Saturday, May 9, 2009

தொடர்வண்டி சில்மிஷங்கள்


பயணிகளின் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 1028, சென்னையிலிருந்து மும்பை வரை செல்லும் மும்பை மெயில் 10வது பிளாட்ஃபாரத்திலிருந்து பத்து மணி ஐம்பத்து நிமிடங்களுக்கு புறப்பட உள்ளது. யாத்ரீகன்ட் க்ருப்யா.... என்று கணிப்பொறி குரல் தமிழிலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் கிளிப்பிள்ளையாய் ஒப்பித்துக் கொண்டு இருந்தது. வழக்கத்தைவிட சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அன்று பரபரப்பாய் காணப்பட்டது. தொடர் வண்டிகள், பயணிகளை துப்பிவிட்டு களைப்பாறிக் கொண்டிருந்தன.


ஜீவனின் கண்கள் யாரையோ தேடிக்கொண்டு இருந்தன. இன்னும் சில நிமிடங்களில் நாம் ஜீவனின் கண்கள் வழியாகத்தான் இந்தக் கதையில் பயணிக்க போகிறோம். ஒவ்வொரு கோச்சாக ஜீவன் யாரையோ தேடிக்கொண்டு இருக்க, நாமும் கூட சேர்ந்து பார்க்கலாம்.

S 1 கோச் : (ஒரு அம்மா தன் மகனிடம்) ரகு, பாம்பே போய் இறங்குன உடனே ஃபோன் பண்ணு, மொதல்ல நல்லபடியா வேலையில ஜாயின் பண்ணு. தங்கச்சி கல்யாணத்தை பத்தியே கவலைப் பட்டு நீ உன் உடம்பை கெடுத்துக்காத. நல்லா சாப்பிடு. சரியா? கடவுள் இருக்காரு. எல்லாம் நல்லபடியா நடக்கும்.

S2 கோச் : ஏங்க! இன்னும் ரெண்டு நாள்'ல எனக்கு பிரசவம். பிரசவ சமயத்துல கூட பொண்டாட்டி கூட இருக்காம உங்களுக்கு அப்படி என்னங்க ஆஃபீஸ் வேலை முக்கியம்? செல்லம் இல்ல.. புரிஞ்சுக்கடா குட்டி.. நாலு நாள்தான். பல்லை கடிச்சுகிட்டு பொறுத்துக்கோ. பொறக்கப்போற என் சிங்ககுட்டிக்கு நான் நான் என்ன வாங்கிட்டு வர்றேன் பார்.


ஜீவனின் அடுத்த தேடல்
S3 கோச் : (ஒரு காதலி காதலனிடம்) ராஜ், நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. எப்படியாவது பாம்பே'ல இருந்து திரும்பி வரும்போது ஒரு நல்ல முடிவோட வாங்க. எங்க வீட்ல இதுக்கு மேல என்னால மறைக்க முடியாது. 4 மாசம். வயிறு இப்பவே வெளியில தெரியுற மாதிரி இருக்கு. சீக்கிரமா நம்ம கல்யாணம் நடந்தே ஆகணும்....


S4 கோச் : (ஒரு அப்பா தன் மகனிடம்) நந்து, அம்மாவை பத்திரமா பாத்துக்க, இந்த பேக்ல அம்மாவோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்' எல்லாமே இருக்கு. டாக்டர் கிட்ட காட்டு, ஆபரேஷனுக்கு டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு எனக்கு ஃபோன் பண்ணு. நான் உடனே கிளம்பி வர்றேன். சரியா?


தான் தேடும் ஆள் கிடைக்கவில்லை என்ற சலிப்பு ஜீவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.


S5 கோச்: (ஒரு தோழி) ஹரிணி, எத்தனை நாள்டி உனக்கு பிரசண்டேஷன்? ரெண்டி நாள். ஐயோ பாவம்டி நீ? ஏன் அப்படி சொல்ற? பின்ன.. போக ரெண்டு நாள், வர ரெண்டு நாள், அங்க தங்கறது ரெண்டு நாள், ஒரு வாரம் எப்படிடி அரவிந்தை பார்க்காம இருக்க போற? ஏய், லூசு வாய மூடு. பக்கத்துல மேம் இருக்காங்க...


ஜீவன் அடுத்த பெட்டியில் யாரையோ தேடிக்கொண்டு இருந்தான்.


S6 கோச் : பெட்டியை எடுத்து மேலே வைக்கும் தன் மனைவியை யாரும் பார்க்காத அந்த ஒரு நொடியில் இழுத்து... தன் இதழ்களின் வலிமையை அவள் இதழ்களுக்கு புரிய வைத்தான் விஷ்வா. ஏங்க விடுங்க.. வெளிய அத்தை, மாமா எல்லாம் இருக்காங்க. இருக்கட்டுமே.. புதுப் பொண்டாட்டிய பத்து நாள் பிரிஞ்சு போற கஷ்டம் எனக்கு தாண்டி தெரியும்.. ஆமா இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை.

