Wednesday, April 29, 2009

ஷாலினி என்றொரு தேவதை


ஷாலினி என்றொரு தேவதை
தமிழ் சினிமாவில் அபூர்வமாகத்தான் "நடிக்க" தெரிந்த கதாநாயகிகளின் வருகை நிகழும். சுகாசினி, ரேவதி, போன்ற திறமைசாலிகளை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகையாக அறிமுகமானவர்தான் ஷாலினி. சிறு வயதிலேயே ஏகப்பட்ட படங்களில் நடித்து பல விருதுகளையும் வாங்கி குவித்ததாலயோ என்னவோ, கதாநாயகியாக நடிப்பது என்பது இவருக்கு மிக எளிதாய் போயிற்று. கவர்ச்சியா கிலோ என்னவிலை என்று கேட்ட நடிகைகளில் ஷாலினிக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு. கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான காதலுக்கு மரியாதை படத்திலேயே அத்தனை ரசிகர்களையும் தன்வசம் வசியம் செய்த பெருமை இவருக்கு இருக்கு.காதலுக்கு மரியாதை படத்தில விஜய்கிட்ட ஷாலினி ஒரு ஒரு டயலாக் சொல்லுவாங்க. "நான் எங்க குடும்பத்தோட குத்துவிளக்கு" அப்படின்னு... அது உண்மைதான் . முகத்தை சுளிக்க வைக்குற மாதிரி எந்த ஒரு சந்தர்ப்பத்துலேயும் நடிக்காததுனாலதான் அத்தனை பேரோட மனசுலேயும் ஷாலினி ஒரு குத்துவிளக்கா இருந்தாங்க. காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும்'ன்னு வெறும் அஞ்சே அஞ்சு படத்துல நடிச்சு, அத்தனை பேரோட மனசையும் கொள்ளையடிச்ச அழகான ராட்சசி. ஷாலினி ஒண்ணும் பேரழகியோ, கவர்ச்சிக் கன்னியோ கிடையாது.


ஆனாலும் ஆளை அடிக்கிற சிரிப்பும், குறும்பு பார்வையும் அத்தனை ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துச்சி அப்படிங்கிறது மட்டும் மறுக்க முடியாத உண்மை. பிரியாத வரம் வேண்டும் படத்துல குறும்புத்தனத்தோட உச்சத்தை தொட்டு இருப்பாங்க. அதுவும் க்ளைமேக்ஸ்ல பிரசாந்தை தலைகாணியால அடிச்சிக்கிட்டு அழுகிற சீன்'ல ஷாலினி பின்னி எடுத்திருப்பாங்க. மறக்க முடியாத சீன் அது. இதுல என்னால இதுவரைக்கும் நம்ப முடியாத விஷயம் என்னன்னா, (யாரும் அதிர்ச்சியில நெஞ்சை பிடிச்சிக்காதிங்க) இவ்ளோ மென்மையான படத்துக்கு டயலாக் "பேரரசு".


கண்ணுக்குள் நிலவு'ங்கிற மொக்கை படத்தை விமர்சனம் பண்ணும் போது கூட (விகடன்னு'ன்னு நினைக்குறேன்) ஷாலினி இருக்கிறதுனால ஏதோ ஓரளவுக்கு தப்பிக்க முடியுதுன்னு எழுதி இருந்தாங்க. ஷாலினியை நீங்க முழுசா ரசிச்சு பார்க்கனும்ன்னா அதுக்கு ஒரே படம்தான் இருக்கு. அதுதான் அலைபாயுதே. யெஸ்... இந்த ஒரு படத்துலதான் ஷாலினி தன்னோட சொந்த குரல்ல பேசி நடிச்சிருந்தாங்க. அதுக்கு காரணம் டைரக்டர் மணிரத்னம். கண்ணாலயே பேசறதும், நடிப்புங்கிறதே தெரியாத நடிப்பும் ஷாலினிக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டா அமைஞ்சது. அதுமட்டும் இல்லாம எவனோ ஒருவன் பாட்டும் அதை தொடர்ந்து வர்ற மாதவன் ஷாலினியோட காதல் காட்சிகளும் தமிழ் சினிமா இதுவரை பார்க்காதது.

கண்ணாலயே பேசறதுன்னு கேள்வி பட்டு இருப்போம், அதை Exact'a தெரிஞ்சுக்கணும்'ன்னா க்ளைமேக்ஸ்'ல ஷாலினியோட நடிப்பைப் பார்த்தா போதும். ஆபரேஷன் முடிஞ்சு கண்ணை திறக்கறதுக்கு முன்னாடி இமை மூடிதான் இருக்கும். உள்ளுக்குள்ள இருக்கிற கருவிழி மட்டும் ரெண்டு பக்கமும் அலைபாஞ்சுகிட்டு இருக்கும். வாவ்.. பி.சி ஸ்ரீராமோட கேமரா இந்த ஷாட்'ல விளையாடி இருக்கும்.


