சேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு சேனல்கள் மிக அழகாக தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு விடுவார்கள். மக்களுக்கும் அடுத்தவர்கள் அடித்துக் கொள்வதை பார்ப்பதில் ஒரு அற்ப சந்தோஷம். (ஹி..ஹி..எனக்கும்தான்) சிம்பு-பிரித்விராஜ், சிம்ரன்-விஜய் ஆதிராஜ் என்று பல கூத்துக்களை நாம் கண்டு களித்திருக்கிறோம். அது ஒரிஜினல் நிகழ்ச்சிகளா இல்லை செட்டப்பா என்று இன்னும் பல விவாதங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் தாத்தா ஒருத்தர் இருக்கிறார். தெரியுமா? யாகவா முனிவரும் சிவசங்கரபாவும் ஒரு முறை தொலைக்காட்சியில் அடித்துக்கொண்டார்களே. அதைத்தான் சொன்னேன். இது போன்ற ஸ்க்ரீன் அடிதடிக்கெல்லாம் அதுதான் முன்னோடி..
சிம்புவின் படங்களை யூ டியூபில் அதிகம் பார்த்த்தைவிட, ”எனக்கு நடிக்க தெரியாதுய்யா” என்ற க்ளிப்பிங்கைத்தான் அதிகம் பேர் பார்த்திருப்பார்கள். இதையெல்லாம் ஒளிபரப்பித்தான் ஆக வேண்டுமா என்றால், நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு இதில் ஒரு அட்வான்டேஜ் இருக்கிறது. சாதாரணமாக இந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு 3 பாயிண்ட் டி.ஆர்.பி இருக்கிறது என்றால், இது போன்ற சர்சைக்குரிய விஷயங்கள் வரும் போது டி,ஆர்,பி. தாராளமாக 5 பாயிண்டுகள் வரை உயரும். இது சேனலுக்கும் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் வருவாயை ஈட்டிக்கொடுக்கும். அதனால்தான் இது போன்ற சண்டைகளையும் சச்சரவுகளையும் ஊக்குவிக்கிறார்கள் சேனலுக்கும் நிகழ்ச்சி நடத்துபவர்கள். மக்களும் அந்த எபிசோடுக்கான புரோமோவை பார்த்த்தில் இருந்து அந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள்.
இதோ அது போல ஒரு எபிசோட்.
சமீபத்தில் இதே ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் போட்டியில் கலந்து கொண்ட ஒரு நபரின் நடனமாடும் திறமை பற்றி சில கருத்துக்களை கூற, அந்த நபரோ ரம்யாகிருஷ்ணனின் பேச்சில் டென்ஷனாகிவிட்டார். அவரும் ரம்யா கிருஷ்ணனும் மாறி மாறி சில கருத்துக்களை கூறிக்கொண்டே இருந்தனர். அந்த போட்டியாளர் யாருடைய கருத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அவர் நின்று கொண்டிருந்த விதமும், பேசிய டோனும் எல்லாருக்கும் நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கும்.. அதிலும் அவர் “This is not my cup of Tea” என்று சொன்னது செம ஆட்டிட்டியூட்.. அவர் So என்று கேட்ட உடனே ரம்யாகிருஷ்ணன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். ஆனால் அடுத்த நொடியே அவர் டிவி என்பதை உணர்ந்து சுதாரித்துக்கொண்டார் ஆனால் கடைசிவரை அந்த போட்டியாளர் தன் முடிவிலேயே உறுதியாக இருந்தார். சில சமயங்களில் போரடிக்கும் அந்த நிகழ்ச்சி, இந்த எபிசோடில் கொஞ்சம் களைகட்டியது.. பாருங்கள்...
இந்தப்பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்