S7 கோச் : தாத்தா டாட்டா பாட்டி டாட்டா...புஜ்ஜி அப்பா அம்மா பேச்சை கேட்டு சமர்த்தா நடந்துக்கணும். சரியா? தாத்தாக்கு அடுத்த வாட்டி வரும்போது என்னம்மா வாங்கிட்டு வருவ? இந்த பாட்டிக்கு பதிலா வேற நல்ல பாட்டி வாங்கி உனக்கு தர்றேன்.ஆஹா சீக்கிரம் வாங்கிட்டு வாம்மா


S8 கோச்: என்னடா மச்சி நாளைக்கு தான் கிளம்பறேன்னு சொன்னே... இன்னைக்கே கிளம்பிட்ட? இல்லடா மாப்பிள்ளை, வெள்ளிக்கிழமைக்குள்ள நான் பணத்தை வாங்கிட்டு வந்தாதான் மத்தவங்களுக்கு பணத்தை செட்டில் பண்ண முடியும்.இல்லாட்டி என் வீடு ஏலத்துக்கு வந்திடும். பொண்டாட்டி புள்ளையோட போய் நான் எங்கடா நிக்கறது? அதான் இன்னைக்கே கிளம்பிட்டேன்.

வண்டி மெதுவாய் மரவட்டையை போல் நகரத்தொடங்கியது.. இன்னும் ஜீவன் தேடிய ஆள் கிடைக்கவில்லை. அந்த வருத்தத்திலேயே சோகமாய் நிற்கும் ஜீவனின் முகத்தில் பிரகாசம்.. அங்கிருந்த பிளாட்ஃபாரத்தின் ஓரத்தில் சென்று பார்க்க, அங்கு பாதிதின்று வீசப்பட்ட ஒரு தோசை கிடக்க, மிக சந்தோஷத்துடன் அதை மோர்ந்து பார்த்துவிட்டு தின்ன தொடங்கியது அந்த ஜீவன்.


பக்கத்தில் ஒரு குரல்... ஹலோ.. நான்தான்.. முணு கோச்'ல ஃபிக்ஸ் பண்ணிட்டேன். பெரம்பூர்ல இன்னும் கொஞ்சம் பேர் ஏறுவாங்க.. பெரம்பூர்ல இருந்து கிளம்பி போன ஒரு அரைமணி நேரத்துல ட்ரெயின் சுக்கு நூறா சிதறிடும். ஒருத்தன் உடம்பை கூட முழுசா கண்டுபிடிக்க முடியாது.


ஜீவன்: ஐயய்யோ... எனக்கு இவன் பேசறது நல்லா கேக்குது... நான் இதை யார்கிட்ட சொல்றது?????

நீங்கள் இதை படித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், இந்த பாம்பே மெயில் பெரம்பூரை கடந்து 25 நிமிடங்கள் ஆஆஆகி................................

9 comments:

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

nadhiya said...

வாவ். ரொம்ப நல்லா இருக்கு.. நான் ஜீவனை ஒரு ஆள்னு நினைச்சுகிட்டு இருந்தேன். நாயை ஒரு மனுஷன் போல நினைக்க வெச்ச அந்த திங்கிங் Excellent. ஆமா அதுவும் ஒரு ஜீவன்தான்னு கடைசியில யோசிக்க வெச்சிட்டே. Superb.
ஆனா இவ்ளோ நல்ல கதைக்கு இப்படி ஒரு டைட்டில் எனக்கு பிடிக்கலை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

superb !!! really interesting i guessed it wud b a dog..it dint go wrong :) amazin Mr.Mani keep on postin ur poems.. i agree with the above persons commment tat ur tiltle doesn't suit properly to such a wonderful idea... hence try to keep something else all d best :)

கவிதை காதலன் said...

ஃப்ரெண்ட்ஸ்...
சில்மிஷம்'ங்கிறது காமத்தோட கண்ணோட்டமா
நான் குறிப்பிடலை. சில தீவிரவாத அமைப்புகளோட
செயல்பாடுகளைத்தான் குறிப்பிடுது.

மின்சார கண்ணன் said...

adஉண்மையிலேயே "அட" போட வைக்கும் கதைதான்.. நான் குஉட டைட்டிலை பார்த்த உடனே ஏதோ கில்மா கதையா இருக்கும்னு பார்த்தேன். ஆனா அதைவிட சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க. ஜீவன் கேரக்டர் கலக்கல்.

r said...

Nalla kathai superb.

henry J said...

roma nalla iruku kavithaikal. puthithai internet use panravangaluku useuful irukatumnu oru web blog create paniruke. time irundha konjam paarungo... go go simplygetit.blogspot.com


Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free... Click here

Nisha Prince said...

அருமையான கதை.

இதையும் படியுங்கள்