கார்த்திக் நீ க்ளாஸ்'லியே லாஸ்ட்டா? பணக்கார பையனா? அப்படின்னு மாதவனை கலாய்கிறதும், டேய் குத்துதுன்னு நீதானடா தாலிய கழட்டி வெச்சேன்னு ரொமான்ஸ் பண்றது, சண்டை போட்டுட்டு காலண்டர்ல குறிச்சு வெக்கறது, என்னை ஏன் அமமா வீட்டை விட்டு போக விட்டீங்கன்னு பாசத்துல உருகுகிறது, செப்டம்பர் மாதம் பாட்டுல மனசுக்குள்ள சோகத்தை வெச்சுகிட்டு வெளிய இயல்பா பாடுறது, இப்படி காதல், ரொமான்ஸ், பாசம், ஏக்கம், சோகம்ன்னு எல்லா உணர்ச்சிகளையும் ரொம்ப அழகா வெளிப்படுத்தி இருப்பாங்க. ஐத்தலக்கா கும்த்தலக்கான்னு நடிக்கிற சில நடிகைகளுக்கு மத்தியில, குளிக்கிற மாதிரி ஒரு சீன் எடுக்கணும்ன்னு சொன்ன மணிரத்னத்துக்கே NO ன்னு சொன்ன ஒரே நடிகை ஷாலினிதான். இப்படி ஒரு தைரியம் ஏன் மத்த நடிகைங்களுக்கு வரலைன்னு சுகாசினியே ஒரு இண்டர்வியூல சொல்லி இருக்காங்க. நடிச்ச படங்களோட Quantity கம்மின்னாலும் அவங்க நடிப்போட Quality அதிகம். இப்படி எல்லா விதத்துலேயும் டெடிகேடட் ஆர்ட்டிஸ்டை தமிழ் சினிமாவுல இருந்து பிரிச்சு கூட்டிட்டு போன அஜித்க்கு, ஷாலினி ரசிகர்கள் சார்பா ஒரு கருப்பு ரோஜா.


Tamilish

11 comments:

KISHORE said...

really great lovable actress

Anonymous said...

//Kannala Pesuradhu...
Appadiye vali moligiren...Krish

BALAMURUGANMANIVANNAN said...

நுற்றில் ஒரு வார்தை அண்ணா.

ஷாஜி said...

//இப்படி எல்லா விதத்துலேயும் டெடிகேடட் ஆர்ட்டிஸ்டை தமிழ் சினிமாவுல இருந்து பிரிச்சு கூட்டிட்டு போன அஜித்க்கு, ஷாலினி ரசிகர்கள் சார்பா ஒரு கருப்பு ரோஜா.//

--If he not taken her; current tamil cinema trend would have changed shalini as a glamour doll.

Mehala said...

Yes..she is my altime favourate actress. Her eyes speak all. realistic acting...She is great in all aspects..Love you shaalu

malar said...

//வணக்கம்
என் இனிய நண்பர்களே
இது என் முதல் முயற்சி...
நிச்சயமாய் உங்கள் ஆதரவு எனக்கும் வேண்டும்///

வெற்றி பெற வாழ்த்துக்கள்

செந்தில்குமார் said...

உண்மை... 'நடிக்கத்தெரிந்த நடிகைகளில்' இவரும் ஒருவர் !

கவர்ச்சிய மட்டும் நம்பாம நடிச்சு ரசிகர்கள் மனசுல இடம் பிடிச்ச நடிகை !

மதுரை மணியன் said...

நானும் வழிமொழிகிறேன்...
ஆனால், அஜித் தான் நடிப்புக்குத் தடை போடுறார்னு எனக்குத் தெரியல...
இது ஷாலினியின் "காதலுக்கு மரியாதையாக்" கூட இருக்கலாம்..("நான் எங்க குடும்பத்தோட குத்துவிளக்கு")
ஆக மொத்தம், தமிழ் சினிமாவும், ரசிகர், ரசிகைகளும் குடுத்துவைக்கல..
குறிப்பு: நான் அஜித் விசிறி இல்லை...

கவிதை காதலன் said...

//நுற்றில் ஒரு வார்தை அண்ணா.//
நன்றி பாலமுருகன்

கவிதை காதலன் said...

// ஆக மொத்தம், தமிழ் சினிமாவும், ரசிகர், ரசிகைகளும் குடுத்துவைக்கல..//

கண்டிப்பா.... ஷாலினி நடிப்பை விட்டுட்டு போனது
தமிழ் சினிமாவுக்கு ஒரு இழப்புதான்...

கவிதை காதலன் said...

//உண்மை... 'நடிக்கத்தெரிந்த நடிகைகளில்' இவரும் ஒருவர் !

கவர்ச்சிய மட்டும் நம்பாம நடிச்சு ரசிகர்கள் மனசுல இடம் பிடிச்ச நடிகை !//


ஆமா செந்தில் குமார்
நடிப்பை மட்டுமே "காட்டின" ஒரு நல்ல நடிகை

இதையும் படியுங்கள்