Monday, May 11, 2009

இலங்கை - எம் தமிழர்களின் சபிக்கப்பட்ட பூமியா?
இலங்கை............ இது தண்ணீரால் சூழப்பட்ட தேசம் என்று பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் தற்போதுதான் உணர்ந்து கொள்கிறேன் இது கண்ணீரால் சூழப்பட்ட தேசம் என்பதை. ஆனால் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் சத்தியமாய் உணர்த்துகின்றன. இது கண்ணீரால் சூழப்பட்ட தேசம் அல்ல, இரத்தத்தால் சூழப்பட்ட தேசம் என்பதை...


ஒரு நாயை துன்புறுத்தினால் கூட அதை கேட்பதற்கென்று ஒரு சட்டம், அமைப்பு, மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கே மனிதக் கூட்டமே கொத்து கொத்தாய் மடிந்து கொண்டிருக்கிறார்களே, இதை கேட்பதற்கு ஏன் யாரும் இல்லை? அதை எதிர்த்து, சக ஜீவனை காப்பாற்ற குரல் கொடுத்தால் அவர்களுக்கு பரிசு தேசிய தடுப்பு சட்டத்தில் சிறைத்தண்டனை. இந்த நாட்டில் மனிதாபிமானம் என்ன மியூஸியத்தில் மட்டும் இருக்க வேண்டிய பொருளா?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றானே பாரதி, அங்கு எம் சகோதர சகோதரிகள், உடைகளின்றி, உணவின்றி, அட இவ்வளவு ஏன் குடிக்க தண்ணீர் கூட இன்றி ஈவு இரக்கமின்றி கொடுமைப் படுத்தப்படுகிறார்களே, இதற்கு நாங்கள் எந்த தேசத்தை அழிப்பது? சொல் பாரதி....

உன் தாயின் நிர்வாணத்தை உன்னால் ரசிக்க முடியுமா? உன் சகோதரியின் நிர்வாண கோலத்தைக்கண்டு உன்னால் கைகட்டி நிற்க முடியுமா? அங்கு எத்தனை சகோதரிகள், எத்தனை தாய்கள், நிர்வாணமாய் நிற்கிறார்கள் தெரியுமா? அவர்களது நிர்வாணத்தை மறைப்பது அவர்களது உடம்பிலிருந்து வழியும் ரத்தம்தான்.


சுதந்திரப் போராட்டத்தைக் கூட நாம் வெள்ளையனுக்கு எதிராகத்தானே நடத்தினோம். ஆனால் எம் சகோதர சகோதரிகளை காப்பாற்ற நம் தேசத்திற்கு எதிராகவே போராட வேண்டிய ஒரு கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உலகிற்கே அஹிம்சை போதித்த நாடு நமது. ஆனால் இன்று.......? இத்தனை உயிர்களை பலி கொடுத்து யார் என்ன சாதிக்க போகிறார்கள்?


இந்த இலங்கைப் பிரச்சனை எம் அரசியல் தலைவர்களை பொறுத்தவரை தேர்தல் சுவற்றிற்கு வெள்ளையடிக்க பயன்படும் சுண்ணாம்புதான்.. வெள்ளையடித்த பின் சுண்ணாம்பு தூக்கி ஓரம் வைக்கப்படும். இலங்கை அரசுக்கு ஒரு யோசனை.. இத்தனை உயிர்களை தவணை முறையில் கொல்வதற்கு பதிலாக, ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசியது போக மிச்சமிருக்கும் அணுகுண்டுகளை அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளிடம் கடன் வாங்கி ஒட்டு மொத்தமாய் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட வேண்டியதுதானே? அதை ஏன் நீங்கள் செய்யவில்லை?


ஓ! எந்த வித அவஸ்தையும் இன்றி எம் தமிழர் செத்துவிடக் கூடாது. ரணவேதனைப்பட்டு, சுக்கு நூறாய் உடல்கள் கிழிந்து, சாக வேண்டும் அப்படித்தானே? கண் முன்னே நம் உறவுகள் மரணமடைந்து நாம் பார்த்திருப்போம். ஆனால் மரணமடைந்த உறவுகளின் கை எது? கால் எது? இடுப்புக்கு கீழே மிச்சம் எங்கே இருக்கிறது என்று யாராவது தேடியிருக்கிறீர்களா?


இலங்கை அரசுக்கு எம் தமிழர்களின் மரண ஓலம், சங்கீதமாய் ஒலிக்கிறது போலும். வெடிகுண்டின் கந்தக வாசனைதான் அங்கு ஆக்சிஜன். இலங்கை ராணுவ வீரர்கள் கழித்த சிறுநீர் கலந்த நீர்தான் எம் மக்களுக்கு தாகம் தீர்க்க பயன்படும் தண்ணீர். அவர்கள் காலடியின் கீழ் நசுக்கப்படுவது எம் மக்கள் மட்டும் அல்ல. நம் இந்திய தேசத்தின் மானமும்தான்.நிர்வாணமாய் கதறலுடன் ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான் வியட்நாம் போரையே நிறுத்திற்று. இந்தப் போரை நிறுத்த வேண்டுமானால் எத்தனை சிறுமிகளின் கதறலை பதிவு செய்து அனுப்ப வேண்டும் சொல்லுங்கள். அனுப்புகிறோம். அப்போது கூட உங்கள் கண்கள் அவர்களின் நிர்வாணத்தை தானே ரசிக்கும்? கருணை, அன்பு, பாசம், மனிதாபிமானம், இரக்கம், தயவுசெய்து இந்த வார்த்தைகளை இந்திய மொழிகளில் இருந்தே அழித்து விடுங்கள். நமக்கு இதை எல்லாம் உச்சரிக்க துளியும் தகுதி இல்லை.


