" என்றான் விஷ்ணு அவள் முகம் பார்க்காமலே.

புதிதாய் பூத்த வெள்ளை ரோஜாப்பூவாய் இருந்த நதியாவின் முகம், சிகப்பு ரோஜாவாய் மாறத்தொடங்கியது "இப்ப எதுக்கு அதைப்பத்தி பேசுற? நமக்குள்ள இதுவரைக்கும் காதல் பத்தின பேச்சே வந்தது இல்லையே."

"இப்ப பேச வேண்டிய அவசியம் இருக்கு."

"இல்லை.. நீ எதைப்பத்தி வேணும்னாலும் பேசு. ஆனா அதைப்பத்தி தான் பேசுவேன்னா நான் கிளம்பறேன்." என்றபடியே நதியா எழ,

நதி, ஒரு நிமிஷம் உட்கார், உனக்கு ஏன் இப்படி கோவம் வருது?"

சரி சொல்லு, இப்போ யாரோட காதலைப்பத்தி பேசப்போற? என்றபடியே ஒருவித கோபத்துடன் அமர்ந்தாள்.

"என்னோட காதலைப்பத்தி". என்று விஷ்ணு ஆரம்பிக்கும் முன்னே, ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை இதயத்தில் வாங்கியிருந்தாள்.

"வாட்? நீ காதலிக்கிறியா? யாரை?" என்று வார்த்தைகளை தந்தியாய் அடித்தாள்.

"நதியா, கொஞ்சம் பொறுமையா கேளு. நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போதிலிருந்தே என் காதலை உன்கிட்ட சொல்லணும்னு தவிச்சிருக்கேன். ஆனா நீ அதை எப்படி எடுத்துக்குவியோன்னு பயந்து பயந்து சொல்லாம தவிச்சிருக்கேன். எங்க நீ என்ன தப்பா புரிஞ்சுகிட்டு என்கூட பழகாம போயிடுவியோன்னு ஒரு பயத்துலதான் இத்தனை நாளா உன்கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன். ப்ளீஸ் நதியா என்ன புரிஞ்சுக்க."

"Stop it Vishunu. Enough. This is the limit. ஒரு பொண்ணு இயல்பா சிரிச்சு பேசிட்டா உடனே உங்களுக்கு காதல் வந்திடும். அப்போ இத்தனை நாளா மனசுக்குள்ள காதலை வெச்சிக்கிட்டுதான் என் கூட ஃப்ரெண்டா பழகிக்கிட்டு இருந்தியா? அதெப்படிடா உங்களுக்கு அழகான பொண்ணுங்களை பார்த்தா மட்டும் காதல் பொத்துகிட்டு வந்திடுது? ஏன் கொஞ்சம் கருப்பா, அழகுல கொஞ்சம் கம்மியா, இருக்கிற பொண்ணுங்க மேல உங்களுக்கு காதல் வர மாட்டேங்குது? இதே நம்ம க்ளாஸ்ல படிக்கிற சுனிதா மேல ஏன் சார் உங்களுக்கு காதல் வரலை? ஏன்னா அவளுக்கு கால் கொஞ்சம் ஊனம். அந்த அளவுக்கு கலரா இல்லை. நான் அழகா இருக்கேன். அதனால என் மேல உனக்கு காதல் வந்திருக்கு. அப்படித்தானே. சரியான சுயநலக்காரன்டா நீ."

"ஹலோ மிஸ் நதியா, முடிச்சிட்டீங்களா? உங்க ஃப்ரெண்ட் மேல நீங்க வெச்சிருக்கிற நம்பிக்கை இவ்வளவுதானா? நான் உங்களை என்னமோன்னு இல்ல நினைச்சேன்.நான் ஒண்ணும் உங்களை லவ் பண்ணலை. நான் லவ் பண்றது உங்க டியர் ஃப்ரெண்ட் சுனிதாவதான். அவ தான் ஊனமா இருக்கிறோம்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையிலேயே இருக்கா. அதனால்தான் யார் கூடவும் சரியா பேச மாட்டேங்குறா. சரி உங்க கூட மட்டும் க்ளோஸா இருக்காளே, என் காதலை உங்க மூலமா அவகிட்ட சொல்லலாம்னு பார்த்தேன். அது மட்டும் இல்லாம, என்னோட காதலை இவ்ளோ க்ளோஸ் ஃபிரண்டான உங்ககிட்ட இத்தனை நாளா சொல்லாம இருக்கோமே அப்படிங்கிற குற்ற உணர்ச்சிலதான் உங்ககிட்ட சொன்னேன். புரியுதா?

