Tuesday, May 19, 2009

செல்ஃபோன் கொஞ்சல்கள்பொதுவான விசாரிப்புகளோடு
மெதுவாய் துவங்கும்
நம் தொலைபேசி உரையாடல்கள்...

நத்தையின் வேகத்தைப் போல்,
வார்த்தைகள் நகர,
சிறுத்தையின் வேகத்தை போல்,
நிமிடங்கள் நகர,
அர்த்தங்களின்றி பேசிக்கொண்டு இருப்போம்.

உன் புன்னகையை ரசிக்க வேண்டும்
என்பதற்காக ஏதேதோ சொல்வேன் நான்.
புன்னகைப்பதே தெரியாமல் புன்னகைப்பாய்.
அது எப்படி உன்னால் மட்டும் முடிகிறது?
கல் நெஞ்சம்தான் உனக்கு....

எதையாவது சொல்லிவிடுவாய்..
என்னவென்று கேட்டால்
ஒன்றும் இல்லை என்பாய்.
திமிரின் மொத்தமும் நீதான்.

மொட்டை மாடியில் அமர்ந்து
உன்னுடன் பேசிக்கொண்டு இருக்கையில்
என்னுடன் வந்து அமர்ந்து கொள்கிறது நிலா.
நீ பேசுவதை ஒட்டுக்கேட்க...

உன் வார்த்தை கேட்கும் நேரங்களில்
மோட்சம் பெறுகின்றன என் செவிகள்.
என்ன பாவம் செய்தது என் இதழ்கள்?


தனிமையிலே இனிமை காண முடியுமா?
ஏன் முடியாது..
எனக்கு ஒரு செல்ஃபோன் கொடுத்து
செவ்வாய் கிரகத்தில் விட்டுவிட்டால் கூட
இனிமை காண்பேன்.

யார் SMS அனுப்பினாலும்
அது நீயாய் இருக்க கூடாதா
என்றே மனம் அடித்து கொள்கிறது.

நீ அழைக்கையில் மட்டும் ஒலிக்கும் பாடல்,
வந்திருப்பது கால் அல்ல,
காதல் என்று சொல்லிப் போகிறது

உனக்கான ரிங்டோன்,
உனக்கான SMS டோன்,
உன் அழைப்புக்கான புகைப்படம்
என ஒவ்வொன்றாக அலங்கரித்து வைத்திருப்பேன்.

ஆனால் உன்னிடமிருந்து
எதுவுமே வருவதில்லை.
கேட்டால் "காத்திருத்தல் சுகம்' என சொல்வாய்.
அதை "வலி" என்று எப்படி
உனக்கு புரிய வைப்பது?

பீட்ஸா'வுக்காக காத்திருப்பதில்
வேண்டுமானால் சுகம் இருக்கலாம்.
ஆனால் நான் உணவுக்காக காத்திருக்கிறேன்,
அதுவும் பலநாள் பட்டினியுடன்..

என்னுடன் பேசும் நேரங்களில்
இயர் ஃபோன் மாட்டி கொள்ளாதே.
உன் இதழ்களின் அருகாமையை
உணர முடியாமல்
தவிக்கிறது என் மனம்.

அதனால் தான் ஃ போனை
"அருகில் வைத்து பேசு,
அருகில் வைத்து பேசு" என்பேன்.
மற்றபடி ஒன்றுமே கேட்கவில்லை
என்று நான் சொல்வதெல்லாம் பொய்.
அது உனக்கும் தெரியும்..

ஒரு மணி நேரமாய் என்ன பேசினோம்?
அப்புறம்... என்ற வார்த்தையை மட்டும்
ஆயிரம் முறையாவது சொல்லி இருப்போம். ௦௦௦௦௦

நீயாக கொடுப்பாய் என நானும்,
நானாக கொடுப்பேன் என நீயும்,
"அப்புறம் அப்புறம்" என்று வார்த்தைகளை அப்புறப்படுத்தியபடியே பேசிக்கொண்டு இருப்போம்.

கொடுக்காத முத்தத்திற்காக நீயும்,
பெறாத முத்தத்திற்காக நானும்,
தயக்கமுலாம் பூசியபடியே
பேசிக்கொண்டு இருப்போம்.

கடைசிவரை இருவரது
இதழ் சிறைகளில் இருந்தும்
முத்தப்பறவை விடுதலை ஆவதே இல்லை.

ம்ம்ம்ம்ம்.... பார்க்கலாம்...
நமக்குள் நடக்கும் இந்த நாடகம்
எப்போது முடிவுக்கு வருகிறது என்று?

வேண்டாம்.. வேண்டாம்..
அது தொடரட்டுமே
இதுவும்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

18 comments:

saran said...

hi....its gud....anyway too much feelngs.....keep it up.......

nadhiya said...