அட..... அங்கே அழிந்து கொண்டிருக்கும் எம் மக்களை உடனே ஓடி சென்று காப்பாற்றுவோம் என்று நான் சொல்லவில்லை. அவர்களின் வேதனைகளை, ரணங்களை பதிவு செய்ய கூட நாம் தயங்குகிறோமே, இது நம் நாகரீகத்தின், வளர்ச்சியின், மீது நாமே காறி உமிழ்ந்து கொள்வது போல் அல்லவா இருக்கிறது? அடுத்தவன் வீடு தீப்பற்றி எறிந்தால் நமக்கென்ன? நம் வீடு தீப்பற்றாமல் இருக்க நம்மிடம் இருக்கும் தண்ணீரை வைத்து, நம் வீட்டை மட்டும் ஈரமாய் வைத்துக் கொள்வோம். அதுதானே நாம்...


ஆண்களே இதைப்பற்றி பேசுவதற்கு அஞ்சி நடுங்கும் இந்த நேரத்தில், ஒரு பெண்ணாய் இருந்து, எதற்கும் பயப்படாமல் அத்தனை ஊடகங்களுக்கு மத்தியில் தன கருத்தை பதிவு செய்த கவிஞர் தாமரைக்கு தலை வணங்குகிறோம். புலி, சிங்கம், யானை, குதிரை, கரடி, சிறுத்தை, என புகழ்ச்சிக்காக பட்டப்பெயர் போட்டுக்கொள்ளும் தன்மானசிங்கங்களே இந்த பெண்ணை பாருங்கள். உங்கள் அலங்கார ஆடைகளை அறுத்து எறியுங்கள். அங்கிருக்கும் ஒட்டு மொத்த தமிழர்களும் இலங்கை இராணுவத்தால் மொத்தமாய் அழிந்து தொலைக்கட்டும், அதுவரை நாம் திரிஷாக்களின் அரைகுறை நடனங்களையும், புரட்சி நாயகர்களின் அலம்பல் பேட்டிகளையும், டோனிக்களின் சிக்சர்களையும் கண்டு உள்ளம் மகிழ்ந்து களித்திருப்போம்.


(இலங்கை தமிழர்களின் ரணங்களை பதிவு செய்ய என்னை தூண்டிய என் சகோதரி திருமதி விஜி அவர்களுக்கு என் நன்றிகள்)

8 comments:

nadhiya said...

// இந்த நாட்டில் மனிதாபிமானம் என்ன
மியூஸியத்தில் மட்டும் இருக்க வேண்டிய பொருளா? //

''அவர்களது நிர்வாணத்தை மறைப்பது அவர்களது
உடம்பிலிருந்து வழியும் ரத்தம்தான்.//

// அவர்கள் காலடியின் கீழ் நசுக்கப்படுவது
எம் மக்கள் மட்டும் அல்ல.
நம் இந்திய தேசத்தின் மானமும்தான் //

மணி.... என்ன சொல்றதுன்னே தெரியலைடா.
உன் வார்த்தை பிரயோகம் அவங்களோட வலியை கண்முன்னாடி
உணர வைக்குது... படிக்கும் போதே உயிரை அறுக்கிற மாதிரி ஒரு Feel.
(மணி அந்த படங்களை பார்க்க முடியலைடா. அழுகையா வருது)
இப்படி ஒரு கட்டுரையை உன்னை எழுத வெச்ச விஜி
அவங்களுக்கு என்னோட சல்யூட்..

Anonymous said...

Am speechless ya... wow!! am puzzled and questioning myself?? It takes a great deal to post such views.. "HATS OFF" Mr.Mani.. And an applause to Mrs. Viji who has appreciated yu to write tis...

கவிதை காதலன் said...

// Am speechless ya... wow!! am puzzled and questioning myself?? It takes a great deal to post such views.. "HATS OFF" Mr.Mani.. And an applause to Mrs. Viji who has appreciated yu to write tis... //


Thanks salma... All the credits goes to only our Vijji akka..

Suresh said...

:-( அப்பா சாமி உங்க பதிவு உண்மையை வலியோடு எடுத்து சொல்லி இருக்கு..

தொடர்ந்து எழுதுங்கள் நண்பா

கவிதை காதலன் said...

நன்றி சுரேஷ்...

sumi said...

சொல்றதுக்கு வார்த்தைகளே கெடையாது. ஒவ் ஒரு வார்த்தைகளும் படிக்கும் போதே எவ்ளோ கஷ்டமா இருக்கு..அங்க அனுபவிக்கிற களுக்கு..!

உங்களுடைய முயைச்சிகு எனது வாழ்த்துக்கள்... உங்களுக்கு பக்க பலமா இருக்கும் விஜி மேம் அவங்களுக்கு நன்றி....

Anonymous said...

veedum emathillai..........
nadu emathilley....
mozhi sugathiram emakkiley......
unna unavilley,udupilley........
kanda edamellam...... sorgamam......
emagetherkku vazhkkai endral.......
uyirum emathillai........avanae piretheduppan..........
endru thaniyum entha ezha adimaiye thagam..........

ivan
---> dinesh ravikumar

Anonymous said...

veedum emathillai..........
nadu emathilley....
mozhi sugathiram emakkiley......
unna unavilley,udupilley........
kanda edamellam...... sorgamam......
emagetherkku vazhkkai endral.......
uyirum emathillai........avanae piretheduppan..........
endru thaniyum entha ezha adimaiye thagam..........

ivan
---> dinesh ravikumar

இதையும் படியுங்கள்