சத்தியமா சொல்றேன். பரிதாபப்பட்டு எல்லாம் நான் சுனிதாவை லவ் பண்ணலை. உண்மையிலேயே அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பொண்ணுன்னா அப்படித்தான் இருக்கணும். எப்படியாவது நான் சுனிதா மேல வெச்சிருக்கிற காதலை அவகிட்ட எடுத்து சொல்லி இந்த லெட்டரை குடுத்துடுங்க. இந்தாங்க" என்றபடியே தன் பாக்கெட்டில் இருந்து கடிதத்தை எடுத்து நதியாவிடம் கொடுத்தான் விஷ்ணு.

18 comments:

நிலாப்பெண் said...

ரொம்ப நல்லா இருக்கு. கடைசியில இருக்கிற அந்த டுவிஸ்ட் எதிர்பாராதது. Cool.

தமிழ்ப்பிரியா said...

Super!!!!!!!!!

அனுமாலிகா said...

விஷ்ணு மாதிரியே எல்லோருக்கும் மாப்பிள்ளை கிடைச்சிட்டா நல்லாருக்கும்... ம்ம்ம்ம் நதியா குடுத்து வைக்கலை. சார் கதை கலக்கல்

சுள்ளான் said...

//என்னால் சொல்ல முடிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான். "ஆல் தி பெஸ்ட்".//

Superb டயலாக்.. அசத்தல் கதை.

தென்றல் said...

மணி சார் அந்த விஷ்ணுவும் நதியாவும் உங்க ஃ ப்ரெண்டுதான்னு எனக்கு நல்லாவே தெரியும். விஷ்ணுவை கொஞ்சம் எனக்கு காட்டுறீங்களா?

கவிதை காதலன் said...

தமிழ்பிரியா உங்க வருகைக்கு நன்றி....

கவிதை காதலன் said...

அனுமாலிகா........
கதையில நதியா குடுத்து வைக்கலைன்னு சொல்லுங்க. ஏற்கனவே ஆளவந்தான் சார், ஒரு பிரச்சனையில மாட்டி விட்டுட்டு போயிட்டார். அந்த பிரச்சனையே இப்பத்தான் மெல்ல மெல்ல ஆறிகிட்டு இருக்கு. அதுக்குள்ள நீங்களுமா?

கவிதை காதலன் said...

தேங்க்ஸ் சுள்ளான்..

தென்றல் மேடம், ஆமா நீங்க எதுக்கு விஷ்ணுவை பார்க்கணும்?

தென்றல் said...

எல்லாம் ஒரு நட்பை வளர்த்துக்கத்தான். அவர் அநேகமா உங்க ஆஃபீஸ்லதான் வொர்க் பண்றாருன்னு நினைக்குறேன். Am i right?

Joshi said...

Hi... i like the way used story telling. its different. nice attempt.. cool man...

nadhiya said...

மணி ஏன்டா இப்படி மானத்தை வாங்குற?

என்னாச்சு.. பழைய கமென்ட் எல்லாம் காணோம்?

vincent said...

கதை முடிஞ்சதும் குட்டிப்பையன் சிரிக்கிராமாரி வச்ச போட்டோ சூப்பரா இருக்கு

மயாதி said...

நல்லாருக்கு தல

LawrencE said...

திடீர் திருப்பம்... :o

Kapil said...

very good /என்னால் சொல்ல முடிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான் அசத்தல் அசத்தல் அசத்தல் அசத்தல்

RADAAN MEDIAWORKS INDIA LIMITED said...

Good

sowndarya said...

intha ponungale ippadithan.............sari ah sonninga sir.............

anitha said...

nan appadi ye shock akidan...........mmmmmmmmmmmmm kalakiral pongo.............

இதையும் படியுங்கள்