Friday, May 8, 2009

காதலிப்பது எப்படி?


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...படிச்சிட்டீங்க.... பிடிச்சிருந்தா உங்க ஓட்டை போடுங்க.. பிடிக்கலன்னாலும் ஓட்டு போடுங்க.. நீங்க ஓட்டு போட்டா மட்டும் போதும்... என்ன கமெண்ட்'ன்னாலும் அனுப்புங்க....

28 comments:

nadhiya said...
This comment has been removed by the author.
nadhiya said...

அடப்பாவி... இப்படித்தான் நீ
பொண்ணுங்களை ஏமாத்துறியா?
Anyway நல்லா இருந்துச்சு
அதுவும் மியுசிக் வேர்ல்ட்'க்கு
ஐடியா கலக்கல்...

mano said...

// காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க) ///
hahahahha.... :D :))))))

Anonymous said...

Its nice :) but still too much...

கவிதை காதலன் said...

//Its nice :) but still too much...//

என்ன பண்றது மேடம்?
உண்மைய சொன்னா
பொண்ணுங்களுக்கு கோபம் வருதா?

கவிதை காதலன் said...

//hahahahha.... :D :))))))//
என்ன மனோ சிரிக்கறீங்க?
நான் சொன்னது கரெக்ட் தானே?

கவிதை காதலன் said...

// அடப்பாவி... இப்படித்தான் நீ
பொண்ணுங்களை ஏமாத்துறியா?
Anyway நல்லா இருந்துச்சு
அதுவும் மியுசிக் வேர்ல்ட்'க்கு
ஐடியா கலக்கல்... //

Thank you நதியா.. ஆனா நான் இப்படி ஏமாத்துல... அங்க இங்கன்னு பார்த்து பழகின அனுபவங்கள்தான்

பிரியமுடன்.........வசந்த் said...

//குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.//

என்ன கலர்ன்னு சொல்லல

கவிதை காதலன் said...

//என்ன கலர்ன்னு சொல்லல//

கண்றாவிய என்ன கலர் இருந்தாலும் o.k. தான்.

Anonymous said...

romba lollu than ya ungaluku..

its really nice... :-)

wishes.

கவிதை காதலன் said...

தேங்க்ஸ் சஞ்சனா... என்ன பண்றது வயசு அப்படி

Anonymous said...

யப்பா சிரிக்க முடியலை....உண்மைத்தான் ஆனால் எல்லாரும் அப்படி இல்லை அடுத்த பதிவு என்ன? காதல் மன்னிகளா?

கவிதை காதலன் said...

// யப்பா சிரிக்க முடியலை....உண்மைத்தான் ஆனால் எல்லாரும் அப்படி இல்லை அடுத்த பதிவு என்ன? காதல் மன்னிகளா?
//
தேங்க்ஸ் தமிழரசி
ம்ம்ம்ம்ம்... நீங்க ஆதரவு கொடுத்தா கண்டிப்பா காதல் மன்னிகளும் வரும்.

KRICONS said...

கலக்குரிங்க...

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துகள்

விக்னேஷ்வரி said...

இது ஐடியா பதிவா, காமெடி பதிவா...
காதல் மன்னன் பேர் என்ன நாய் சேகரா.. ;)

கவிதை காதலன் said...

KRICONS
ரொம்ப தேங்க்ஸ்

கவிதை காதலன் said...

//இது ஐடியா பதிவா, காமெடி பதிவா...
காதல் மன்னன் பேர் என்ன நாய் சேகரா.. ;) //

என்ன பட்ட பேர் கிடைச்சாலும் சரி
நம்ம பசங்களுக்கு இந்த மேட்டர்
ஒர்க் அவுட் ஆனா சரி

sumi said...

hahahaha.. very nice of u..and very funny..
keep it up:-)

saran said...

Its really superb....//முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்//....dis one s really true pa....nowdays many of dem are wearing lik dis nly...gud one....

மின்சார கண்ணன் said...

ஏன் சார்... இதெல்லாம் பசங்களுக்கு மட்டும்தானா? பொண்ணுங்க பண்ற அட்டூழியத்தை பத்தியும் எழுதுங்க. பாவம் சார் பசங்க.

Thoorigai - Pandiyarajan said...

நெஞ்சை தொட்டுட்டீங்க நண்பா....நானும் இந்த மாதிரி நிறைய பசங்கள பார்த்திருக்கேன்.... அடுத்தடுத்த பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

அப்பாகிட்ட கெட்டவார்த்தைல திட்டுவாங்கியாவது ஒரு bike வாங்கனுங்கறது what a point sir.bike இருந்தாதான் பொன்னுங்க காதலிப்பாங்களோ.

sathish said...

முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க

highlight idhu dhan sir..
but unmayana love ku idhu edhuvume theva illa u know that..
anyway its nice..

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. சூப்பரா கலாய்ச்சிருக்கீங்க.. எல்லாம் பாயிண்டும் சூப்பர்..

Saravanaa said...

Unmai than. Idhellam time pass love'Ku vena udhavum. Sincere love success agara madhiri nalla idea kodunga boss.

Seethasri said...

ithu ellam sariyilla paathu kadhal mannarkala uruvakkunga. kadhal, mannarkala uruvaka idea romba nallarku. ponnungala onnume theriyathavanganu nenaichitingla .... intha idea follow panna kandipa appu machi. nallarthathu sir. thank you... kathal mannikala uruvakka valthukal mani sir..

DX jan said...

நீ லாம் நல்லா வருவடா...

சரண்யா said...

nala iruku unga post ellam......rasichu padichen..keep it up

இதையும் படியுங்கள்