// யார் SMS அனுப்பினாலும்
அது நீயாய் இருக்க கூடாதா
என்றே மனம் அடித்து கொள்கிறது.//

சத்தியமான வார்த்தை

//நீ அழைக்கையில் மட்டும் ஒலிக்கும் பாடல்,
வந்திருப்பது கால் அல்ல,
காதல் என்று சொல்லிப் போகிறது//

Excellent

மணி ப்ளீஸ்.. எனக்கு மட்டுமாவது சொல்லுடா.. உன் செல்ஃபோனோட அந்த பக்கத்துல யாருன்னு.....

rahul said...

Sir, eppadi ithellaam? chance'a illa... aiyo.. intha kavithaiya padichcha ungala love pannatha ponnu kuuda love pannum.. aiyo super

archana said...

வாவ்... மணி கலக்கிட்டீங்க... நேத்து எத்தனை வாட்டி கேட்டேன். (உங்க மனசுக்குள்ள இருக்கிற அந்த பறவை யாருன்னு) ம்ம்ம்ம்... காதலையும் கர்ப்பத்தையும் ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது. அது உங்களுக்கு புரிஞ்சா சரி..

Anonymous said...

[மொட்டை மாடியில் அமர்ந்து
உன்னுடன் பேசிக்கொண்டு இருக்கையில்
என்னுடன் வந்து அமர்ந்து கொள்கிறது நிலா.
நீ பேசுவதை ஒட்டுக்கேட்க...]

wow!!!something to the core ...very touchy and really superb..keep it up Mr.Mani very gud to see ur creativity through such words. All the best... waiting for lots more poems frm yu..

கவிதை காதலன் said...

thanks charanya

கவிதை காதலன் said...

தேங்க்ஸ் நதியா,

கவிதை காதலன் said...

ஹாய் ராகுல்... உங்க காதலுக்கும் என்னோட வாழ்த்துக்கள். மிக்க நன்றி

கவிதை காதலன் said...

அர்ச்சனா நம்புங்க என் மனசுக்குள்ள அந்த மாதிரி யாரும் இல்ல. நம்புங்க. நான் ரொம்ப நல்லவன். உங்க Gift ரொம்ப நல்லா இருந்தது. தேங்க்ஸ்

கவிதை காதலன் said...

Thannnnnnnks salma...

திகழ்மிளிர் said...

சுவைத்தேன்

kulandhaivelnandhini said...

// தனிமையிலே இனிமை காண முடியுமா?
ஏன் முடியாது..
எனக்கு ஒரு செல்ஃபோன் கொடுத்து
செவ்வாய் கிரகத்தில் விட்டுவிட்டால் கூட
இனிமை காண்பேன். //
மணி நானும் அப்படித்தான் உங்கள் மூளையை ஜெராக்ஸ் எடுக்கணும் போல இருக்கு ...., அருமை

கவிதை காதலன் said...

நன்றி குழந்தை வேல்..

ஆளவந்தான் said...

கடைசியில அந்தப்பறவை உங்க இதழ்ல வந்து அமர்ந்துச்சா இல்லையா? அத சொல்லவே இல்லையே?

கவிதை காதலன் said...

ஆளவந்தான் நான் ரொம்ப நல்லவன்.

மின்சார கண்ணன் said...

// என்னுடன் பேசும் நேரங்களில்
இயர் ஃபோன் மாட்டி கொள்ளாதே.
உன் இதழ்களின் அருகாமையை
உணர முடியாமல்
தவிக்கிறது என் மனம்.//

அடடா.... என்னமா Feel பண்ணி இருக்கீங்க. எனக்கென்னமோ இது அனுபவிச்சு எழுதுனது மாதிரிதான் தெரியுது

கவிதை காதலன் said...

கவிதைகள்ல இதெல்லாம் சாதாரணம் மிஸ்டர் மின்சார கண்ணன். (இப்படி பப்ளிக்கா மாட்டி விடுறது நல்லாவா இருக்கு? )

சுள்ளான் said...

// கொடுக்காத முத்தத்திற்காக நீயும்,
பெறாத முத்தத்திற்காக நானும்,
தயக்கமுலாம் பூசியபடியே
பேசிக்கொண்டு இருப்போம் //

ஐயய்யோ... எங்க வாழ்கையை ஒட்டுக்கேட்ட மாதிரியே இருக்கு. சார்... இதெல்லாம் அனுபவிச்சாதான் வரும். மத்தவங்க கிட்ட விடுர கதைய எங்கிட்ட விடாதீங்க. சொல்லுங்க யார் அவங்க?

இதையும் படியுங்கள்